Saturday, December 25, 2010

"புனிதருக்கு".....!

உலகத்தின் புனிதன் என
உன்னைத்தான் உலகம் சுட்டும்...!
பாவத்தின் சம்பளமாய்
தண்டனைகள் உனக்கு மட்டும்...?!

கடவுளின் மகனாம் நீ
கருணையின் உருவாம் நீ
கற்பித்தார்கள் உன்னை
கர்த்தராய் நின்னை....?!

வாழும் காலத்து வைதார்கள்,- உன்
வாழ்க்கை முடித்து வைத்தார்கள்.
வானுலகத் தந்தை என்றார்கள்,- மீண்டும்
வருவாய் என்றார்கள், வாசலில் நான்.....

மனிதம் பேசிய நீ புனிதன் ஆனாய்
மனிதம் எங்கே இங்கே...?
கனிவு பேசி நீ கருணாமூர்த்தியானாய்
கருணை எங்கே இங்கே...?

எங்கெல்லாம் நீ பேசப்படுகிறாயோ..?
அங்கெல்லாம் துப்பாக்கியின் தோட்டா முத்தங்கள்..?
அமைதி அங்கே ஆச்சரியக்குறி...!
நிம்மதி அங்கே கேள்விக்குறி...?

காலத்தை உன்னை வைத்து கூறு போட்டார்கள்
கலப்படம் செய்ய வசதியாய் ....
ஞாலத்தில் சத்தியம் நிலைக்கும்
நானறிவேன் நின் தூய அன்பை...!

உன் கட்டளைகள் மிதித்து மன்னிப்பு கேட்காமல்
உன் உணர்வுகள் மதித்து மனிதனாகிறேன்.
மண்ணில் நீ பிறந்த காரணம் யாரறிவார்...?
மனிதர் கற்பனைக்கு பிறக்காத கர்த்தா நீ...

உன் நினைவில்......

உன்னை நினைப்போருக்கு என் வாழ்த்துக்கள்.
இனிய கிறித்து நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்........
-தமிழ்க்காதலன்.    

10 comments:

செல்வா said...

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அண்ணா .!

//எங்கெல்லாம் நீ பேசப்படுகிறாயோ..?
அங்கெல்லாம் துப்பாக்கியின் தோட்டா முத்தங்கள்..?
அமைதி அங்கே ஆச்சரியக்குறி...!
நிம்மதி அங்கே கேள்விக்குறி...?//

உண்மைதான் அண்ணா .!

sathish said...

கடவுள் எழுதிய பதில் கண்டிப்பாக படியுங்கள்

ArunprashA said...

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Meena said...

கவிதை மிகவும் அருமை
நாம் அவதிப் படும் போது நம்மையே ஏன் நாம் ஏசுவின் வாரிசாக நினைக்கக் கூடாது
அவதிப் படுவதாலே பாவங்கள் நம்மை விட்டு நீங்குகின்றன. ஏசுவின் கட்டளையை
வாழ்வில் நடத்தி புண்ணியங்களை நமக்கும் பிறர்க்கும் சேர்த்திடவே ஏன் முயலக் கூடாது

Philosophy Prabhakaran said...

கொஞ்சம் லேட்டா கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...

சுவடுகள் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!

http://www.123greetings.com/send/view/12125610311040203136

இந்த வாழ்த்து மடலை பார்க்க.....

வாழ்த்துக்களுடன்.........

சுவடுகள்.

சுவடுகள் said...

கழி மகிழ் கவிஞரே..
நின் பந்தனங்கள்
தெளித் தேறலாகி
தெவிட்டாத தமிழென
நிலைத்தோங்க...
வாழ்த்துக்கள்.

பூதளம் சிறக்கத்
தமிழ் எழுதும்
புன்னகையே...!
ஆரமிர்தே...!!
நீ பூரணமாய்
பூம்பொளிவாய்
பூத்திருக்க
வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

இயேசு பிரானுக்கு உமது கவிதைச் சமர்பணம்...
அருமை நண்பா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்...

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_28.html

பாவாடை வீரன்... said...

உண்மையிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலுவையில் அறையப்பட்டால், எல்லோரும் சிலுவை சுமக்க கடமைப்பட்டவர்கள்
puthuvayal.blogspot.com