Sunday, December 19, 2010

"இரவின் இரகசியம்...!"

வினாடிகளில் மரிக்கும் வாழ்க்கை
வியப்பைத் தருகிறது எனக்கு.
வினாடிகளையே வாழத் தெரியா நமக்கு
நிமிடங்கள் எதற்கு..?

காலம்....
காத்திருப்பதற்கா...?
காக்க வைப்பதற்கா...?
கண்மணி...!
விரயமாகும் வாழ்க்கை வினாடிகளில்....

புல்லின் நுனியில் பனி சேர்வதும்
அல்லியின் இதழ்கள் அவிழ்ந்து கிடப்பதும்
மல்லிகை மலர்ந்து கிடப்பதும்
இந்த இரவில்தான்.

செடிகளுக்கு இருக்கும் இந்த பேரறிவு
இல்லாமல் போனதேன் நமக்கு..?
பறித்து வைத்தாலும் மலர்ந்து மணம் தரும்.
பருவம் தவறாது மலரும் குணம் மாறாது.

கதவடைத்து உறங்கும் நமக்கு
காற்றின் தூய்மை எதற்கு...?
பிரபஞ்ச இரகசியம் பிரசவிக்கும்
இரவில்....!
இறைந்து கிடக்கிறது வாழ்க்கை.

உலகத்தில்....
அமைதியின் ஆட்சி
அன்பு பிரவாகமெடுத்து
ஆனந்தம் குடிகொள்ளும் இரவு.

வாழ்க்கையின் உண்மைகள்
உறைந்து கிடக்கும்
இரவின் இரகசியம்
படிப்போம் வா...
என்னோடு.

காதல் வசம் கட்டுண்ட
உலகம் காட்டுகிறேன்.       
**********************************

5 comments:

'பரிவை' சே.குமார் said...

தமிழ்க்காதலன் எப்பவும் கவிதைக்காதலன்தான்.
அருமையான கவிதை.... அழகா வந்திருக்கு வாழ்த்துக்கள்.

வினோ said...

தல இரவு ஆராயிச்சி எப்படி இருக்குது?

Philosophy Prabhakaran said...

பிரபஞ்ச ரகசியம் பிரசவிக்கும் இரவு, அமைதியின் ஆட்சி போன்ற வார்த்தை பிரயோகங்கள் அருமை...

ஹேமா said...

ம்ம்...!

தினேஷ்குமார் said...

இரவின் இரகசியம்
இமைமூடா தவம்
உறங்கா விழிகளுக்கு