Friday, December 10, 2010

" இப்போதேனும்"....!


உன்னையே நேசித்து... நேசித்து
உரமேறிய என் தேகத்தின்...
எரியும் சிதையில் வெடிக்கும்
என் நரம்பின் வெடிச் சப்தங்கள்
கேட்கிறதா ... கண்மணி...!

உடைந்து நொறுங்கும்
எலும்பின் மூலங்களில்
உருகி ஒழுகும்...
என் காதல் பார்... இன்னெழிலே...!!

உன் மீதான என் காதலின் வண்ணங்களை
உப்புக்கள் வெடித்து ...
ஒளிர்ந்துக் காட்டுகின்றன...!
இப்போதேனும் புரிகிறதா...? என் நேசம்..

நெஞ்சமே...!!
எரிந்துக் கொண்டிருக்கும்
என் காதலில்....
எஞ்சியிருப்பது வேகாத...
என் நெஞ்சுக்கூடு மட்டுமே...!!

உன் நினைவுகளின் சேமிப்புக் கலன் அது.
உடைத்து விடப் போகிறான்....
ஓடிவரும் அந்த வெட்டியான்.
தடுத்து நிறுத்து என் தங்கமே.

முற்றி முதிர்ந்த என் கபாலத்தில்
கசிந்தொழுகும் என் "கவிதைக் காதல்"
கவனிக்க மறக்காதே.

பிரியமாய் இருந்த காலங்களில்
பிரிந்துக் கிடந்தவளே...!!
இப்போதேனும் உன் காதல் சொல்...!
இல்லையெனில்....
இன்னுமொரு சென்மம் எடுப்பேன்.



7 comments:

Kousalya Raj said...

வார்த்தைகள் கிடைக்கவில்லை அழகாய் வர்ணிக்க.....! கற்பனை செய்து பார்க்காமல் இப்படி பட்ட வரிகள் வராது...மனதை நொறுக்கி போடுகின்றன எல்லாம்....!!

எரிந்து கொண்டிருக்கும் ஒரு காதலின் கதறலாகவே எனக்கு கேட்கிறது.

சிவாஜி சங்கர் said...

:-) nice

Chitra said...

ஒரு காதல் உள்ளத்தின் கதறல்!

arasan said...

வலிகொண்ட நெஞ்சத்தின் துடிப்பான வரிகள்...

நல்ல இருக்குங்க ..

Anonymous said...

காதல்னாலே வலிதான் போல.

ஹேமா said...

காதலின் வேதனை நெருப்பாய்.படம் இன்னும் கவிதையைத் தொட வைக்கிறது !

தமிழ்க்காதலன் said...

@ கௌசல்யா
ஆமாங்க, எரிந்து கொண்டிருக்கிறது என்னோடு என் காதலும்.

@ சிவாஜி சங்கர்
எரியும் போது வரும் என் நண்பா. நன்றி.

@ அன்பு சகோதரி சித்ரா,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ அரசன்
முதன்முறையாய் வருகைதரும்.....
உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

@ ராதை
உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலா....?

@ ஹேமா
அத அனுபவிச்சாதாங்க புரியும்.