Saturday, December 18, 2010

"வஞ்சி..!"

பற்றி நடக்க 
ஒற்றை விரல்
நீட்டினால்...!
பட்ட இடத்தில்
"காமம்" என்கிறாய்...!

விரலின் "நிழல் பற்றி" 
விழுந்து விடாமல்
காக்கும் மர்மம்
நானறியேன் நறுமுகையே...!

மலரினும் மெல்லிய மேனி
மழைப் பொறுக்காதென
குடை கொடுத்தால்...
"இடிக்கவா"...! என்கிறாய்.
என் செய்வேன் செல்லமே...!
இடிந்து போகிறேன்.

பூம்பாதத்தொரு முள் தைக்குமோ...!
விழிகளில் தடம் பார்க்கிறேன்.
"விரசம்" என்கிறாய்.
விழிப் பிதுங்குகிறேன்.

சுவாசம் கூட தனித்திருக்க
காற்றின் கதவடைக்கிறாய்...
புகையும் மனம் புழுங்குகிறது.

மழையில் நனைதல் என் பழக்கம்.
"மோகம்" என்கிறாய்...
மூச்சடைக்கிறேன். 

விட்ட இடத்தில் விக்கி நிற்கிறேன்.
"விரகத்தில்" சொக்கி நிற்கிறேன் என்கிறாய்.

நிழல் கூட பட வேண்டாம்.
பாவி.....
"நினைப்பு" மட்டுமாவது ....?!
****************************************************

9 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன நண்பரே என்ன ஆச்சு.. ஏதாவது பிரச்சனையா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதையாக கூறிய விதம் அருமை...

Chitra said...

ஆஹா.....ஊடல்?

Anonymous said...

கவிதை அருமை.

தினேஷ்குமார் said...

தல என்ன ஆச்சு???

வரிகள் பேசுகின்றன

Kousalya Raj said...

ம்ம்...அழகிய காதல் !!

சுவடுகள் said...

பிஞ்சுத் தமிழில் உங்களின் வஞ்சி விரும்பத் தக்கவளாய் இருக்கிறாள். தங்களின் எளிய இனிய நடை மிக அருமை.

சுவடுகள் said...

# சுவாசம் கூட தனித்திருக்க
காற்றின் கதவடைக்கிறாய்...
புகையும் மனம் புழுங்குகிறது.
# விட்ட இடத்தில் விக்கி நிற்கிறேன்.
"விரகத்தில்" சொக்கி நிற்கிறேன் என்கிறாய்.
ஒவ்வொரு கவிதையும் விதவிதமான உணர்வுகளை எடுத்தியம்புகின்றன. அருமை, வாழ்த்துக்கள்.

dheva said...

கவிதையில் உணர்வுகள் வறட்சியாயும்...உணர்ச்சிகள் கூடுதலாகவும் இருப்பதாக படுகிரது......

உணர்வுள்ள கவிதைகள் எப்போதும் நிற்கும்..! இந்த கவிதை தற்போது நிற்கும்!