Saturday, December 04, 2010

"உயிர்க்க விடு"...!



கண்மணியே....!
காட்டுத் தீயாய்... எனைப்
பற்றி எரிக்கும் உந்தன் மீதான
காதல்....!
உன்னை மட்டும் "தீண்டாமல்"
போவதெப்படி....?

காதலே...!
கழனி உழுதவனை...
கவிஞனாக்கும் வல்லமை
உனக்கு உண்டெனில்....
கரையா கல்நெஞ்சக்
காதலி...!
அவள் இதயம் புக
உன்னாலாகாதா...?

உருகிய இரும்பாய்...
உருகும் இதயமே....!
உன்னவளிடம் ...
உன் காதல் சொல்ல....
உள்வாங்கும் மர்மமென்ன...?

என்னை மொய்க்கும் காதல்
உன்னை மொய்க்காதோ...!
என் இதயம் கிழிக்கும்
உன் நினைவுகள்....!
உனக்குள் புதையாதோ...!

உன்னோடு பேசும்
ஒவ்வொரு முறையும்....
சொல்லத் துடிக்கும்
உதடுகளின் உயிர்ப்பை
மரணிக்க செய்யும் காரணம் எது...?

என்னில் நிலைக் கொண்ட
காதல் புயலே...! ஒன்று
கரை கடந்து விடு...! இல்லை
கரை கடக்க விடு...!!
"மையம்" அசையா
மாயம் என்ன...?

யாதுமாகி என்னில்
பூத்திட்ட உயிர்ப் பூவே...!
உன்னை சுவாசிக்கிறேன்...!
உன்னையே நேசிக்கிறேன்...!!
உயிர்த்து விடு.... என்னை
உயிர்க்க விடு...!

இன்னும் எத்தனை நாள்
இப்படி... ?!

சொல்லாமலே....!!!

11 comments:

செல்வா said...

//காதலே...!
கழனி உழுதவனை...
கவிஞனாக்கும் வல்லமை
உனக்கு உண்டெனில்....
கரையா கல்நெஞ்சக்
காதலி...!
அவள் இதயம் புக
உன்னாலாகாதா...?//

செம செம ., கலக்கலா இருக்கு அண்ணா .!
ஆனா பாருங்க எத்தனையோ செய்யுற காதல் அவுங்க இதயம் மட்டும் போறதில்லை ..?

செல்வா said...

//உன்னையே நேசிக்கிறேன்...!!
உயிர்த்து விடு.... என்னை
உயிர்க்க விடு...!//

அருமையா இருக்கு அண்ணா ..!

எஸ்.கே said...

//யாதுமாகி என்னில்
பூத்திட்ட உயிர்ப் பூவே...!
உன்னை சுவாசிக்கிறேன்...!
உன்னையே நேசிக்கிறேன்...!!
உயிர்த்து விடு.... என்னை
உயிர்க்க விடு...!

இன்னும் எத்தனை நாள்
இப்படி... ?!

சொல்லாமலே....!!!//

அருமை நண்பரே!

Chitra said...

அருமையான கவிதை!

'பரிவை' சே.குமார் said...

//என்னை மொய்க்கும் காதல்
உன்னை மொய்க்காதோ...!
என் இதயம் கிழிக்கும்
உன் நினைவுகள்....!
உனக்குள் புதையாதோ...!//
ரசித்தேன்...

நல்லா வந்திருக்கு தமிழ்..

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை... ஏன் இன்னமும் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையா இருக்கு நண்பரே!

சுபத்ரா said...

இதுக்கு நான் என்ன கமெண்ட்.......

சுவடுகள் said...

உருகிய இரும்பாய்...
உருகும் இதயமே....!
உன்னவளிடம் ...
உன் காதல் சொல்ல....
உள்வாங்கும் மர்மமென்ன...?

உதடுகளின் உயிர்ப்பை
மரணிக்க செய்யும் காரணம் எது...?

மிகவும் ரசிக்க செய்யும் வரிகள் நன்று.

ஹேமா said...

காதலின் ஆழம் அத்தனை வரிகளும் !

தமிழ்க்காதலன் said...

@ செல்வகுமார்
தம்பிக்கு என் நன்றி.

@ எஸ்.கே.
உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிங்க.

@ அன்பு சகோதரி சித்ரா,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ சே.குமார்
நண்பா கருத்துக்கு நன்றி.

@ பிரபாகரன்
உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.
விரைவில் இணைக்கப் படும்.

@ வெறும்பய
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ சுபத்ரா தேவி
கவிதை கேட்டா தரலாம். கருத்தும் கேட்டா எப்படி...?
உங்களின் உணர்வுகளை வெளியிடுங்கள்.

@ சுவடுகள்
மிக்க நன்றி உங்களின் வருகை தந்த கருத்துகளுக்கு.

@ ஹேமா
ஆமாங்க, மிக்க நன்றி.