Saturday, December 04, 2010

"தமிழ்த் தீ...!!"

பிள்ளைப் பருவத்து
பிஞ்சுத் தமிழ்த் தாண்டி
கொஞ்சும் தமிழ் வேண்டி
குவலையும் வியக்க
பத்தின் தொடக்கத்தில்....
பாங்காய் தமிழ் சமைத்த
சிங்கத் தமிழா....!

எட்டயபுரம் ...
எட்டி நின்று...
கைக் கொட்டி நின்று...
பரிசு தந்து பாராட்டிய
செம்மலே....!

விளையும் பயிரின்
வீரியத்தைக் கவிதை
முனையில் காட்டி....
காதல் சுவைக் கூட்டி...
கண்ணம்மா "வாசம்" சுவாசித்த
கண்ணனே...!

மாந்தோப்பும்...
கருங்குயிலும்... நின்
காதல் கவிக்கு "பாடுபொருளாய்"
மந்தகாசமே...!

உருட்டும் விழிப்பார்வையில்
ஊர் மிரட்டும் "தமிழ்ப் பேசும்"
"சிங்கமே"...!
"தமிழ்ச் சங்கமே"...!!

நேரியப் பார்வையில்
மானிடம் காணும்
"மகா மனிதனே"...!
நீ அமைத்த சமுதாயம்
காணக் கண்கோடி வேண்டும்.

கவிதையில்....
எதிர்க் காலம் கண்ட...
"தீர்க்கத்தரிசியே"...!!

விடுதலை அடைந்து விட்டதாய்
விடுதலை தந்து சென்ற ....
"தமிழ்ச்செருக்கே"...!!
"கவிஞர்களின் மிடுக்கே"...!!

செல்லம்மாவின்
செழுமையை ....
தேசத்திற்காய்
செலவழித்த...
"பசும் பொன்னே"...! 

சிற்றுயிர்
சிலாகிக்கும் தோழனே....!
கவிதை.... மனிதனுக்கு மட்டுமா...?
காக்கைக்கும், குயிலுக்கும் ....
கவிதைச் சொன்ன
"கடுந்தமிழே"...!!

தானியம் இரைத்து
தரணியில் "அன்பை"
விதைத்த "சீவகாருண்யமே"...!

நீ...
தமிழ்த்... தீ...!!

8 comments:

தினேஷ்குமார் said...

அழகான கவிதை கவிதைக்கே கவி படைக்கும் ஆற்றல் உம்மில் தோழரே வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

நீ...
தமிழ்த்... தீ...!!

முனைவர் இரா.குணசீலன் said...

எனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் "தமிழ்". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.

எஸ்.கே said...

நீ...
தமிழ்த்... தீ...!!//

நீங்களும்....

வினோ said...

/ நீ...
தமிழ்த்... தீ...!! /

அருமை தோழா...

சுபத்ரா said...

எனக்குப் பிடித்த பாரதியைப் பற்றிய அழகானக் கவிதை.

ஹேமா said...

கவிக்கே கவியா ... அருமை !

தமிழ்க்காதலன் said...

@ தினேஷ்குமார்
அன்பு தோழமைக்கு மிக்க நன்றி.

@ முனைவர்.இரா.குணசீலன்
வணக்கம். உங்களின் முதல் வருகைக்கும்,
பிரியமான கருத்துகளுக்கும். தொடர்ந்திருங்கள்.

@ எஸ்.கே.
உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க.

@ வினோ
அன்பு தோழமைக்கு மிக்க நன்றி.

@ சுபத்ரா தேவி
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ ஹேமா
ஆமாங்க, மிக்க நன்றி.