அரும்பும் முன் கறுகும்
மொட்டாய் என் காதல்...
ஆனதெப்படி..?
இப்போதுதானே....
மனச்செடியின்...
முதல் பூ...!!
உரமாக காம்பிருந்தும்
உதிர்ந்ததெப்படி...?
கருவில் சிதையும் கருவாய்
உதிரத்தில் கரைந்து...
குற்றுயிராய் துடித்து...
குறுதியாய்க் கொப்பளிக்கிறது.
பிரியமே...!
புரியாமல் போனதெப்படி...?
விதைத்த விதை முளைத்து
மூன்றாம் இலை காணும்முன்
தீயில் கருகக் காரணம் என்ன...?
நோகுமென் நெஞ்சம் நிதம்
காதல் தீயில் கருகச் சம்மதமோ...!?
காணும் யாவும் நீயாய்...
நீ மட்டும் காணாமல்...!!
சித்திரமே...!!
நின்னை நினைத்தே விடியல்கள்...!
நினைவுப் பால்வெளியில்...
விடிவெள்ளி நீ....!!
திசை மட்டும் காட்டுகிறாய்.
கரை சேர்க்க மாட்டாயோ....?
காதலே ...!
கரைகிறேன்.
திசுக்கள்தோறும் உருகுகிறேன்...!
உயிரணுக்கள் யாவும்..
உன்னைச் சுற்றும்...
உண்மையறியா உன்மத்தமா நீ....?
உன்னை கருவரைக்குள் வைத்த
என் காதலை...
கருவருக்க எப்படி முடிந்தது உன்னால்...?
என்னில் வேரூன்றி உன்மேல்
படர்ந்த காதலின்...
கிளைகளை வெட்டியிருக்கிறாய்.
வேர்கள் இன்னும் ஆழமாய்....
என்னில்...!!!
மொட்டாய் என் காதல்...
ஆனதெப்படி..?
இப்போதுதானே....
மனச்செடியின்...
முதல் பூ...!!
உரமாக காம்பிருந்தும்
உதிர்ந்ததெப்படி...?
கருவில் சிதையும் கருவாய்
உதிரத்தில் கரைந்து...
குற்றுயிராய் துடித்து...
குறுதியாய்க் கொப்பளிக்கிறது.
பிரியமே...!
புரியாமல் போனதெப்படி...?
விதைத்த விதை முளைத்து
மூன்றாம் இலை காணும்முன்
தீயில் கருகக் காரணம் என்ன...?
நோகுமென் நெஞ்சம் நிதம்
காதல் தீயில் கருகச் சம்மதமோ...!?
காணும் யாவும் நீயாய்...
நீ மட்டும் காணாமல்...!!
சித்திரமே...!!
நின்னை நினைத்தே விடியல்கள்...!
நினைவுப் பால்வெளியில்...
விடிவெள்ளி நீ....!!
திசை மட்டும் காட்டுகிறாய்.
கரை சேர்க்க மாட்டாயோ....?
காதலே ...!
கரைகிறேன்.
திசுக்கள்தோறும் உருகுகிறேன்...!
உயிரணுக்கள் யாவும்..
உன்னைச் சுற்றும்...
உண்மையறியா உன்மத்தமா நீ....?
உன்னை கருவரைக்குள் வைத்த
என் காதலை...
கருவருக்க எப்படி முடிந்தது உன்னால்...?
என்னில் வேரூன்றி உன்மேல்
படர்ந்த காதலின்...
கிளைகளை வெட்டியிருக்கிறாய்.
வேர்கள் இன்னும் ஆழமாய்....
என்னில்...!!!
7 comments:
உணர்வுகளை வார்த்தைகளாக வடித்திருக்கிறீர்கள்... நல்ல கவிதை...
ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை...
காதலின் பார்வையில்
கருகும்முன் நிலையறிந்து
நிம்மதி பெருமூச்சு
விட்டால் என்ன
புரியா காதல்
அறியாமனமும்
படைத்தவளோ அவள்
உன்மை காதல் பிழைத்தது
அவள் ஏற்காததால் ............
என்னில் வேரூன்றி உன்மேல்
படர்ந்த காதலின்...
கிளைகளை வெட்டியிருக்கிறாய்.
வேர்கள் இன்னும் ஆழமாய்....
என்னில்...!!!
...... உங்கள் கவிதைகள், மெருகேறி கொண்டே வருகிறது.
Very nice.
திசுக்கள்தோறும் உருகுகிறேன்...!
உயிரணுக்கள் யாவும்..
உன்னைச் சுற்றும்...
நல்ல வார்த்தைகள்..
காதலின் கருவும்.அதை அழித்த காதலியுமாய்க் கவிதை கனக்கிறது !
@ பிரபாகரன்
உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.
விரைவில் இணைக்கப் படும்.
@ தினேஷ்குமார்
அன்பு தோழமைக்கு மிக்க நன்றி.
என் வலிகள் உங்களுக்கு புரிந்த அளவுக்கு
அவளுக்கு.....?!
@ அன்பு சகோதரி சித்ரா,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்
@ பாரத்... பாரதி...
உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க.
@ ஹேமா
அட இந்த விசயம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா...
Post a Comment