Thursday, December 02, 2010

"ஒத்திகை"

பூம்பெழில் புன்னகையே....

யாருமறியாமல் இறங்கும் பனியாய்
யானறியா தருணத்தில் என்னுள்
நிலைக் கொண்ட நீர்த் துளி நீ...!

இதயக்கலப்பில் நிகழும் துடிப்பில்
உதிரக்குழாய் முழுக்க
உன் நினைவலைகள்...!

வினாடிக்கு நூறுமுறை
உன்னை உச்சரிக்கும் என் உதடுகள்...!

மூளையின் மையத்தில்...
முக்காலிப் போட்டமர்ந்து....
மூச்சுக் குழல் வழி....
நாதசுரம் ஊதுகிறாய்....!!

உன் நினைவில்....
கடிக்கப் படும் நகங்களின்
கிழிசலில் இதழ் வடிக்கும்
கண்ணீர்க் குறுதிகள்...!!

மாறிமாறித் தாக்கும்
உன் நினைவில்.......
மத்தளம் வாசிக்கும்
மனம்.....!

"அன்பை"
உச்சரிக்கத் எத்தனிக்கும் வினாடிகளில்...
உமிழ்நீர் விழுங்கும் "உணர்ச்சிகள்"
நீயறியாய்....!

சொல்லவும்...., வைத்துக்
கொள்ளவும் இயலா வார்த்தையில்...
வாழ்க்கைத்  தடுமாற்றம்....!
அவத்தை ஒரு ஆனந்தம்...!!

என்னைப் புரிய...
எத்தனை நாளாகுமடி....
கண்ணே....!!
வாழுங்கால் வருவாயோ...!
வானிலை அறிக்கை ஆவாயோ...!!!

உன்னோடு வாழும்....
ஒத்திகையில்....!!
கழியும்...என்
காலம்...!!

10 comments:

அருண் பிரசாத் said...

முழுதாய் ஆக்ரமிச்சு இருக்காங்கனு சொல்லுங்க

Chitra said...

மாறிமாறித் தாக்கும்
உன் நினைவில்.......
மத்தளம் வாசிக்கும்
மனம்.....!


....அருமையாக கவிதை எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

அருண் பிரசாத் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html

நன்றி.

சுபத்ரா said...

//வாழுங்கால் வருவாயோ...!
வானிலை அறிக்கை ஆவாயோ...!!!//

அதுசரி... :-)

பவள சங்கரி said...

நல்ல கவிதைங்க......தேர்ந்தெடுதத வார்த்தைகள்.

Ramesh said...

//"அன்பை"
உச்சரிக்கத் எத்தனிக்கும் வினாடிகளில்...
உமிழ்நீர் விழுங்கும் "உணர்ச்சிகள்"
நீயறியாய்....!

உன்னோடு வாழும்....
ஒத்திகையில்....!!
கழியும்...என்
காலம்...!!

செம.. அசத்தலான வரிகள்.. கலக்கிட்டீங்க..

ஹேமா said...

பிரமை... ஒத்திகைன்னு இப்பிடியே இருந்தா எப்பிடி !

வினோ said...

/ உன்னோடு வாழும்....
ஒத்திகையில்....!!
கழியும்...என்
காலம்...!! /

தல ஒத்திகை போதும்...

எஸ்.கே said...

மிகவும் அற்புதம்!!!!

தமிழ்க்காதலன் said...

@அருண்பிரசாத்
உங்களின் அன்புக்கும், கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

@ அன்பு சகோதரி சித்ரா,
நன்றி.

@ சுபத்ரா தேவி
நம்ம நிலைமை அப்படிங்க.

@ நித்திலம்
மிக்க நன்றி.

@ பிரியமுடன் ரமேஷ்
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

@ ஹேமா
ஆமாங்க என்ன பண்றதுன்னு புரியல.

@ வினோ
ஒத்திகை நிறுத்திக்கவா நண்பா.

@ எஸ்.கே.
நன்றிங்க.