Thursday, December 30, 2010

"என் செய்வாய்"...!


கண்ணே..!
கண்களை மூடிக் கொள்ளலாம்... 
கனவை என் செய்வாய்..!

பெண்ணே..!
மனதை மூடி மறைக்கலாம்...
நினைவை என் செய்வாய்..!

மலரே..!
உடம்பால் மறையலாம்...
உயிரை என் செய்வாய்..!

மருக்கொழுந்தே...!
ஓடி ஒளியலாம்...
உள்மனம் என் செய்வாய்..!

உணர்வே...!
ஊமையாய் நடிக்கலாம்...
உண்மையை என் செய்வாய்..!

சொந்தமே...!
மௌனமாய் இருக்கலாம்...
மனதை என் செய்வாய்...!

இனியவளே...!
இல்லை என்றொரு பொய் பேசலாம்...
இமைவடிக்கும் நீரை என் செய்வாய்..!

வாசமுல்லையே...!
வாய் மறுதலிக்கலாம்...
மெய் பேசுமே என் செய்வாய்..!

சகத்தியே...!
சரிந்ததும் சரிசெய்ய...
முந்தானை அல்ல காதல்..!
முன்வினை....
தொடரும்...!!

அகத்தியே...!
கண்ணுக்குள் ஒளிரும் காதல்...
பெண்ணுக்குள் மறையுமோ...?!
பசும்பொன்னுக்குள் தொலையுமோ..?!

பனி விலகலாம்...
பாசம் விலகுமோ..?!
பாறைக்குள்ளும் தேரையுண்டு
பாரடி பெண்ணே..!
பாருக்குள்ளே காதலிக்காதவர்
யாரடி கண்ணே..? 

6 comments:

சுவடுகள் said...

இல்லை என்றொரு பொய் பேசலாம்...
இமைவடிக்கும் நீரை என் செய்வாய்..!

வாய் மறுதலிக்கலாம்...
மெய் பேசுமே என் செய்வாய்..!

சகத்தியே...!
சரிந்ததும் சரிசெய்ய...
முந்தானை அல்ல காதல்..!

superb... ungal akath-thee,yaana அகத்தி
yum,சகத்தி yum mika azhaku.karuththaazham mikka azhakiya thamizh vaarththaikalai laavakamaai payan paduththu kireerkal mikka nandru

ஹேமா said...

சரிந்ததும் சரிசெய்ய...
முந்தானை அல்ல காதல்..!
முன்வினை....
தொடரும்...!!....

கோர்த்த‌ வ‌ரிக‌ளின் அழ‌கு.ர‌சித்தேன் !

தினேஷ்குமார் said...

இன்னும் என்ன செய்ய முடியும் நம்மால் தோழரே எல்லாம் அவன் செயல்

தினேஷ்குமார் said...

பனி விலகலாம்...
பாசம் விலகுமோ..?!
பாறைக்குள்ளும் தேரையுண்டு
பாரடி பெண்ணே..!
பாருக்குள்ளே காதலிக்காதவர்
யாரடி கண்ணே..?

உண்மையான உணர்வுள்ள வரிகள்

'பரிவை' சே.குமார் said...

வரிகள் அனைத்தும் அருமை.
கருமை நிறக்கண்ணனை ரொம்ப பிடிக்குமே?
இரண்டு பதிவில் அடுத்தடுத்து கண்ணன்...

Meena said...

//அகத்தியே...!
கண்ணுக்குள் ஒளிரும் காதல்...
பெண்ணுக்குள் மறையுமோ...?!
பசும்பொன்னுக்குள் தொலையுமோ..?!

பனி விலகலாம்...
பாசம் விலகுமோ..?!
பாறைக்குள்ளும் தேரையுண்டு
பாரடி பெண்ணே..!
பாருக்குள்ளே காதலிக்காதவர்
யாரடி கண்ணே..? //

காதலை மறக்கும் பெண்களும் பலர் உள்ளனர் . அவர்களைத் தட்டி எழுப்பும் குரல் உங்களது கவிதை