Monday, February 14, 2011

"இல்லாள்"


என்னைத் தனதாக்கிக் கொண்ட மனைவிக்கு,
இன்னுயிரில் இழையோடும் பாசத்தீயின் பரவசத்தில் 
என்னை உன்னில் தேடும் இன்பத்துளிகளில்... 
இதோ,-


உயிர்க்கிறேன்...


இன்னும் 'இருக்கும்' இரகசியம் இதோ 
அவிழப்போகிற ஆனந்தப் பரவசம். 
வாழும் உணர்வினை எனக்கு ஊட்டி 
வாழ்க்கைக் காட்டியவள். 


மருகிக்கிடந்த உயிர்ப்பின் உணர்வுகளை 
உருகி ஓடச்செய்தவளே..! 
பனியாய் உருகிப் பாசம் நிறைக்கிறேன். 
உன் வழி எங்கும் என் நேசம் நிறைக்கிறேன்.     


மூழ்கும் பிறவியின் மயக்கம் மூளும் 
மீளாநேசம் மாளாத் தீயில் தினம் கருகும்
ஊழ்வினைப் பாழ்வெளிப் பயணம் தொடர
உன்னைத் துணையாக்கத் துடிக்கிறது.


அத்தனையாயிரம் நியூரான்களிலும் நீயே நிறைகிறாய்...
ஆதிமுதல் நீ என் சொந்தமாய் 
ஆன்மாவின் பந்தமாய் தொடர்கிறாய்,- தொடரும்
பிரபஞ்சப் பெருவெளிப் பயணத்தில் நாம்.


பால்வெளியில் நமக்கு குடில் அமைக்கிறேன்.
வீதியெங்கும் விண்மீன்களில் விளக்குகள் தோரணமாய்
காற்றின் திசைமாற்றி கூற்றின் முறைசெய்கிறேன்.
நெபுலாக்களில் நம் நேசம் எதிரொலிக்கிறது.


கதிரின் ஒளியில் நம் காதல் வழிகிறது 
சிந்தும் சிதறலில் சந்திரன் மிளிர்கிறது 
சகத்தியே...! உன்பாசத்தில் தான் என்வாசம்...
சத்தியமே..! நீ என் சத்+சித்+ஆனந்தம். (சச்சிதானந்தம்)
பிண்டம் பிரிந்த பிறவி இது 
அண்டம் அளந்த நேசம் இது 
கண்டம் கடந்த காதல் இது 
குண்டம் உடைக்கும் காலம் இது


நம் சந்ததிக்காய் ஒரு பூமி 
தமிழ்ச் செழிக்க ஒரு பூமி 
தங்கமே நீ சிரிக்க, சிந்திக்க 
அங்க மெல்லாம் ஆவித் தரிக்கிறேன்.


வாழ்வென்றால் 'நீ' என்று பொருள் 
வாழ வா...! நான் வாழவா...?
திரும்பும் திசைகளில் அரும்பும் இசைகளில் 
யாவிலும் நீ மட்டுமே சிரிக்கிறாய்.


உன்னை இரசித்தலே பிறவியின் பயன் 
என் இரகசிய சகியே...! இரசிக்கிறேன்.
விண்ணுக்கும் மண்ணுக்குமாய் உயிர் நிறைக்கிறேன்.
வரும் வழியில் எண்ணங்களாய் மணக்கிறேன்.


சொல்........


எப்போது வருவாய்...?  
குறிப்பு:            
எப்போதும் மனைவியைக் காதலியுங்கள்.... இதுவரை இல்லையென்றால் இப்போதேனும்... இந்த "காதலர் தினத்திலிருந்தேனும்" காதலிக்கத் தொடங்குங்கள்..., "மனைவி" வாழ்வின் 'பொருள்". "வாழ்க்கை" மனைவியின் "அருள்".    

24 comments:

MANO நாஞ்சில் மனோ said...

என்னைய்யா ரொம்ப நாளா ஆளையே காணோமே...

sakthistudycentre-கருன் said...

கவிதைன்னா இதுதாங்க.. மனசை ஏதோ ப்ன்னுதுங்க உங்க எழுத்து...

நம்ம கவிதையையும்?????????????????????? கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//வாழும் உணர்வினை எனக்கு ஊட்டி
வாழ்க்கைக் காட்டியவள்.//அருமை மக்கா அருமை...

MANO நாஞ்சில் மனோ said...

//உன்னை இரசித்தலே பிறவியின் பயன்
என் இரகசிய சகியே...! இரசிக்கிறேன்.
விண்ணுக்கும் மண்ணுக்குமாய் உயிர் நிறைக்கிறேன்.
வரும் வழியில் எண்ணங்களாய் மணக்கிறேன்//

டச்சிங் டச்சிங்....

சே.குமார் said...

partuttean... appuram varen commentukku...

MANO நாஞ்சில் மனோ said...

//எப்போதும் மனைவியைக் காதலியுங்கள்.... //

சரியாக சொன்னீர்கள்...

தமிழ்க் காதலன். said...

எனதன்பு மனோ... வாங்க... வாங்க... நலமா..? நம்ம சொந்த மண்ணுக்கு போயிருந்தேன். அதான் காணல.. உங்கள் சுகங்கள் இப்படி..?

தமிழ்க் காதலன். said...

உங்களின் அன்பில் நனைகிறேன் மனோ. விரைவில் உங்களை சந்திப்பேன் என நினைக்கிறேன்.

தமிழ்க் காதலன். said...

அன்பு தோழனே.... வா..... காத்திருக்கிறேன். உன் வருகைக்காய்.

தமிழ்க் காதலன். said...

அன்பு சக்தி சென்டருக்கு.., உங்களின் வருகை எமக்கு உவகைத் தந்து ஊக்கமளிக்கிறது. தொடர்ந்திருங்கள். நானும் உங்களின் பக்கங்களைப் புரட்டுகிறேன்.

வெறும்பய said...

அருமை அருமை.. வார்த்தைகள் விளையாடுகின்றன அர்த்தங்களுடன்..

வார்த்தைகளுக்காக கவிதையா இல்லை கவிதைக்கான வார்த்தைகளா என்பது போன்று அழகாய் பின்னப்பட்டிருக்கின்றன ஒவ்வொரு வார்த்தைகளும்...

எஸ்.கே said...

அழகிய கவிதை மீண்டும்! அன்பு எங்கும் தழைக்கட்டும்!

ஆகாயமனிதன்.. said...

காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

Kalidoss said...

வாழ்க்கை துணை பற்றிய அருமையான வார்த்தைச் சரம்.மகேசனின் படம்.ரொம்ப ரசித்தேனுங்க
வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள் ..

சே.குமார் said...

//பிண்டம் பிரிந்த பிறவி இது
அண்டம் அளந்த நேசம் இது
கண்டம் கடந்த காதல் இது
குண்டம் உடைக்கும் காலம் இது


நம் சந்ததிக்காய் ஒரு பூமி
தமிழ்ச் செழிக்க ஒரு பூமி
தங்கமே நீ சிரிக்க, சிந்திக்க
அங்க மெல்லாம் ஆவித் தரிக்கிறேன்.//

நண்பா வரிகளில் விளையாடியிருக்கிறாய்... அருமையான படைப்பு. அதற்குத் தகுந்த படங்கள்... கலக்கல்.

காதலர் தினத்துக்கு எதாவது போடலாமா என்று யோசித்தேன்... கல்யாணமாகுமுன்னே மனைவியை நீ காதலிக்கச் சொல்லும் போது கல்யாணமான நான் வேறென்ன சொல்ல முடியும்.. அதான் பதிவுக்கு விடுமுறை...

நல்ல கவிதை ஒன்றை மீண்டும் மலரஸ் செய்துள்ளாய். நன்றி நண்பா.

தினேஷ்குமார் said...

நான் என்னவேறு சொல்வதையா நான் சொல்லநினைத்தை அண்ணன் குமார் அவர்கள் கூறிவிட்டார் ......

தேடலிலே வாழ்ந்து தேன்ச்சுவை வரிகளில் பிணைந்து காணாத காதலில் காவியமாகும் வரிகள்....

தமிழ்க் காதலன். said...

வாங்க (வெறும்பய) நண்பா, உங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க் காதலன். said...

அன்பு எஸ்.கே, வாங்க. வணக்கம். உன்களின் அன்புக்கு நன்றி. தொடந்திருங்கள்.

தமிழ்க் காதலன். said...

முதல் வருகைத் தரும் ஆகாய மனிதா, வாங்க. உங்களின் கருத்துக்கள் எல்லா பதிவுக்கும் பொதுவானதாக இல்லாமல்... எழுத்தை பொருத்துக் கருத்து சொன்னால் அது உண்மையாகவும், உதவியாகவும் இருக்கும் என்பது என் கருத்து.

தமிழ்க் காதலன். said...

அன்பு அப்பா (காளிதாஸ்)வுக்கு, வாங்க. உங்கள் உடல் மன நலம் கவனியுங்கள். உங்களின் அக்கரை என்னை இன்னும் மெருகேற்ற உதவுகிறது. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க் காதலன். said...

அடேய் தோழா, (மனசு-குமர்) அடடா... கருத்துலயே காலை வாரிவிடுற மாதிரி தெரியுது...ம்ம்ம்ம்ம்ம்ம்ம். உன் அன்புக்கு நன்றி... ஹிஹிஹி

தமிழ்க் காதலன். said...

தம்பி தினேசுக்கு, ஏம்பா... இருவரும் பேசி வச்சுகிட்டு வந்தீங்களாக்கும்... கருத்துல கூடவா கஞ்சத்தனம்... ம்ம்ம். பொழச்சிப்பீங்க.... நடக்கட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

"வாழ்க்கை" மனைவியின் "அருள்". //
முத்தாய்ப்பான முத்து வரிகள். அருமையான படங்கள்.பாராட்டுக்கள்.

Kayathri said...

உங்கள் பாசப் பனியில் நனைய காத்திருக்கும் அந்த மலருக்கு வாழ்த்துக்கள்..ஆனந்த்க் கண்ணீரின் ஆற்றில் உல்லாசமாய் நீந்துங்கள்...

உங்கள் அன்பின் ஆழத்தை எண்ணி நீர்கோர்த்தபடி கண்கள்....