Monday, November 15, 2010

"பூங்குழலி...!!"


புலரும் பொழுதுகளில்
எனக்கான உன் ஏக்கங்கள்...!
சுவாசத் தவிப்பில்...உன்னை
சுவீ கரிக்கும் என் தழுவல்கள்.....! 
என் வருகை உணரும்
உன் சுவாச சுகந்தம்...!
 
இடைவெளி விட்டுத்
தொடரும் என் நாகரீகம்...!
இடைத்தொட்டு நகரும்
உன் நயன நளினங்கள்...!
 
அடிக்கடி அணைக்கத் துடிக்கும்
ஆதூர விழிகிளில் பரவசம்....!
குறுகுறு பார்வைப் புரிந்தும்
விறுவிறு வென மென்நடை...!
 
தீண்டலில் தலை சாய்க்கும்....
பயிர்களின் நர்த்தனத்தில்....
தெரியும் உந்தன் ஒய்யாரம்....!
பாத்திகளில் நடை பயிலும்
பாதக் கொலுசுக்கு...
தலை சாய்க்கும் "தாலாட்டு"...!
 
அயர்ச்சி நீக்கும்...உன்
ஆயாச வருகைக்காய்...!
வாலிப வயோதிக அணிவகுப்பு...
சாலைகளில் சந்திப்பு...!
 
கலையும் கார்குழலில்
அலையும் உன் கரம் கண்டு
அத்துமீறும் இதயத்துடிப்பு...!
இளைஞர்களின் ஏகாந்தம்...!
கவிஞர்களின் கனவுசிரிப்பு...!
 
உன் வருகைக்கு வந்தனம் சொல்லும்
சன்னல் திறப்புகள்...!
காலத்தின் காயம் ஆற்றும்...
காதல் மருந்து...!
வாராயோ....! என்
முன்னும் பின்னும்.
வருவாயோ....! என்
இடவலம்.
 
வாழ்க்கை சுகந்தம் தந்த
காலங்களில்...
உன் பெயரில்....பேரின்பம்.
"தென்றல்"...!
*******************************

7 comments:

Unknown said...

//இடைவெளி விட்டுத்
தொடரும் என் நாகரீகம்...!//
//குறுகுறு பார்வைப் புரிந்தும்
விறுவிறு வென மென்நடை...!//
//என்
இடவலம்.//
nice lines.

தினேஷ்குமார் said...

கவிதை நல்லாருக்கு தோழரே

வாராயோ....! என்
முன்னும் பின்னும்.
வருவாயோ....! என்
இடவலம்.

வருவாள் வளம் வருவாள் இடம்பெருவாள் தங்கள் இடவலம் பூங்குழலி........

கமலேஷ் said...

கவிதை நல்லாருக்கு தோழரே

ஹேமா said...

வார்த்தைகள் ஜாலம் செய்யும் விதமே அருமை !

செல்வா said...

//இடைவெளி விட்டுத்
தொடரும் என் நாகரீகம்...!
இடைத்தொட்டு நகரும்
உன் நயன நளினங்கள்...!//

இந்த வரிகள் உண்மைலேயே அருமையா இருக்கு அண்ணா ..!!

எஸ்.கே said...

தென்றல்! மிக அருமை!

Unknown said...

வார்த்தைத் தேர்வுகள்...அருமை.