Friday, December 17, 2010

"கனவில்...!"


கனவில் நீ முத்தமிட்ட சப்தம் என்
காதில் கேட்டது கண்மணி, - அது
கவிதைக்கான பரிசா...!
காதலுக்கான முரசா...!!


உன் மௌனத்தில்தான்
என் காதல் உயிர்த்திருக்கிறது.
மௌனம் கலைத்துவிடாதே...


மகரந்தங்களை மூடிமறைக்கும்
மலரிதழாய்...!
உன் மௌனப் பூதம்
என் காதலுக்கு காவல் காக்கட்டும்.
உள்ளே உயிர்ப்பின் வாசம் நிறைந்து கிடக்கிறது.


இரவில் உறங்கும் பூமியில்
இறங்கும் பனியாய்...!
உன்னில் இறங்கும் என் காதல்.


ஏ...!
இறுகிய பாறையே....!!
உன்னில் என் விதைகள் வேர்விடும்.


நீ...!
இறுகியே இரு
இறுகிய மண்ணில்தான்
விதைகள் முளைக்கும்.
இளகிய மண்ணில் அல்ல.
***************************************************

8 comments:

A.M.Askar said...

என்னால் நேசிக்கப்படுகிறது.உங்கள் கவிதை வாழ்த்துக்கள்.....

A.M.Askar said...

என்னால் நேசிக்கப்படுகிறது.உங்கள் கவிதை வாழ்த்துக்கள்.....

A.M.Askar said...

என்னால் நேசிக்கப்படுகிறது.உங்கள் கவிதை வாழ்த்துக்கள்.....

A.M.Askar said...

என்னால் நேசிக்கப்படுகிறது.உங்கள் கவிதை வாழ்த்துக்கள்.....

செல்வா said...

//ஏ...!
இறுகிய பாறையே....!!
உன்னில் என் விதைகள் வேர்விடும்.
//

சூப்பர் அண்ணா ..!!

வினோ said...

காதல் விதை எப்படி இருக்கு தல

Meena said...

மௌனத்திலும் காதல் உதிக்கும் என்று
காட்டிக் கொடுத்தமைக்கு நன்றி.
நானும் மௌனப் புறா தான்
உங்கள் கவிதை எனக்கு ஒரு நல்ல மாதிரி.
விரைவில் சாரத்துக் கவியாய் உருவெடுப்பின்
ஆச்சரியப் படாதீர்

'பரிவை' சே.குமார் said...

அருமை நண்பா.