என்னை மன்னித்து விடுங்கள் என்றவளே..!
எத்தனை முறை மன்னிக்க வேண்டும்..?
என்னைப் புரிந்து கொள்ளுங்கள் என்றவளே...!
எவ்வளவுத் தூரம் புரிதல் வேண்டும்..?
என்னை பிரிந்து விடுங்கள் என்றவளே..!
எத்தனைக் காலம் பிரிய வேண்டும்..?
என்னை மறந்து விடுங்கள் என்றவளே...!
எத்தனை பிறவிக்கு மறக்க வேண்டும்..?
என்னை எதிர்ப் பார்க்காதீர்கள் என்றவளே..!
எவளை எதிர்ப்பார்க்க வேண்டும் என்கிறாய்..?
என்னை விட்டு விடுங்கள் என்றவளே..!
எப்போது உன்னை அடைத்து வைத்தேன்..?
இத்தனையும் சொல்லத் தெரிந்த என்னவளே
என்னை மணந்துக் கொள்ளுங்கள் என
எப்போது சொல்வாய்....???
உன்னை எண்ணி எண்ணி விம்மும்
ஆழ்மனதுக்கு ஆறுதல் சொல்ல வேண்டாம்.
இன்னும் ஏதேனும் மிச்சமிருந்தால் சொல்...
துடிக்கும் இதயம் நிறுத்தும் வரை
உனக்காக உயிரை வதைக்கிறேன்,- எனக்காக
எதுவும் கேட்கப் போவதில்லை உன்னிடம்.
காலத்தின் முன் கேள்வியாய் நிற்பவன்
பதிலைத் தேடி அலைந்தென்ன பயன்..??
பட்டை உடுத்தி பந்தலில் அமரும்
பக்குவம் உள்ளவள் நீ,- மறந்துவிடாதே
பத்திரமாயிருக்கும் என் நினைவுகளை அழிக்க.
பத்தரை மாற்றுத் தங்கம் நீ.
பவித்திரம் பாதுகாக்க என்னை உன்மனப்
பரணில் ஏற்றி வை,- தூசுப்
படியும் என்னை தும்ம விடாதே..!
பாசக் கவிதைகள் பறந்து வரும்.
நேசத்தை நெருஞ்சி முள்ளாய் நினைப்பவள்
உனக்கெப்படிப் புரியும் உயிரின் வதை..?
இமைகளை மூடி இதயம் நசுக்குகிறாய்
விழிகளை திறந்து விடியல்கள் பொசுக்குகிறாய்.
இன்னும் உன்னை மனம் ஏந்தி
நிற்கிறது,- ஏமாற்றம் தாங்கிக் கொள்ளப்
பழகுகிறேன் என்றும் உன் நினைவுகளில்.
வாழ்வது வரமா..? சாபமா..?
பதில் சொல்...?
8 comments:
வந்தேன்..
//தூசுப்
படியும் என்னை தும்ம விடாதே..!
பாசக் கவிதைகள் பறந்து வரும்//
அருமை
அருமை அருமை மக்கா....!!!
Very super kavithai
என் மனதை கண்ணாடியில் பார்க்கிறேன் உங்கள் கவிதையில்...தோழா உண்மையான நட்புக்குதான் தெரியும் தோழனின் மனதின் வதை...கடவுளுக்கு நன்றி சொல்வேன் உங்களை என் தோழனாய் அடைந்ததற்கு..என்னவளை உங்கள் கவிதை வரிகளாய் பார்க்கிறேன்...
முதற் பந்தி கேள்விகளால் காதலியிடம் புரிதலுடன் கூடிய திருமண பந்தத்தினை வேண்டி நிற்கிறது,
இரண்டாவது பந்தி, பதில் இன்றித் தத்தளிக்கும் ஓர் ஆடவனின் உள்ளத்து உணர்வுகளைச் சுட்டி நிற்கிறது,
கவிதை எதிர்பார்ப்போடு கூடிய மன ஏக்கத்தின் வெளிப்பாடு.
Such sweet and true lines.Superb lines.congrats
இன்னும் ஏதேனும் மிச்சமிருந்தால் சொல்...
துடிக்கும் இதயம் நிறுத்தும் வரை
----------வலி நிறைந்த காதல்....
அருமையான கவிதை....
Post a Comment