உடலமாய் உழல்கிறேன் சடலமாய் திரிகிறேன்
நானாகிப்போன ஆவி சூடாகிப் போக
வாழும் வழியறியேன் சூழும் விதியறியேன்
பாழும் வினைப் படுத்தும் நிலையறியேன்.
சூளது சூழாது தாழாது வீழாது
மோகத்து மோகிக்கும் தேகத்துப் புகாது
விதியும் விதிர்க்க விக்கித்துப் போக
சத்தும் வித்தும் சாகா ரசமாகாது
கழுமுனை கழல சுழலும் கழல்
சுழுமுனை சுழல கழலும் தழல் எரிதழல் எரிக்கும் தேகம் செரிக்கும்
கறிநிழல் காக்கும் கரும வினை
வைத்தப் பொறியுள் தைத்த புதையல்
வையத்துள் பொதியும் பதியம் படையல்
விதியின் பசிக்கும் வினையின் ருசிக்கும்
வடியும் உதிரம் வாழ்க்கைப் புசிக்கும்
சதி செய்த விதி தனை
மதி கொய்த சூது தனை
பதி பாசம் பற்றறுத்து வினை
முற்றும் மீள்வேன் எனை மீட்பேன்
21 comments:
//சதி செய்த விதி தனை
மதி கொய்த சூது தனை
பதி பாசம் பற்றறுத்து வினை
முற்றும் மீள்வேன் எனை மீட்பேன்//
nalla irukku nanba...
padamum arumai.
//சூளது சூழாது தாழாது வீழாது
மோகத்து மோகிக்கும் தேகத்துப் புகாது
விதியும் விதிர்க்க விக்கித்துப் போக
சத்தும் வித்தும் சாகா ரசமாகாது//
வார்த்தை நயம் அது உங்களிடம் தனித்துவமாக விளையாடுகின்றது!
என்னமாய் எழுதியிருக்கீங்க சார்... அருமை..
டைம் இருந்தால் படித்து பார்கவும்..
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html
தமிழ் இலக்கிய வரிகளில் கவிதை அழகு...
பகிர்வுக்கு நன்றி நண்பரே :)
உங்கள் இலக்கிய திறமையை, புலமையை காட்டுகிறது.
சொல் விளையாட்டு வியப்பில் ஆழ்த்துகிறது.
நன்றி..
//சதி செய்த விதி தனை
மதி கொய்த சூது தனை
பதி பாசம் பற்றறுத்து வினை
முற்றும் மீள்வேன் எனை மீட்பேன்//
பாசமறுப்பதும், பதி மறுப்பது எளிதான விஷயமல்ல என்றாலும் கூட , எத்தனை துன்பங்களை அனுபவித்திருக்கக்கூடும் என எண்ணம் ஓடுகிறது.
அண்ணா வழக்கம் போலவே இரண்டு தடவை படிச்சேன்..
வரிகள் எல்லாமே மறுபடி படிக்கத்தூண்டுகின்றன ..!
வார்த்தை விளையாட்டு தான் ரொம்ப பிடிச்சிருக்கு ..
இலக்கியம் சதிராடுதே மக்கா சூப்பர்...
//வைத்தப் பொறியுள் தைத்த புதையல்
வையத்துள் பொதியும் பதியம் படையல்
விதியின் பசிக்கும் வினையின் ருசிக்கும்
வடியும் உதிரம் வாழ்க்கைப் புசிக்கும்//
அடடடா...
செம தல....
சந்தம் ஒன்றுடன், நல்லா வந்து இருக்கிறது.
அன்பு நண்பா,(மனசு-குமார்) உன் வருகை எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. உன் எண்ணங்களை வரவேற்கிறேன். தொடர்ந்து உன் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.
இனிய தோழனே (எஸ்.கே), உங்களின் கருத்துரை எனக்கு புத்துணர்வை அளிக்கிறது. உங்களின் தொடர் வருகைக்கு என் நன்றி. நட்பில் சொல்ல வேண்டாம் என்றாலும்.... மனம் சொல்கிறது.
வாங்க வேடந்தாங்கல் கருன், உங்களின் தொடர் வருகைக்கு எனது நன்றிகள். தொடர்ந்திருங்கள். உங்கள் பதிவுகளைப் பார்வையிடுகிறேன்.
அன்பு மாணவனுக்கு, உங்களின் பாராட்டுகளுக்கும், வருகைக்கும் நன்றி.
அன்பு பாரத் பாரதி, வாங்க. உங்களின் அன்பான வருகைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்திருந்து ஆதரவு தாருங்கள்.
அன்பு தம்பி கோமாளி செல்வாவுக்கு, வா தம்பி, உனக்கு கவிதை பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்.... வந்து “வாங்கிட்டு” போ. ஹ..ஹ...ஹ..
அன்பு தோழா (மனோ), வாங்க. உங்களின் இரசனைக்கு நன்றி. தொடர்ந்திருங்கள். மிக்க நன்றி.
என் அன்பு அக்காவுக்கு, உங்களின் அன்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
இந்த பதிவுக்கு வாக்களித்து பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்களின் ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன்.
வாக்களித்த அன்பு உள்ளங்கள்........
@ உமாஜி,
@ கோமாளி செல்வா,
@ ஜெகதீஷ்,
@ வி.கோபி,
@ எம்.வீ.ஆர்.எஸ்,
@ தமிழரசன்,
@ ’மனசு’ - குமார்,
@ ஆர்.ஆர்.சிம்பு,
@ கலியுகம் - தினேஷ்,
@ இன்பதுரை,
@ அரசு,
@ ஜெ.என்.டியூப்,
@ கருன்,
@ கே.கே.டேவிட் பில்லா,
@ கார்த்திக்.வி.எல்.கே,
@ சித்ரா (அக்கா),
@ கார்த்தி,
@ விளம்பி,
@ பூபதி,
@ மதுரகன்,
@ கே.வி.ருத்ரா,
@ செல்வ பாரதி,
@ பனித்துளி சங்கர்,
@ சுவாசம்,
@ சுபம்,
@ மனோகரா,
உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குக்குகிறேன். தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
//சூளது சூழாது தாழாது வீழாது
மோகத்து மோகிக்கும் தேகத்துப் புகாது
விதியும் விதிர்க்க விக்கித்துப் போக
சத்தும் வித்தும் சாகா ரசமாகாது//
வார்த்தை நயம் அது உங்களிடம் தனித்துவமாக விளையாடுகின்றது! தமிழ் இலக்கிய வரிகளில் கவிதை அழகு...
Post a Comment