Tuesday, December 21, 2010

"காதலே நீ..!!"


தலையறுபட்ட முண்டத்தின்
கழுத்தில் பீறிட்டுக் கிளம்பும்
குருதியில் ஒழுகும் உயிரில்
கசியும் என் பிரியங்கள்..!

உடலையும் தலையையும்
இணைக்கத் துடிக்கும்
நரம்புகளின் துடிப்பில்
தவிக்கும் என் நேசங்கள்..!

கடைசிமுறையாய்
உதடுகள் துடித்து
உச்சரிக்கும் உன் பெயரில்
உயிர்த்திருக்கும்
என் சுவாசம்..!

இமை மூடா விழிகளின்
கடையோரம் காத்திருக்கும்
நீர்த்துளியில் வழியும்
என் ஏக்கங்கள்..! 

நீண்டு விரைக்கும்
விரல் நரம்பில் தெரிக்கும்
முடிச்சில் தவிக்கும்
என் உணர்வுகள்..!

உயிர்ப் பிரியும் வலியில்
உருண்டுத் துடிக்கும்
அடிவயிற்றில் தவமிருக்கும்
என் தவிப்புகள்..!

இற்றுப்போகும் இதயத் துடிப்பில்
கடைசி முறையாய் கதறும்
என் துடிப்புகள்..!

காதலே....!!

மூளைக்குள் முடங்கும்
அறிவின் ஆதாரத் தேடலாய்
நீ...! 

குத்திட்டு நிற்கும் கேசங்களின்
பிரபஞ்சத் தூண்டலில்
பிழைத்திருக்கும் 
உயிர்ப்பாய்
நீ..!
 
ஓங்கி தரை மிதிக்கும்
குதிக்கால்களின் சதைக்கிழிசலில்
பூமியை முத்தமிடும்
இரத்தத் துளிகளில் மணமென
நீ..!

காதுக்குள் புடைக்கும்
நரம்பு மூளைக்கு
தூதனுப்பும்
உன் காலடியோசையில்
.........................................
....என் காதல்....!!! 

******************************************

9 comments:

எஸ்.கே said...

simply superb!

Philosophy Prabhakaran said...

இரண்டு கவிதைகளும் அருமை ஆனால் வன்முறை கொஞ்சம் தூக்கலாக தெரிகிறதே...

வினோ said...

வார்த்தைக்களின் துடிப்பில் சுவாசிக்ககிறது காதல்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

காதலின் வன்முறையும் கலந்து கவிதையாய்..

நல்லாயிருக்கு...

செல்வா said...

நல்லா இருக்கு அண்ணா ..!!

சுவடுகள் said...

# கடைசிமுறையாய்
உதடுகள் துடித்து
உச்சரிக்கும் உன் பெயரில்
உயிர்த்திருக்கும்
என் சுவாசம்..!

கவிஞரே உங்களின்... உங்களின்.... எழுத்துக்களை சுவாசிக்க, கல்லு மனம் கூட கற்பூரம் ஆகுமே.

சுவடுகள் said...

# காதுக்குள் புடைக்கும்
நரம்பு மூளைக்கு
தூதனுப்பும்
உன் காலடியோசையில்
.........................................
....என் காதல்....!!!

எத்தனையோ விதமான 'தூது' கள் படித்திருக்கிறேன், ஆனால் உங்களின் 'காதுக்குள் புடைக்கும் நரம்புகள்'...புதிது அருமை. மிக லாவகமாக எழுதுகிறீர்கள்.

சுவடுகள் said...

# தலையறுபட்ட முண்டத்தின்
கழுத்தில் பீறிட்டுக் கிளம்பும்
குருதியில் ஒழுகும் உயிரில்
கசியும் என் பிரியங்கள்..!

நண்பரே,மலர்களின் மணம்.... மனதில் சங்கமிக்க....காதல் கருவாகும் அன்றோ? அதில் ஏன் இந்தக் குருதிப்புனல்??! கனக்கிறது கவிஞரே நின் கண்ணீர். அனிச்சம் அதனை நின் நேசத்தால் நுகருங்கள். (குருதியால் அல்ல)... நன்று.

Meena said...

கவிதைத் துறையில் பீஹைச்டீ அளித்து
உங்களை வாழ்த்துகிறேன். இப்படிக்கு பிரியமுள்ள வாசகர்