Sunday, December 05, 2010

"உயிரெழுத்து"...!


அகமென்றான்...
அன்பென்றான்...
அனைத்துமென்றான்...

ஆனந்தமென்றான்...
ஆருயிரென்றான்...
ஆரணங்கென்றான்...

இனிதென்றான்....
இன்பமென்றான்...
இன்னமுதென்றான்...

ஈனுமென்றான்...
ஈதலென்றான்...
ஈசனிகரென்ரான்...

உணர்வென்றான்...
உயிரென்றான்...
உன்னதமென்றான்...

ஊனென்றான்...
ஊற்றென்றான்...
ஊழென்றான்...

எழிலென்றான்...
எனதுயிரென்றான்...
எண்சுவையென்றான்...

ஏகாந்தமென்றான்...
ஏந்திழையென்றான்...
ஏற்புடைத்தென்றான்...

ஐம்புலனென்றான்...
ஐந்தொழிலென்றான்...
ஐம்பூதமென்றான்...

ஒல்குதலென்றான்...
ஒய்யாரமென்றான்...
ஒப்பற்றதென்றான்...

ஓங்குதலென்றான்...
ஓங்காரமென்றான்...
ஓருயிரென்றான்...

ஓளடதமென்றான்...
ஓளவைத்தமிழென்றான்...
ஓளகாரமென்றான்...

ஃதென்றான்...
ஃதெனதென்றான்...
ஃதே என்றான்...

பாவி...!
எனைப் பாழும் கிணற்றில்
தள்ள....!!
******************************************

12 comments:

Kousalya Raj said...

நிஜமா தமிழ் காதலன் தான்.....! மிகவும் அருமையாக இருக்கிறது... பல முறை படிக்க வைக்கிறது நம் தமிழ்....!

Unknown said...

உயிர்க்கவிதை நன்று.

வினோ said...

/ பாவி...!
எனைப் பாழும் கிணற்றில்
தள்ள....!! /

வெளிய வந்தீங்கள ?

கவிதை அருமை...

மதுரை சரவணன் said...

அருமை.வாழ்த்துக்கள்

ஹரிஸ் Harish said...

ஆகா..புதிய ஆத்திச்சூடி...சூப்பர்,..

Unknown said...

அருமை.
உயிரெழுத்துக்களுடன் ஒரு உயிர் கவிதை.
வித்தியாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

//பாவி...!
எனைப் பாழும் கிணற்றில்
தள்ள....!!//

சுளீர்..

சுவடுகள் said...

ஒவ்வொரு வார்த்தையிலும் மிளிர்கிரீர்,தங்களின் மிடுக்குத் தமிழில்... உயிர் சிலிர்க்கிறது. வளர்க!

Chitra said...

அகர வரிசையில், அருமையான கவிதை.

செல்வா said...

//உணர்வென்றான்...
உயிரென்றான்...
உன்னதமென்றான்...//

உங்க வரிசை கூட நல்லா இருக்கு அண்ணா ..!!

ஹேமா said...

அழகு தமிழ் !
தேன் தமிழ் !
வண்ணத் தமிழ் !
வாழ்வே தமிழ் !

தமிழ்க்காதலன் said...

@ கௌசல்யா
உங்க அன்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க.

@ கலாநேசன்
முதன்முறையாய் வருகைதரும்.....
உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

@ வினோ
இன்னும் இல்ல வினோ....
உள்ளதான் கிடக்கிறேன்.

@ மதுரை சரவணன்
முதன்முறையாய் வருகைதரும்.....
உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.

@ ஹரிஸ்
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
இன்னும் கைவசம் நிறைய இருக்கு.
தவறாம படிங்க...

@ பாரத்... பாரதி...
உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க.

@ சுவடுகள்
மிக்க நன்றி உங்களின் வருகை தந்த கருத்துகளுக்கு.

@ அன்பு சகோதரி சித்ரா,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ செல்வகுமார்
தம்பிக்கு என் நன்றி.

@ ஹேமா
நல்லாவே வாழ்த்துறீங்க...
மிக்க நன்றி.