Thursday, December 09, 2010
"ஒரு நாள் பயணத்தில்....!"
முகப்பரு முளைக்கும் வயதில்லைதான்....
இருந்தும் முளைத்திருக்கிறது
முகப்பருவாய்.....
காதல்...!!
*************************************************************
எப்போதோ பூக்கப் போகும்
பூக்களுக்காய்....
பன்னிரண்டு ஆண்டு காலம்
உயிர்த்திருக்கும்.....
"குறிஞ்சி....!"
செடித் தரும் நம்பிக்கையில்....
நானும் காத்திருக்கிறேன்.
உனக்குள் பூக்கும் .....
என் காதலுக்காய்....!!
*************************************************************
உருண்டோடும் இரும்புச் சக்கரங்களின்
"தடக்...தடக், தடக்....தடக்" சப்தத்தில்
என் இதயத் துடிப்பு கேட்கிறதா கண்மணி...!!
**************************************************************
ஒவ்வொரு நிறுத்தத்திலும்....
உன் பார்வை சன்னல் வழியே
வெளி நோக்கட்டும்...!
உன் கண்கள்...
ஏதேனும் ஒரு நிறுத்தத்தில்
எனை சந்திக்கக் கூடும்...!!
**************************************************************
கழுத்து வரைப் "போர்த்திக் கொள்"
கண்மணி...!!
அணைத்துக் கிடக்கும் பாக்கியம்
அதற்கேனும் கிடைக்கட்டும்...!!
*************************************************************
காதலே....!!
கற்றைக் குழலில்....
கழலும் உன் ஒற்றைக் குழல் தருவாயோ...?!
உன் மணம் தேடும் என் நாசிக்கு மருந்தாக...!!
*************************************************************
மனிதனுக்குக் கடவுள் தந்த புற்றுநோய்
காதலா...! அசுர வளர்ச்சி அபாரம்...!!
தினம்...
என்னைத் தின்று தன்னை வளர்க்கிறது...!!!
**************************************************************
உனக்கென்ன ஒய்யாரமே....!
ஒற்றை வார்த்தையில் நிறுத்திக் கொள்கிறாய்...
ஏற்றமிரைத்தவன் பாடி நிறுத்தியப்
பாடல் வரிக்கு... மீதி வரித் தேடிய
கம்பனாய் நான்...!! இதோ...
காகிதங்கள் நிரப்புகிறேன்...!!
***************************************************************
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
மனிதனுக்குக் கடவுள் தந்த புற்றுநோய்
காதலா...! அசுர வளர்ச்சி அபாரம்...!!
தினம்...
என்னைத் தின்று தன்னை வளர்க்கிறது...!!!
....Superb!
அனைத்தும் அருமை.
Superb...
//எப்போதோ பூக்கப் போகும்
பூக்களுக்காய்....
பன்னிரண்டு ஆண்டு காலம்
உயிர்த்திருக்கும்.....
"குறிஞ்சி....!"
செடித் தரும் நம்பிக்கையில்....
நானும் காத்திருக்கிறேன்.
உனக்குள் பூக்கும் .....
என் காதலுக்காய்....!!
செம...
//மனிதனுக்குக் கடவுள் தந்த புற்றுநோய்
காதலா...! அசுர வளர்ச்சி அபாரம்...!!
தினம்...
என்னைத் தின்று தன்னை வளர்க்கிறது...!!!
கலக்கல்...
அருமையாய் இருக்கிறது நண்பரே..
அனைத்தும் அருமை..:)..
எதையும் பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு அத்தனையும் கவித்'தேன்'.
நல்ல கவிதைகள்....
தல உங்க வீட்டுக்கு மாப்பிள்ளை பார்க்க இல்லை இல்லை காதலன் பார்க்க ஆள் வராங்க பாருங்க...
காதல் வந்துவிட்டாலே கற்பனைகளும் சேர்ந்தே வந்துவிடுகிறது.பித்தாய் புலம்பும் வரிகள் எல்லாமே காதல் காதல் !
@ அன்பு சகோதரி சித்ரா,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
@ ஐயா காளிதாசு அவர்களுக்கு
உங்க அன்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க.
@ பிரியமுடன் ரமேஷ்
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
@ ஹரிஸ்
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
@ சே.குமார்
நண்பா கருத்துக்கு நன்றி.
@ வினோ
வர்றது என்னோட காதலிதானே....
@ ஹேமா
அது படுத்தும் பாடு.... ம் ம் ம் என்ன பண்ணலாம்....?
Post a Comment