
கனவு காரிகையின்
நினைவுத் தூரிகை
அவிழ்ந்து விழும் போதினில்
கல்லடிபட்ட தேன்கூடாய்....
கலங்கிப் போகிறது மனம்.
கல்லெறிந்தவனை துரத்தும்
தேனீக் கூட்டமாய் அவளைத்
துரத்தும் எண்ணத்தேனீக்கள்..!
தொலைதூரம் துரத்தியும்....
தோல்வியாய் திரும்பி....
சிந்தனைத் தேன்கூட்டைக்
கொட்டித் தீர்க்கும் .....
எண்ணத் தேனீக்கள்..!
என்ன தேனீக்கள்..?
கல்லடிபட்டு
கசிந்தொழுகும்....
சிறுசிறு தேன் துளியாய்....
அவளின் எண்ணத் துளிகள்...
இதமாய்.....!!
சிந்தனைகள் சுகமாய்...!!!
தடாகத்தில் விழுந்த விண்கல்லாய்
இதயத் தடாகத்தில் எழுந்த
எண்ண அழுத்தங்களால்.....
எழுந்து தெறிக்கும்
சிந்தனை சிதறல்கள்....!
காண்போரின் கண்ணுக்கு
கவிதை வரிகள்...!!
1 comment:
கல்லடிபட்டு
கசிந்தொழுகும்....
சிறுசிறு தேன் துளியாய்....
அவளின் எண்ணத் துளிகள்...
இதமாய்.....!!
சிந்தனைகள் சுகமாய்...!!!
...... sweet memories! :-)
Post a Comment