Saturday, December 25, 2010

"மக்கள் திலகத்துக்கு"...


'வறுமையில்' பிறந்து....
"வள்ளலாய்" வாழ்ந்து....
"செம்மலாய்" செழித்து...
'சமூகம் சமைத்த'
"அன்பின் அழகே"...!!

பிஞ்சுகளின் பசிப்பிணி நீக்க
பள்ளிகளில் சத்துணவு சமைத்த
"சமதர்மமே".....!

"காலணிகள்" தந்து
"காலணி"களை கரையேற்றிய
"தமிழ் படகே"....!

புத்தகம் தந்து புதிய
பரிணாமம் கண்ட
"புரட்சியே"...!

வறுமை விரட்ட
பதிமூன்று ஆண்டுகளாய்
அத்தியாவசியப் பொருட்களின்
அவசியம் உணர்ந்து
விலையில் கை வைக்காமல்
'கை'யோடு கைக்கோர்த்து
கை வீசி நடந்த
"கர்ம வீரரே"...!

நினைவிலும்...
கனவிலும்
ஏழைகளைத் தாங்கிய
"ஏந்தலே"....!

ஏர்முனையின்
கூர் மழுங்காது காத்த
"விவசாயி" நீ...!        

தேசம் பெரிதென
நேசம் வைத்த
நெஞ்சமே...!

காலங்கள் சென்றாலும்
"காலம் வென்ற
காவியம்" நீ....!!

நீயும் காமராசரும்
இல்லாத தமிழகம்
நினைக்க பயம் தரும்
உணர்வுகள்...!

இன்றைய எங்களின்
வாழ்வாதாரத்தை அன்றே
விதைத்து சென்ற வள்ளல்கள்
வாழ்க... வாழ்க...!

நீங்கள் மறையவில்லை....
எங்களின் இதயங்களில்....
எங்களின் நினைவுகளில்...
நீங்காமல் .....

ஒளியாய் ஒளிர்கிறீர்கள்.

உங்களின் பெருந்தன்மை
எப்போது வரும் இன்றைய
சிறுமை படைத்த
அரசியலுக்கு......!

ஏக்கங்களுடன்....
-தமிழ்க்காதலன். 

(டிசம்பர் 24 ம் நாள் "பாரத ரத்னா" திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளுக்கான சமர்ப்பணம்.)                  

4 comments:

சுவடுகள் said...

# அத்தியாவசியப் பொருட்களின்
அவசியம் உணர்ந்து
விலையில் கை வைக்காமல்
'கை'யோடு கைக்கோர்த்து
கை வீசி நடந்த
"கர்ம வீரரே"...!

# ஏர்முனையின்
கூர் மழுங்காது காத்த
"விவசாயி" நீ...!

# மிக்க அருமை கவிஞரே,தேசத்தலைவர்களையும், தேசத்தையும் கண்ணென போற்றும் தங்களின் உணர்வுகள் மதிக்கத் தக்கவை.தொடரட்டும் உங்களின் மேன்மை மிக்க 'பணி'.உங்கள் எழுத்துக்களின் மிளிர்வில் தமிழில் புது பொலிவு பூக்கட்டும். வாழ்த்துக்கள்!

Meena said...

சினிமாவிலும் கலக்கியவர் ஆயிற்றே முதல்வர்

Philosophy Prabhakaran said...

அன்னாருக்கு எனது அஞ்சலிகள்...

'பரிவை' சே.குமார் said...

அன்னாருக்கு எனது அஞ்சலிகள்...