Wednesday, February 02, 2011

"மீனவ நண்பனும்.. தமிழக அரசும்.." (புதிய திட்டங்களுடன்....)

மீனவன்........

கட்சத் தீவைக் கைக்கழுவி இலங்கையின்
எச்சில் வாழ்க்கைத் தந்த இந்திய அரசே....!
கொச்சைப் படுத்தப்படும் எங்கள் வாழ்வில்
இந்திய மானம் இருக்கவில்லையோ...?!

ஒவ்வொரு படகிலும் நாங்கள்
இதுநாள் வரை பறக்க விட்டது
இந்த தேசத்துக் கொடி என்றே நினைத்திருந்தோம்.
இப்போது புரிகிறது....
இலங்கை தேசத்து கொடி தேவையென்று....
தப்பிப் பிழைக்க ஒரு அவகாசமாவது கிடைக்குமே...

 

கடலை நம்பி பிறந்தவர்கள் நாங்கள்
"கவர்"மெண்டை நம்பி என்ன பயன்..?
கடலும் கட்டுமரமும் காக்கும் எங்களை
கைத்துப்பாக்கி குறிப் பார்க்கிறது...?!

சிங்களவன் பயிற்சிக்கு இலக்கு நாங்கள்...
சிந்தும் உதிரம் இந்துமாக்கடலையும் சிவப்பாக்கும்...
சந்தேகமிருப்பின்....
வள்ளுவ சிலைப் பார். 
***************************************************


தமிழக அரசு.............

"தமிழர்களே...! தமிழர்களே...!!
நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும்
கட்டுமரமாகத்தான் மிதப்பேன்...!
அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்....
கவிழ்ந்து விட மாட்டேன்....."

இந்த சூத்திரம் தெரியா ஒரு இனம் தினம்
சுடப்பட்டு சாவது என்ன விந்தை...!!
 
மீனவர்களே....
நீங்கள் இப்போது ஏறுவது எந்த மரம்....?
உங்களிடமிருப்பது கட்டுமரம் இல்லையோ..?
 

உங்களின் தலைக்கு விலை வைக்கப் பட்டிருக்கிறது.
உங்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் ரொக்கம் (உயிருக்கு)
இலவச சுனாமி வீடு..... ( உயிரோடிருந்தால் )
இலவச வேட்டி சேலை... ( மானம் போன பின் )
ஒரு ரூபாய்க்கு அரிசி .... ( வாய்க்கரிசி )
இலவச கலர் டீ.வி ....( செத்தவன் வீட்டில் கருமாதிக்கு காட்ட )

இப்படி நீளும் திட்டங்கள் இருக்க ........!!!
உங்களுக்கு என்ன கவலை.......???
என்கிறது நமது மாநில அரசு.

நீங்கள் ஏன் மீன் பிடிக்கிறீர்கள்....?
நீங்கள் மான் பிடியுங்கள்....
நாங்களே உங்களை சுட்டுப் போடுகிறோம்....
சட்ட விரோதச் செயல் என்று
சாட்சி சொல்லி....

இப்படியும் பேசுவார்கள்...?!

இனியும் வலை விரிக்க வேண்டியது.......
கடலிலா...?
யோசியுங்கள்.....

மானமுள்ள தமிழனாய் வாழும் வழிக் கேட்டால்...
இலவசங்களை பொறுக்கிப் போட்டு
இன்னும் இழிவுப் படுத்தும் ஒரு அரசு...

இங்கே இருப்பவன் பிழைக்க வழி இல்லை....
இங்கிலாந்துகாரனும்... சப்பான்காரனும்....
இங்கு வந்து ஆலை அமைக்க
இன்னொருவர் தூது................
"வரதப்பா..... வரதப்பா.... கஞ்சி வருதப்பா........
கஞ்சிக் கலையம் தாங்கி அரசாங்க வண்டி வருதப்பா...."


இனி எல்லோருக்கும் இலவசமாய் "கஞ்சித் திட்டம்"
இதன் மூலம் இலவச கேஸ் செலவு (இத்தனையாயிரம் கோடி)
தமிழக அரசுக்கு மிச்சம்.... அமைச்சர் அறிக்கை.

நீங்கள் பொங்கலுக்கு "பொங்கலும்"
தீபாவளிக்கு "வெடியும்"
அரசாங்க செலவில் பெறலாம்.

இந்த முறையும் எனக்கே ஓட்டளித்தால்............

மக்களே..... மறவாதீர்கள்.......

( மீனாவை காப்பாற்ற )
மன்னிக்க ( டங் ஸ்லிப் )

மீனவர்களை காப்பாற்ற
எங்களால் மட்டுமே முடியும்.........

"கடலில் செல்லாமல் மீன் பிடிப்பது எப்படி...?"
என்பதை ஆராய வல்லுநர் குழு அமைக்கப் படும்.


வாய்க்கால் வெட்டி கடலை நமது மாநிலத்தின் 
உள் கிராமங்களுக்கு இணைப்பு கொடுத்து
எல்லோரையும் மீன் பிடிக்க செய்யும்
திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.           
  
அதற்கான செலவை நம்முடைய
மத்திய அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்று
உபரித் தொகையை மாநில அரசுப் போட்டு
வாய்க்கால் வெட்டப் படும் என்பதை...

இதன் மூலம் தெரிவிக்கிறேன்..............

மீனவர்களின் வாயில் மீன் (மண்) விழ செய்வதே
எங்கள் நோக்கம்.

நன்றி.      

*****************************************************

தமிழ்க்காதலனின் மீனவர்களின் துயர்ப் பேசும் இன்னுமொரு பதிவைப் படிக்க....
http://thamizhththenral.blogspot.com/2011/01/blog-post_9799.html

14 comments:

சக்தி கல்வி மையம் said...

அருமை...
தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

Chitra said...

மானமுள்ள தமிழனாய் வாழும் வழிக் கேட்டால்...
இலவசங்களை பொறுக்கிப் போட்டு
இன்னும் இழிவுப் படுத்தும் ஒரு அரசு...


....உங்கள் கோபம் சரியானதே!

'பரிவை' சே.குமார் said...

பயங்கர கோபமா இருக்கே போல...
அதான் ஐயா தில்லிக்கு போயிருக்காகல்ல... அதுக்குள்ள ஏங் கோப்படுறீக..?
காங்கிரஸ்க்காரன் கேக்கிற பங்கை கொடுக்க கூடாதுன்னு நாங்க யோசிக்க வேண்டியிருக்கயில நீங்களாம் ஏம்ப்பா இப்படி சேந்து அடிக்கிறீங்க... நாங்க பேசுவோம்.... மே மாதம் நாகபட்டினத்துப் பக்கம் மீட்டிங் போட்டு பேசுறப்போ நீங்க வந்து கைதட்டிட்டு போகாமலா போகப்போறீங்க....

மாணவன் said...

வரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாய் உள்ளது நண்பரே, உணர்ச்சிகளுடன் பதிவு செய்துள்ளீர்கள்

உங்களின் பங்களிப்புக்கு நன்றி நண்பரே

எஸ்.கே said...

உணர்வுப்பூர்வமான பதிவு! அவர்கள் உணர வேண்டுமே!

தினேஷ்குமார் said...

என்னதான் அடிச்சுக்கேட்டாலும் இவனுங்க நல்லதே செய்யமாட்டாணுக மாறா மீனவர்களை காப்பாற்ற புதிய திட்டம் இத்துணை கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் மீன் அள்ளுரமாதிரி கரைவேட்டி கட்டிக்கிட்டு வருவானுங்க இவனுகள தீ கூண்டுல போட்டு நல்லா கருவ வருத்தெடுக்கணும் உயிரோட ...........

கா.வீரா said...

இதற்குமேல் தமிழக அரசை வலியுறுத்தவும் முடியாது...

பாவம் மீனவர்கள்..

தேர்தல் வருது ஜாக்கிரதை

கா.வீரா said...

//ஒவ்வொரு படகிலும் நாங்கள்
இதுநாள் வரை பறக்க விட்டது
இந்த தேசத்துக் கொடி என்றே நினைத்திருந்தோம்.
இப்போது புரிகிறது....
இலங்கை தேசத்து கொடி தேவையென்று....
தப்பிப் பிழைக்க ஒரு அவகாசமாவது கிடைக்குமே...//

இப்படி ஒரு வழி இருந்தும் அதைச் செய்யவில்லை தமிழன்.

இப்போதாவது உரைக்கட்டும் இந்திய அரசுக்கு.

சுவடுகள் said...

உங்களின் ஆதங்கம்.....புரிகிறது. மீண்டும் ஓர் சத்யாகிரகம் தேவைப்படுமோ ?? அரசின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கத் தமிழை ஆயுதமாக்கிக் கொண்டீரோ ? எல்லோருமே தயாராவோம் இதுபோன்ற அநீதிகளே இனி நிகழாதிருக்கட்டும்.

Thenammai Lakshmanan said...

உணர்வு பூர்வமான இடுகை.. வருத்தம் எழ செய்தது

ksground said...

your message is more useful......

சி.பி.செந்தில்குமார் said...

உணர்வுகளை தட்டி எழுப்பும் போஸ்ட்

MANO நாஞ்சில் மனோ said...

உறக்க கலக்கத்தில் இருக்கும் தமிழனே நீ விழித்து கொள்ள வேண்டிய தருணம் இது.....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உணர்வு பூர்வமான பதிவு...