படம் : அபியும் நானும்.
பாடல் : வா...வா...என் தேவதையே...!
( வா... வா... என் தேவதையே என்ற பாடலின் மெட்டில் இந்தப் பாடலைப் பாடிப் பாருங்கள்.)
பல்லவி:
போ போ என் பொய்முகமே
உண்மைத் தேடும் என் மனமே
மெய் ஞானம் தேடுகிறேன்
மெய் மெய்தானா..? (போ போ என்)
நான் இருக்கும் பூவுலகு
நறுமணங்கள் வீசிடுமா..?
நான் வசிக்கும் உலகிலே
நல்மனங்கள் பேசிடுமா..? (போ போ என்)
சரணம் - ௧.
தேகமது தேயும்வரை இந்த தேகத்தை
அறிந்திட முடிவதில்லை.
மோகமது போகும்வரை எந்தன் மோனத்தை
புரிந்திட முடியவில்லை.
சிற்றின்ப சேற்றினில் சிதறி ஓடியே
முற்றிலும் முடிந்திடும் வாழ்க்கை இது
உற்றத்துணை என்று எதுவும் இல்லையே
உண்மைகள் புரிந்திட துடிக்கிறேன்.
சத்தியம் நான் என்று தெரிந்ததம்மா ஒரு
சத்தியம் எனை வந்து எரிக்கையிலே.... (போ போ என்)
சரணம் - ௨.
மௌனத்தின் முன் மொழி எல்லாம் வந்து
வாய் மூடி மண்டியிட்டுப் பணியக் கண்டேன்.
காணும் பொருள் யாவும் இங்கே அந்த
சூனியத்தின் சூலகத்தில் ஒடுங்கக் கண்டேன்.
நித்தியம் அநித்தியம் கலந்த போது என்
சத்தியம் சிரிப்பதை நானும் கண்டேன்.
வித்தைகள் அறிந்திட விழைந்த பொழுதெல்லாம்
வீணென்று தெரிந்திட நாணம் கொண்டேன்.
தத்துவப் பிழைகளும் புரிந்ததம்மா ஒரு
சத்தியம் எனை வந்து அணைக்கையிலே.... (போ போ என்)
7 comments:
அருமையான பாடல் .. அருமையான படம்
1
Mela sonna "1" No-1 kavithaiyinnu arththam....
romba nalla vanthirukku nanaba...
வாங்க என் ராஜப்பாட்டை, வணக்கம். உங்கள் வரவும், கருத்தும் மகிழ்வைத் தருகின்றன. மிக்க நன்றி.
வாப்பா தோழா, வந்து வருகையை பதிவு செய்துவிட்டுப் போகிறாயா..? பாராட்டுக்கு நன்றி.
அருமையான கருத்து அத்தோடு நல்ல மெட்டும் கூட
அருமையான கருத்து நல்ல மெட்டு
Post a Comment