Wednesday, December 29, 2010

ஓ.... என் சீவநதியே...!


ஓ....
என் சீவநதியே...!
இதயப் பாலையில்
உயிர்ச்சுனையாய் நீ...!
நிற்காமல் ஓடிக்கொண்டிரு...

சோகம் சுட்டெரிக்கும்
என் பால் மேனியில்...
உன் தெளித்துளிகள்
தீர்த்தமாகட்டும்...!

சுழன்றடிக்கும் உணர்வுச்
சூறாவளிகளில்...!,- என்
கனவுகள் களவாடப்படுகின்றன.
ஆதியந்தம் என்னோடு
பந்தமாய் இரு.

சுடும் மணலும்
சுத்த வெளியும் தவிர
என்னிடம் எதுவுமில்லை.
உன் கரையோரம்
காத்திருக்கும் "எனதுயிர்"..!
கவனித்து செல்...!!

புதைந்து கிடக்கும்
மணல்வெளியில்...
புதைத்து வைத்திருக்கிறேன்
"இரகசியமாய்" உன்னை.
நீ என் "உயிரின் தேடல்"...!

வாடையிலும், கோடையிலும்
வளர்ந்து கொண்டே இரு.
பருவங்கள் சொல்லி
பயமுறுத்தாதே...!,-நான்
'பாடையில்' போகும் வரை...

சுழித்தோடும் உன்
நெளிவுகளில்தான்...
என் சொர்க்கம்...!
வளைவுகளில் என்
வாழ்வு சமைப்பவள் நீ..!!

உன் வருகைக்காய்
காத்திருக்கும் "என் காதல்"
இதயப் பாலையின் 
ஒரு மூலையில்...!
சருகுகளின் சப்தத்தில்
செவி சாய்க்க மறவாதே...!!

என்னில் காயும்
பால் நிலாவை
பரிசளிக்கிறேன்.
"பரிசுத்தமே"...!
புன்னகை சிந்து.

கதிரொளியில்...
காய்ந்து விடாமல்
மேகக்குடைப் பிடிக்கிறேன்..!
"பவித்திரமே"...!
மகிழ்ச்சி நுரைப் பொங்கு..!!

புனலாடை மேல்
மணலாடைப் போர்த்துகிறேன்...!
தனலாடைத் தவிர்க்க..!
மனவாடை மறக்காதே..
மரிக்கும் வரை.!...

நெகிழ்ச்சிக்கொள்ளும் தருணங்களில்
நீந்துகிறேன் நினைவலைகளில்....!
பூத்திருப்பாய் "என் புன்னகையே"...!!
"காத்திருப்பாய்"... என் காலம்..!!!

எப்போதும் என்னோடிரு...
ஓ...
என் சீவநதியே...!
நீ...!!
"என்னுயிர்".



10 comments:

சுவடுகள் said...

waw! eththanai poruththamaana thalaippu picture superb.really i enjoy your soul poems...keep this smaart you have a bright future definetly. 'THAMISH' i salute u pa.

சுவடுகள் said...

waaw! superb.. bicture, ungal kavithai, no... no... "its ur soul song" very nice pa. definitly u have a bright future. really i enjoy your songs.'THAMIZH'its truppa your words makes the real feel.

சுவடுகள் said...

சோகம் சுட்டெரிக்கும்
என் பால் மேனியில்...
உன் தெளித்துளிகள்
தீர்த்தமாகட்டும்...!

mikka nandru.(தெளித்துளிகள்)kanneerukkaana ungalin puthiya soll arumai kavignare

சுவடுகள் said...

புனலாடை மேல்
மணலாடைப் போர்த்துகிறேன்...!
தனலாடைத் தவிர்க்க..!
மனவாடை மறக்காதே..
மரிக்கும் வரை.!..
very nice manam silirkkirathu tamizh

நண்பன் said...

http://terrorkummi.blogspot.com/2010/12/blog-post_24.html

அடுத்து நீங்க தான் பேசிக்கிறாங்க. பார்த்து சூதனமா இருங்க. உங்கள் நலன் விரும்பி.

ஜெயசீலன் said...

நல்லக் கவிதை நண்பா... வாழ்த்துகள்.....
--
அன்பின்
ப. ஜெயசீலன்.

வினோ said...

நதியில் உயிர் தல....

'பரிவை' சே.குமார் said...

//புனலாடை மேல்
மணலாடைப் போர்த்துகிறேன்...!
தனலாடைத் தவிர்க்க..!
மனவாடை மறக்காதே..
மரிக்கும் வரை...//

Tamizh ungalidam tamil vizhaiyadukirathu...
padamum, kaviyum arumai...

ஹேமா said...

ஜீ(சீ)வநதி.....வார்த்தைகள் கூட நதி கலக்கும் காதலாய் !

Meena said...

//நெகிழ்ச்சிக்கொள்ளும் தருணங்களில்
நீந்துகிறேன் நினைவலைகளில்....!
பூத்திருப்பாய் "என் புன்னகையே"...!!
"காத்திருப்பாய்"... என் காலம்..!!!//
யாரைப் பார்த்து சொல்கிறீர்கள்? உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் பார்த்தா ?