Wednesday, December 15, 2010

"நேசக்காரி"...?!


நேசமே....
நெபுலாக்களைக் கூட  
நெருங்கிவிட முடிகிறது
என் எண்ணங்களால்....!

சூரியனை சுற்றி வர
நிலாக்களில் உலா போக
முடிகிறது மனதால்....!

பால்வெளித் தாண்டியும்
பறக்க முடிகிறது.
பிரபஞ்ச மையத்தில்
உட்கார முடிகிறது.
புயல் மையத்தில்
படுத்துறங்க முடிகிறது.
அண்டம் கடக்க...
ஒளியை பின் தள்ளி
பயணிக்க முடிகிறது.

அதிசயம் அன்பே...!
உன்னை மட்டும்....
நெருங்க முடிய வில்லை.
நீ என்ன பிரபஞ்ச புதிரா..?

பஞ்ச பூதத் தொகுப்பில்
பிறக்காதவளா நீ...?
பிரம்மனின் 'பின்' நவீனத்துவ
கவிதையா நீ ...!!  

கொள்ளவும் முடியாமல்..
தள்ளவும் முடியாமல், - உனை
அள்ளவும் முடியாமல்..
ஆட்கொள்ளவும் முடியாமல்....!

ஆராதிக்கிறேன்....
ஆலாதிக்கிறேன்....
ஆமோதிக்கிறேன்....
ஆட்சேபிக்கிறேன்....

தனிப் பொருளும் தராது
தான் ஒரு பொருளும் கொள்ளாது
கொண்டுகூட்டியும் பொருள்
கொள்ள முடியாமல்........!?

என்ன வகை இலக்கணம் நீ..?
புணர்ச்சி விதிகளும் பொருந்தாது...
எதிர்மறை பெயரெச்சமா...?
ஈறுகெட்ட எதிர்மறையா....?

கூறு கெட்டவளே.....!

குழப்பத்தில் இருக்கிறேன்
விளக்கி விடு.... என்னை
விளங்கி விடு...!!

உன்னை நினைத்தே சாக
ஒரு சந்தர்ப்பமா.....?!
வாழ்க்கை.     
*****************************************      

4 comments:

எஸ்.கே said...

வேலைப்பளு காரணமாக முன்பு போல் அதிகம் கமெண்ட் இட முடிவதில்லை! ஆனால் படித்து விடுகிறேன் அவ்வப்போது!

நான் படிக்க ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை தங்கள் திறன் முன்னேறி உள்ளது வெகுவாகத் தெரிகிறது! சிறப்பாக மேலும் முன்னேறுங்கள்! வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

இலையின் மீது பனித்துளி படம் சூப்பராக இருக்கிறது... கவிதையும் தான்...

'பரிவை' சே.குமார் said...

//நெருங்க முடிய வில்லை.
நீ என்ன பிரபஞ்ச புதிரா..?

பஞ்ச பூதத் தொகுப்பில்
பிறக்காதவளா நீ...?
பிரம்மனின் 'பின்' நவீனத்துவ
கவிதையா நீ ...!! //

arumaiyana varikal tamil...

தினேஷ்குமார் said...

தனிப் பொருளும் தராது
தான் ஒரு பொருளும் கொள்ளாது
கொண்டுகூட்டியும் பொருள்
கொள்ள முடியாமல்........!?

என்ன வகை இலக்கணம் நீ..?
புணர்ச்சி விதிகளும் பொருந்தாது...
எதிர்மறை பெயரெச்சமா...?
ஈறுகெட்ட எதிர்மறையா....?

நண்பரே தங்கள் சொல்லாடலில் மெய்மறந்து போனேன் திரும்ப திரும்ப படிக்கத்தூண்டுகிறது கவிதை வரிகள் எம்மை