Thursday, December 30, 2010
"ஆன்ம இராகம்"....!
அதோ என் கோவில்...!
இங்கேதான் என் இறை
எப்போதும் இருக்கிறது.
ஓடோடி வரும்...
ஒவ்வொரு முறையும்
கதவடைப்பில்...!
ஆன்மாவின் இராகம்
அழைக்கிறது.
என் ஆன்மாவின்
இராகங்கள் இதோ உனக்காக...
உன்னை குரலால் தொழுகிறேன்.
கவிதையால் ஆராதிக்கிறேன்.
எண்ணங்களால் பூசிக்கிறேன்.
எவ்விதமாய் மாசுப்பட்டேன்...?
எனக்கு மட்டும் கதவடைப்பு....?!
இருப்பினும் என் துதிகள்...
யாவும் உனக்காய்...!
விழிகளில் விளக்கேற்றுகிறேன்..!
வெளிச்சத்தில் என்னைக் காண்பாய்..!!
ஏ...!
என் இறையே...
உன்னை அருகமர்ந்து
தரிசிக்க தவமிருக்கிறேன்.
பாவங்கள் படியாத இந்த மலரை
உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
காம்புகள் காயும் முன் காண்பாயோ...!
ஆழ்மனதமர்ந்து என் ஆழம் காண்கிறாய்.
உள்ளிருந்து கொண்டு உடன்வர மறுக்கிறாய்..!
நிழலென பின்தொடர்வேன் நிசத்திலும்
நீயறியாயோ என் துணையே....!!
வாழ்வில் வளம் சேர்க்கும் 'தமிழ்' தந்தேன்.
வாட்டம் நீங்க வாராயோ "என் தமிழே"..!
நீ என் மொழி... நீ என் வழி...
நீ என் விழி... நீ என் தழி...!!
ஆர்ப்பரிக்கும் சூழலில் உன்னை சரணடைகிறேன்.
ஆரவாரம் இன்றி எனை ஆட்கொண்டருள்..!
பேதமைகளில் பொருந்தா வண்ணம்
"பேரருட்செய்" பெருந்தகையே...!!
நின் தீர்த்தங்களில் என் தேகம் நனையட்டும்
நின் திரவியங்களில் என் மனம் குளிரட்டும்
நின் மூர்த்தங்களில் என் ஆன்மா அமரட்டும்
நின் கீர்த்தனைகளில் என் சுதி சேரட்டும்.
கடைக்கண் பார்வையில் தழுவிக்கொள்.
காதலின் விளிம்பில் விம்மித் தவிக்கும்
என் சீவனை....!!
கரங்களில் ஏந்தி கரையேற்று.
இப்படியாகத்தான் உன்னை நேசிக்கிறேன்.
எப்படியேனும் எனைத் தேற்று.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
மிக மிக நன்றாக உள்ளது.காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு..
கவிதை பிடித்திருந்தால் இன்ட்லி, மற்றும் உலவு அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்
http://sakthistudycentre.blogspot.com
என்னோட பதிவுகள் அனைத்திற்கும் மறக்காமல் ஓட்டு போடுங்க தலைவா...
//எவ்விதமாய் மாசுப்பட்டேன்...?
எனக்கு மட்டும் கதவடைப்பு....?!//
//நீ என் மொழி... நீ என் வழி...
நீ என் விழி... நீ என் தழி...!! //
பின்றீங்களே அருமை...
//எவ்விதமாய் மாசுப்பட்டேன்...?
எனக்கு மட்டும் கதவடைப்பு....?!//
arumaiyaana varikal nanba.
kavithai muttrilum arumaiyaga vanthirukku...
aanma ragam urakka olikkirathu.
//பாவங்கள் படியாத இந்த மலரை
உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
காம்புகள் காயும் முன் காண்பாயோ...!//
ரொம்ப அருமையா இருக்கு அண்ணா .,
அதிலும் மேலுள்ள வரிகள் கலக்கல் .!
/இப்படியாகத்தான் உன்னை நேசிக்கிறேன்.
எப்படியேனும் எனைத் தேற்று. /
அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் தல...
how can i said,really i have no words nanbare. your way of writing,style,selective & excellent words,said "KAVINGAN"....DA. arumai... ungall aanma eraakam muzhuthum mika arumai.ovvoru vaarththaium azhaku.
the song of your aanmaa 'the smooth... nice.. melody. i enjoy this.keep... this excellency for ever
பாவங்கள் படியாத இந்த மலரை
உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
காம்புகள் காயும் முன் காண்பாயோ
nice words. keep it up
காதலும் கடவுளும் ஒன்றே....
சொல்கிறது வரிகள் !
இறை அருளை பரவிட பரப்பிடச் செய்கிறது உங்கள் கவிதை. நலிந்தவர்க்கு நம்பிக்கை ஊட்டும் உங்கள் எழுத்துக்கள். தொடர்க உங்கள் மேலான பணியை
Post a Comment