Saturday, December 11, 2010

"மகாகவிக்கு...!"


செந்தமிழ் செந்நாச் சுழல் பண்நாவுக்கரசே...!
செப்புமொழி ஈரொன்ப தாட்கொண்டு சிறப்பு
செம்மொழி  நம்மொழி தொன்மொழி நன்மொழி
இம்மைக்கும் மறுமைக்கும் யெனநவின்ற நாயக...!

மென்தமிழ் வண்டமிழ் பண்டமிழ் நுண்தமிழ்
கற்றமிழ் நற்றமிழ் கொற்றமிழ் பொற்றமிழ்
முத்தமிழ் மூத்ததமிழ் மூவேந்தர் முகிழ்தமிழ்
பெற்றமிழ்ப் பெற்ற பெருந்தமிழ் நாயக...!

செங்கோல் வளைத்த செருக்குடைத் தமிழ்
சென்ற விடத்து சிறப்புடைத் தமிழ்
நின்ற விடத்து நெஞ்சு  நிமிர்தமிழ்
கொற்றவன் கொலுவில் கோலோச்சுத் தமிழ்

அரங்கனும் சிவனும் அண்டியத் தமிழ்
அரசும் சிரம் தாழ்த்தும் ஒண்டமிழ்
அகத்தியல் புறத்தியல் ஆட்சியல் ஆய்ந்தமிழ்
வீரமும் ஈரமும் கண்ணாய்க் கொண்டமிழ்

பனைபார் தமிழ் மனைபார் தமிழ்
தனைப்பார் தமிழ் திணைபார் தமிழ்
நினைப்பார் தமிழ் அணைப்பார் தமிழ்
எனைபார் தமிழ் இணைபார் தமிழ்

சிந்துதடி அவன் தமிழ்ச் சிந்துக்கவி
சீட்டுக்கவி...என்றோர்ப் பாட்டுக் கவி
முண்டாசுக் கவி எங்கள் மூத்தக்கவி
மாநிலம் ஆண்ட எங்கள் மகாகவி...!!

நின்செந்நாத் திறம் என்நாப் பெற
நின் திலகத்தீ  விழிகள் பெற
கொட்டு முரசே..! கொட்டு முரசே..!!
திசை எட்டும் கொட்டு முரசே...!!!

( ** பிறப்பிறப்பை வென்ற பெருங்கவிக்கு
பிறந்ததின சமர்ப்பணம் **  தமிழ்க்காதலன் )

10 comments:

Kousalya Raj said...

பாரதியாரை நினைவு கூற செய்தமைக்கு வாழ்த்துக்கள். நன்றி

தினேஷ்குமார் said...

நண்பா தங்கள் செந்தமிழ் சொல்லாடலில் மெய்சிலிர்க்கிறது எம் உள்ளம்
மென்தமிழ் வண்டமிழ் பண்டமிழ் நுண்தமிழ்
கற்றமிழ் நற்றமிழ் கொற்றமிழ் பொற்றமிழ்
முத்தமிழ் மூத்ததமிழ் மூவேந்தர் முகிழ்தமிழ்
பெற்றமிழ்ப் பெற்ற பெருந்தமிழ் நாயக...!

தமிழ் தீயாய் சுடர் விடும்
தரணியாளும் மகாகவி
நம்மில் எங்கும் நிறைந்திருக்க
செந்தமிழ் கண்ட தமிழ் கடவுள்
பாரதத்தின் பாரதி தமிழ் வாழ
தினம் பிறக்கும் கவியே
சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்

Chitra said...

அருமையான கவிதை கொண்டு, முத்தமிழ் கவிக்கு ஒரு கவிதாஞ்சலி. வாழ்த்துக்கள்!

செல்வா said...

வாய்ப்பே இல்லை அண்ணா .!
ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு .
என்னையும் எழுத சொன்னீங்க .! என்னால அலுவலக வேலை காரணமாக
எழுத முடியலை அண்ணா .!!

வினோ said...

பாரதியாருக்கு என் வணக்கங்கள்... கவிதை அருமை...

Thoduvanam said...

மிக மிக அருமை ..கலக்கிட்டிங்க...

சுபத்ரா said...

பாரதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கவிதை தமிழில் ஒரு மணிமகுடம்.

'பரிவை' சே.குமார் said...

மகாகவிக்கு நீங்கள் சமர்பித்துள்ள இந்த முத்தமிழ்க் கவிதையை விட அருமையாக யாராலும் எழுத முடியாது. அருமையா வந்திருக்கு.

Unknown said...

தமிழ் கடவுளுக்கு எம் வணக்கங்கள்.
துவண்டு கிடந்த தமிழகத்தை, தமிழ் ஊற்றி , எழுப்பியவனல்லவா?

ஹேமா said...

வீரக் கவிஞனுக்கு வணக்கங்கள் !