Friday, December 10, 2010

"தமிழ் தந்தை"....!

என் தமிழ்த் தந்தையே....!

நின் பவித்திரமான பாதங்களுக்கு...
என் பாதாதிகேச வணக்கங்கள்.
பிறக்க கூடா இடத்தில்
பிறந்துவிட்ட காரணத்தால்....
பிரிவின் வலி பாடிய...
"தமிழ்ப் பொக்கிசமே"...!

அன்னைத் தமிழின்...
அகம் புறம் ஆண்டவனே...!!
இகத்தியல் இன்பம் தாண்டி...
எழுதுகோல் துன்பம் தாங்கிய....
"தமிழின் தலை மகனே"...!

புரட்சிக்கு பொருள் சொன்னப்
புயலே...! கண்களில் அனல் கக்கும்
கர்வமே...! காளிக்கும்... மூலிக்கும்
"தமிழ்க் கண்ட தத்துவமே"....!

நெஞ்சத்தின் திமிரை எல்லாம்
முறுக்கி முறுக்கி மீசையில்
காட்டிய... "என் தமிழே"...!

இராகத் தாளத்தோடு
பாடல் சொன்ன "பைந்தமிழே"...!

கோணங்கியாய் கொக்கரித்த...
"கொண்டைச் சேவலே"...!
ஏனோ... இன்னும் இங்கே
விடிய வில்லை...!!

செல்லம்மாவை...
சேர்ந்தப் பின்னும்
கண்ணம்மாவை காதலித்த
"கண்ணியமே"...!
காதல்....
உறவல்ல....!
"உணர்வு"... எனச் சொன்ன
"ஏந்தலே"...!

பாஞ்சாலிகளை...
பராசக்தியாய்....
பார்த்த "பரம்பொருளே"...!

தேசத்தை காதலிக்க
கற்றுத் தந்த "கௌரவமே"....!
நேசத்தை விதைத்து சென்ற
"வீரிய வித்தே"...!

பத்திரிக்கைத் தமிழின்
"சிம்மாசனச் சிங்கமே"....!
நூல் மாற்றி நூதனம் கண்ட
"பூணூல் புரட்சியே"...!

யாக்கையை நேசித்த....
தமிழ்க் காக்கையே....!
"காந்தியின் கௌரவம்"
கிழித்த "தமிழ்க் கத்தி"
இரண்டு...!
ஒன்று நீ...!
இன்னொன்று ...
பகுத்தறிவு பகலவன்...
"பெரியார்"...!

உலகில் காந்தியின் பிழைத்
திருத்திய பெரியார்....
"தமிழ்த் தாடி" வைத்த
"பெரியார்" மட்டுமே...!

நீ மூழ்கி முத்தெடுத்த...
முத்தமிழ்ச் சங்கமத்தில்...
கரையில் நின்று...
சிப்பிகள் சேமிக்கிறேன்...
நான்...!

என் வீரத் தமிழே...!
எங்கள் பாரதி...
வாழ்த்து... ! எங்களை.
வளர்ந்து காட்டுகிறோம்....!!
இன்னும் இங்கே இருக்கும்
"விவேகானந்தன்களை"
வெளிக் காட்டுகிறோம்....

அன்னைத் தமிழே
வாழிய நீ...! பிரபஞ்சத்தின்
எதிரொலியாய்....!

வணங்குகிறேன்.

8 comments:

Anonymous said...

//நெஞ்சத்தின் திமிரை எல்லாம்
முறுக்கி முறுக்கி மீசையில்
காட்டிய... "என் தமிழே"...!//

செம கற்பனை!!

//ஏனோ... இன்னும் இங்கே
விடிய வில்லை...!!//

ம்ம்ம்..

//நீ மூழ்கி முத்தெடுத்த...
முத்தமிழ்ச் சங்கமத்தில்...
கரையில் நின்று...
சிப்பிகள் சேமிக்கிறேன்...
நான்...!//

நானும்..

பாரதிக்கு (நாளை) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

தினேஷ்குமார் said...

தமிழுக்கு தாயுமாகி
தந்தையுமாகி
தமிழ் காக்கும்
மீசையாரே உம் பாதம் பணிந்தோம் ஐயோ
வாழ்த்து கூறி
வளர்த்து விடுமையா எங்களை

Philosophy Prabhakaran said...

அய்யாவிற்கு பொருத்தமான தலைப்பு...

Unknown said...

பாரதியார் தமிழர்களின் அடையாளம், சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட, தமிழ், தமிழர் வாழ்வியலை அழகாய், ஆக்ரோஷமாய், உணர்ச்சிப்பிழம்பாய் வெளிப்படுத்திய பாரதியை நினைவு கூர்ந்ததில் உங்களுடன் நாங்களும் இணைகிறோம்..

பதிவுக்கு வாழ்த்துக்களும், வாக்குகளும்...

நிலாமகள் said...

தேசத்தை காதலிக்க
கற்றுத் தந்த "கௌரவமே"....!
நேசத்தை விதைத்து சென்ற
"வீரிய வித்தே"...!

பாரதி'யார்' என்ற பறை முழக்கம் அபாரம்!

'பரிவை' சே.குமார் said...

பொருத்தமான தலைப்பு...

ஹேமா said...

தலை தாழ்த்தி வணங்கிக் கொள்வோம் நினைவோடு !

தமிழ்க்காதலன் said...

@ ராதை
உங்களின் ரசனைக்கு என் நன்றிகள்.

@ தினேஷ்குமார்
அன்பு தோழமைக்கு மிக்க நன்றி.

@ பிரபாகரன்
உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.

@ பாரத்... பாரதி...
உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க.

@ நிலாமகள்
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ சே.குமார்
நண்பா கருத்துக்கு நன்றி.

@ ஹேமா
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.