Monday, February 07, 2011

"பசித்திருக்கிறேன்......!"


"பசித்திருக்கிறேன்......!"

பசித்திருக்கிறேன் .......
உன் தொண்டைக்குள் இறங்கும்
ஒவ்வொரு கவளத்துக்கும்........
உன் பசித்தீர்க்கும்
ஒவ்வொரு பருக்கைக்கும்........
உன் கைப் பிடிக்கும்
ஒவ்வொரு பிடி சாதத்துக்கும்.....

பசித்திருக்கேன்.........

உன் மேலண்ணம் நனைக்கும்
ஒவ்வொரு துளி நீரிலும்.......
உணவுக்குழல் ஏறி இறங்கும்
ஏற்றத்துக்கு தக்கப்படி
என் பார்வையின் நகர்வுகள்.......
மெதுவாய் அசையும் உன் தாடைகளில்
மெல்ல மெல்ல மனம் சரிகிறேன்.
அத்தனை அழகாய்.....!
எப்படித்தான் சாப்பிடுகிறாயோ...?
அந்த அழகுக்காய்.......

பசித்திருக்கிறேன்...........

ஒவ்வொரு நாள் உணவு இடைவெளியிலும்
உன்னையே நினைத்து.......
ஒத்துக்கொள்ளாமலே உணவருந்துகிறேன்.....
நீ இல்லாமல் சாப்பிட
மனம் கூசுகிறது......
உன் பசியடங்கும் வேளைகளில் என்
உயிர் சிலிர்க்கிறேன்......
நீ தாகம் தணிந்தால் நான்
தண்ணீர்க் குடிக்கிறேன்.....
உன் நினைவில்........

பசித்திருக்கிறேன்.............

என்னோடு உயிர்த்திருக்கிறாய்...
எங்கேயோ பசித்திருக்கிறாய்...?
உன் சீவன் வளர்க்கும்...
ஒவ்வொரு பருக்கையிலும்
என் பெயர் எழுதுகிறேன்.......!!
என்னவளே...!
நீ வரும் வரை நான்......

பசித்திருக்கிறேன்........

உன்னைத் தண்டிக்க முடியா தருணங்களில்
என்னைத் தண்டிக்கிறேன்....
என் உணர்வுகளால் உன் உயிருக்கு
உணவூட்டுகிறேன்........
உனக்கெப்படிப் புரியும்...?
பசித்திருக்கும் உன் பசிக்காக.......

பசித்திருக்கிறேன்......

 

ஒரு நாள் உன் பசிக்கு.....
நானே உணவாவேன்....!
ஒரு நாள் உன் தாகத்திற்கு
நானே தண்ணீராவேன்...!
ஒரு நாள் உன் உயிருக்கு
நானே விருந்தாவேன்....!
ஒரு நாள் உனக்கு
நானே வாழ்வாவேன்....!
அதுவரை.....

பசித்திருக்கிறேன்.....

17 comments:

எஸ்.கே said...

பசித்திருக்கிறேன். நன்றாக ருசித்து விட்டேன்!

வார்த்தைகள் வந்து விழுகின்றன அழகாய்!

Chitra said...

அருமையாக எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை அருமை
இந்த புள்ளியெல்லாம் தேவையான இடத்தில் ஒரு மூன்று புள்ளிகள் வைத்தால் போதும்...
கவிதை இன்னும் அழகாக இருக்கும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை பசி உள்ளவர்களுக்கு இது அழகான விருந்து...

மாணவன் said...

அழகு தமிழில் வரிகள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... காலையில பேசும் போதே பசிக்குதுன்னு சொன்னப்பவே புரிஞ்சிருக்கணும்... புரியாமப் போச்சு... ரொம்பத்தான் பசித்திருக்கிறாய் நண்பா... தனித்திருக்கிறாயோ?

அருமையான வரிகள்... மீண்டும் எனக்குப் பிடித்த வகையில் சாதாரண வார்த்தைகள் கொண்டு அழகாக பசியாறியிருக்கிறாய்...

எழுத்துக்கள் சரளமாய் வருவது உன் பலம். அருமை.... கவிதை வீதி சௌந்தர் சொன்னது போல் மூன்று புள்ளிகள் வை... அழகாக இருக்கும்.

அப்புறம்... நீ "கவிஞேண்டா...."
தமிழ்... "கலைஞேண்டா..."

'பரிவை' சே.குமார் said...

ஒண்ணு விட்டுப் போச்சு... அந்தக் கண்ணுக்கு சொந்தக் காரன் நீதானே?

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ் இப்பிடி வளைந்து நெளிந்து உயிரில் உரைகிறதே.....
அடி பொளி மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//உன் பசியடங்கும் வேளைகளில் என்
உயிர் சிலிர்க்கிறேன்......//

அடடா... தேன் தேன் தேன் தேன் தேன்......தமிழ் தேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//வெறும்பய said...
கவிதை பசி உள்ளவர்களுக்கு இது அழகான விருந்து...//


சரியாக சொன்னீர்கள் மக்கா......

சுவடுகள் said...

மெய் சிலிர்ப்பது இயற்கையான நேசம்...உயிர் சிலிர்ப்பதென்பது..?! காதலின் புனிதம் சிதையாமல் பண்போடு உங்கள் எழுத்துக்கள் இரசிக்க வைக்கின்றன.

சுவடுகள் said...

உணவுக்குழல் ஏறி இறங்கும் ஏற்றத்துக்கு தக்கப்படி என் பார்வையின் நகர்வு அடடா..! உங்கள் அழகுணர்ச்சியில் அகம் நெகிழ்கிறது.

மதுரை சரவணன் said...

super.... kavithai வாழ்த்துக்கள்

Meena said...

கவிதை நன்றாக உள்ளது
சிலருக்கு பசி எடுத்தாலும் சாப்பிடத் தெரியாது.
பசியை பத்திரமாகப் பிடித்து வைத்து இருப்பார்கள். இந்தப் பசி
எப்படி?

அன்புடன் நான் said...

பசித்திருக்கிறேன்...... மிக அருமை.
பாரட்டுக்கள்.

s.kanapathippillai said...

very nice ,are you writer

s.kanapathippillai said...

very nice .are you good writer.