Friday, December 03, 2010

கடவுளான காதல்....!


பெண்ணே....!
வடிவமற்று....
வார்த்தைகளில் வாழும் உனை
வரிக்கிறது மனம்....
உணர்வுகளாய்...!!

நேசமே...!
உருவமற்று....
உயிர் வருடும் உன்
நினைவுகளில்....
நெக்குருகும் நெஞ்சம்....
வடிக்கிறது....
கவிதைக் காதலாய்....!!

தீந்தமிழே....!
வரி, வடிவம் தாண்டி
உன் மீதான என் காதல்...
உயிர் பெறுகிறது...
அருவுருவமாய்...!!

பைங்கிளியே....!
அன்பை விதைக்கிறேன்....
அன்பே...! முளைக்கிறது.
பிம்பம் தெரியா....
பிரம்மன் படைப்போ... நீ..!

மலைத் தேனே...!
யூகிக்க மறுக்கும் மனம்...
தோற்றப் பிழைக் கருதி...!
தோன்றும் வரை பொறு...
தேற்றும் மனம் ....!

இனியவளே....!
கோலம் காட்டா உன்
எழில் கூட்டும் என் ஏக்கம்...!
இன்னவிதமென....
கற்பனை செய்யாத மனம்
கடவுள் சாட்சி.

கரும்பே...!!
கருத்தியம்பா...
கண்ணியமே...!
உன் மீதான காதல்
அருவுருவமாய்..... ! 

கடவுளாகிப் போன காதல்.

12 comments:

Chitra said...

இனியவளே....!
கோலம் காட்டா உன்
எழில் கூட்டும் என் ஏக்கம்...!
இன்னவிதமென....
கற்பனை செய்யாத மனம்
கடவுள் சாட்சி.


.....அழகான வரிகள் - கவிதையும்!

Ramesh said...

அருமையா எழுதியிருக்கீங்க நண்பரே..

அருண் பிரசாத் said...

//கடவுளாகிப் போன காதல்.//
சூப்பர்

ஹரிஸ் Harish said...

அழகான வரிகள்..வாழ்த்துக்கள்

செல்வா said...

//பைங்கிளியே....!
அன்பை விதைக்கிறேன்....
அன்பே...! முளைக்கிறது.
பிம்பம் தெரியா....
பிரம்மன் படைப்போ... நீ..!//

இந்த வரிகள் நல்லா இருக்கு அண்ணா ..!!

வினோ said...

/ பிம்பம் தெரியா....
பிரம்மன் படைப்போ... நீ..! /

எப்போ கண்டுபிடிபீங்க...

கவிதை அருமை...

Anonymous said...

//இனியவளே....!
கோலம் காட்டா உன்
எழில் கூட்டும் என் ஏக்கம்...!
இன்னவிதமென....
கற்பனை செய்யாத மனம்
கடவுள் சாட்சி.//

???

//கடவுளாகிப் போன காதல்//

அழகு.

எஸ்.கே said...

மீண்டும் அழகான காதல் கவிதை! அருமை!

ரொம்ப அருமையா உணர்ச்சி ததும்ப காதல் கவிதைகளை எழுதுகிறீர்கள்!

ஹேமா said...

காதலியை இப்படியெல்லாம் வர்ணிக்க முடியுமா.அத்தனை அன்பு இருந்தால் மட்டுமே முடியுமென்று நினைக்கிறேன் !

சுவடுகள் said...

தீந்தமிழே....!
வரி, வடிவம் தாண்டி
உன் மீதான என் காதல்...
உயிர் பெறுகிறது...
அருவுருவமாய்...!!

மிக அருமையா யோசிக்கிரிங்கப்பா.உங்கள் கவிதைகள் புதுமையாவும் வித்தியாசமாவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்.

Meena said...

இவள் யார்? கவிதைப் பெண்ணா? இல்லை களிப்பூட்டும் தமிழ் மொழியா?
விடுகதையாயிற்றே உங்கள் கவிதை!

தமிழ்க்காதலன் said...

@ அன்பு சகோதரி சித்ரா,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ பிரியமுடன் ரமேஷ்
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

@அருண்பிரசாத்
உங்களின் அன்புக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

@ ஹரிஸ்
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ செல்வகுமார்
தம்பிக்கு என் நன்றி.

@ வினோ
நீங்கதான் உதவணும் நண்பரே.

@ ராதை
கவிதை மட்டுமல்ல
காதலும் அழகுதான்

@ எஸ்.கே.
நன்றிங்க.

@ ஹேமா
ஆமாங்க, உங்களுக்கு புரியுது...
புரியவேண்டியவங்களுக்கு......?

@ சுவடுகள்
மிக்க நன்றி உங்களின் வருகை தந்த கருத்துகளுக்கு.

@ மீனா
முதன்முறையாய் வருகைதரும்.....
உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.