Sunday, June 12, 2011

”முரசு கொட்டும் முத்தம்...”


நீ ...
முத்தமிட்ட சப்தங்கள்
முரசுக் கொட்டுதுக் காதில்...!


மூளைக்குள் கொட்டமடிக்கும்
உன் நினைவுகள் ...
முதுகு தண்டை துளைக்கிறது.


விழிகளில் விழிகள் கலந்து
விருந்து வைப்போம் வா.


மொழிகளில் மோனம் கலந்து
உணர்வுகள் சமைப்போம் வா.


கனவுகள் நமக்கு கண்களில் அல்ல...
மனதில்...!!


இல்லாமை, இயலாமை இரண்டும்
இல்லாமை செய்வோம் வா.


என்னை உனக்குள்ளும்
உன்னை எனக்குள்ளும்
இடமாற்றம் செய்வோம் வா.


இடவலம் மாற்றி இன்பம்
துய்ப்போம் வா.


எங்கும் நிறைந்த பரம்பொருளாய்
இறைந்துக் கிடப்போம் வா.


அங்கங்களில் ஆவி நிறைத்து
அழகுத் தமிழ் சமைப்போம் வா.


இன்னொரு அகத்தியன் 
பெற்றெடுப்போம் வா.


தமிழுக்கு ஒரு தனி உலகம்
தங்கமே..! உனக்கும் எனக்கும்
அது சொர்க்கம்.


விண்ணிலும் மண்ணிலும்
தமிழை விதைப்போம்.


தேகத்திலும் மோகத்திலும்
தமிழை வளர்ப்போம்.


அறிவியல் தொழிலியல்
ஆக்கி வைப்போம்.


ஆற்றவொணா சாதனைகள்
ஆற்றி வைப்போம்.


இதழுக்குள் இலக்கியங்கள்
இட்டு வைப்போம்.


இதயத்தில் இலக்கணங்கள்
போட்டு வைப்போம்.


கைக் கலக்க மெய் மறக்கும்
மெய்யின்ப பெட்டகமே..!!


உயிரொடு மெய் கலக்க
உயிர்த்தெழும் மொழி வளமே..!!


வா....! இன்னமுதத் தமிழில்
இலக்கிய விருந்து வைப்போம்.


என்னருந்தமிழை உலக அரங்கில்
ஏற்றி வைப்போம். 

14 comments:

Yaathoramani.blogspot.com said...

காதலின் உச்சக்கட்டத்திலும்
தமிழை உச்சத்தில் வைப்போம் என்கிற சிந்தனை
வித்தியாசமானதாகவும் பாராட்டுக்குரியதாகவும் உள்ளது
வார்த்தைகள் உண்ர்வோடு பின்னிப் பிணைந்து
புதிய எல்லைகளைத் தொடுகின்றன
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

சுவடுகள் said...

கவிஞரே ! உங்கள் கனவுகள் மெய்பட வாழ்த்துக்கள்......!
மீண்டும் ஓர் அகத்தியன் ஆஹா.... நன்று காத்திருக்கிறோம்.அறிமுகம் செய்யுங்கள்.... விரைவில்!

சுவடுகள் said...

இல்லாமை, இயலாமை இரண்டும்
இல்லாமை செய்வோம் வா.

எங்கும் நிறைந்த பரம்பொருளாய்
இறைந்துக் கிடப்போம் வா.

உயிரொடு மெய் கலக்க
உயிர்த்தெழும் மொழி வளமே..!!

மிகவும் இரசிக்க செய்த மொழி வளம், மிக்க நன்று .

நிரூபன் said...

முத்தம் பற்றி ஓர் தித்திக்கும் கவிதையினைத் தந்திருக்கிறீர்கள்.

முத்தமிடுவதால் கிடைக்கும் இன்ப நிலை, உணர்வுகள், முத்தத்தின் பயன், முத்தத்தாலும் தமிழ் வளர்க்கலாம் எனும் உணர்வு...அனைத்தும் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

இன்னமுத தமிழில் இலக்கிய விருந்து வைத்து, அருந்தமிழை உலக அரங்கில் ஏற்றி வைப்போம்..ன்னு சொன்னது...முத்தாய்ப்பு..!! :)

பகிர்வுக்கு நன்றி..!

'பரிவை' சே.குமார் said...

//இதழுக்குள் இலக்கியங்கள்
இட்டு வைப்போம்.


இதயத்தில் இலக்கணங்கள்
போட்டு வைப்போம்.//

varikalil vazhnthirukkiraai nanba...
romba nalla irukku...

Kayathri said...

தமிழுக்குப் பிறந்தவனே!
தமிழே,
தமிழ்த்தாயின் அருள் பெற்றவனே!
உன் கையில் இருப்பது என்ன பேனாவா
அல்லது அந்தத்
அந்தத் தமிழ்த்தாயின்
கையில் இருக்கும் எழுதுகோலா??

தமிழ்க்காதலன் said...

வாங்க இரமணி, வணக்கம். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றி.

தமிழ்க்காதலன் said...

வணக்கம் சுவடுகள். நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களின் பின்னூட்டம் கண்டு மனம் நெகிழ்கிறது. என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் கருத்துகள் காண விழிகளில் ஒரு ஏக்கம் இருக்கிறது. தொடருங்கள் உங்கள் ஆதரவை.

தமிழ்க்காதலன் said...

வாங்க நிருபன், வணக்கம். உங்களின் மேலான கருத்துகள் என்னை மகிழ்வித்தன. பாராட்டுக்கு நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க ஆனந்தி, வணக்கம். உங்களின் இனிய வருகை இடைவெளி விட்டு வரக் காரணம் என்னவோ..?
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றி.

தமிழ்க்காதலன் said...

என் பிரியமான தோழா, வா ராசா. வணக்கம். எப்படி இருக்கிறாய்..? உடல் நலம் கவனி. உன் அன்புக்கும் வரவுக்கும் என் நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க காயத்ரி, உங்களின் வரவும் கருத்தும் இனிக்கிறது. இதயம் மணக்கிறது. கைகளில் என்ன இருக்கிறது என நீங்களே கண்டுபிடியுங்கள்.

மனதில் என்ன இருக்கிறது என்பதை எழுத்துகளில் சொல்கிறேன்.

nenjammarapathillai said...

அருமை நண்பா