Monday, December 20, 2010

"அதிகாலை"...


பனிப் படர்ந்த அந்த அதிகாலை....
சொந்த மண்ணை சுவாசித்தபடி
விடிந்தது ..., விழித்தேன்...!

மாமரங்களின் கிளைகளில்...
காட்டுக் குயில்களின் கானகுழலோசை..!
கொய்யா மரக்கிளைகளில்...
அணில்குட்டிகளின் மந்தகாச அழைப்பு...!
அவ்வப்போது காகங்களின் கரைதல்...
வீட்டுச் சேவலின் கம்பீரக் கூவல்...
மெல்ல புல்தரையில் கால் பதித்து நடந்தேன்.
மழைக்கால கதிரொளியில்...!

வேலியோர ஓணான்கள்
விரட்டிப் பிடித்தன.    
படபடக்கும் பட்டாம்பூச்சிகள்
பரபரப்பாய்...
வண்ணங்களை வாரி இறைத்து என்
எண்ணங்களில் நீர் இறைத்து சென்றன.
தவளைக்குட்டிகளின் தாவல்கள்...
தேரைகளின் பாய்ச்சலில்....
தெரிந்த தேடல்..!!
உடலோடு உடலிழைத்து
ஊர்ந்து சென்ற பாம்புகள்.

இப்படி....
என் கவனம் ஈர்த்த
எதுவுமே தனித்தில்லை
என்னைத் தவிர...!!
இரட்டைகள்தான் வாழ்க்கை எனில்
நான் மட்டும் ஒற்றையாய்..?
நீ இருந்தும்....
சொல்...!!   

7 comments:

Unknown said...

நல்கவிதை.

Meena said...

arumaiyaana kavithai. kavikkuyil sir neenga

Kousalya Raj said...

//இரட்டைகள்தான் வாழ்க்கை எனில்
நான் மட்டும் ஒற்றையாய்..?
நீ இருந்தும்....
சொல்...!! //

m...nice one...

ஹேமா said...

இயற்கையைக்கூட கொடுமையாய் உணரவைக்கும் காதலில் !

தினேஷ்குமார் said...

கலக்கல் தல தனிமையில் நீங்கள் மட்டும் தானா நம்மளும்தான்
தனிமையே இனிமையாக
தமிழ் எழுத்துக்கள் தரும் சுகம்
ஆஹா எவ்வளவு ஆனந்தம்
தனிமையே துணிந்து
வெல்லுவேன் உன்னை
தனியே நான் புலம்ப
தகர்கின்ற கதவுகளும்
இசையமைக்கும் இனிமை
என் தனிமை ........................

Philosophy Prabhakaran said...

ம்ம்ம்... நல்ல கவிதை...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லகவிதை....