ஒழுக ஒழுகும் ஒழுக்கு நீங்க
ஒழுகுதல் ஒழுங்கு ஒழுங்காய் ஒழுக
ஒழுகிப் பழகும் உருகும் உயிர்
ஒழுகும் அழகு உணர்வார் யார்..?
ஒழுக்க நெறி ஓங்கும் இடம்
ஒழுகும் ஒழுக்கில் விரியும் உலகம்
ஒப்பிலா தொரு ஒழுக்க விதி
உவப்புடன் தந்தான் ஊருக்கு ஒருமுனி.
ஒழுக்கில் ஒருகுடியாய் உருவாகி ஒழுக
பழக மறந்த பழங்குடி நாம்.
ஒழுக்கம் விழுப்பம் தரலாம் விழுந்தவன்
எழலாம் எழாமலும் தொழலாம் தொழுதவன்
ஒழுங்கை ஊர்ப் பேசும் ஒழுங்கு.
மனதில் மலர்ந்த புனிதம் அது
பூத்திருக்கும் உயிர்ப்பின் பொன்மலர்
உழலும் உயிர்களின் புல்லாங்குழல் அது.
எல்லோர்க்கும் பொதுவாம் ஒழுக்க நெறி
ஒழுகிப் பாருங்கள் ஒழுக்கம் புரியும்.
இழுக்கிலா ஒழுக்கே உயர்வு புரி.
அழுக்கிலா மனம் ஆடை கலையலாம்.
6 comments:
//எல்லோர்க்கும் பொதுவாம் ஒழுக்க நெறி
ஒழுகிப் பாருங்கள் ஒழுக்கம் புரியும்.
இழுக்கிலா ஒழுக்கே உயர்வு புரி.//
அருமையான வரிகள்.. பகிர்தலுக்கு நன்றிங்க :)
அழுக்கில்லா மனம்
ஒழுக்கநெறி பேணும்..! :)
//
ஒழுக்க நெறி ஓங்கும் இடம்
ஒழுகும் ஒழுக்கில் விரியும் உலகம்
ஒப்பிலா தொரு ஒழுக்க விதி
உவப்புடன் தந்தான் ஊருக்கு ஒருமுனி.
//
அருமையான வரிகள்
நல்ல கவிதை நண்பா
//எல்லோர்க்கும் பொதுவாம் ஒழுக்க நெறி
ஒழுகிப் பாருங்கள் ஒழுக்கம் புரியும்.
இழுக்கிலா ஒழுக்கே உயர்வு புரி.
அழுக்கிலா மனம் ஆடை கலையலாம். //
ஒழுக்கம் உயிரினும் மேலானதே... வாழ்த்துக்கள்
அருமை.
Post a Comment