Tuesday, September 28, 2010

"சதி....!!"


உரத்துப் பேசும் என் உறவே...
கனத்துப்
பேசினாலும்., கனைத்துப் பேசினாலும்
சாகடிக்கப்
பட்ட சத்தியம் சாகாது
உள்ளிருந்து
உறுத்தும் உண்மை உணராது.....

உன்
கட்டை வேகாது....., உள்ளேக்
கசியும்
ஈர நினைவுகள் காயும் உன்
கருவிழிக்கு
மருந்தாகும் என் காதல்
சிந்தும்
கண்ணீர்...!! சத்தியம் சாகாது.

ஊர்த்
திட்டும், உன் அப்பன் திட்டும்
வாய்
மட்டும் பேசிய நீ..., முற்றும்
மறந்தனை
வாழ்வூட்டும் நம் காதல்.
எண்ணுந்
தோறும் நெஞ்சம் முட்டும்....

எண்ணக்
குமுறல் நுமக் கில்லையோ
எம்போல்
...!!! தாவணி தாண்டி சேலையாய்
வாழ்வை
வார்த்தெடுக்க எப்படி முடிந்தது..?
சாவடி
... சுற்றித் திரிந்தேன் நானடி.

யாரடி
உன் மனம் கலைத்தாரடி..?
குலைத்தார்
நம் குலம், குடும்பம்,
நிலைத்தார்
"கூனியாய்" நினைவில், சதியால்....
"யாது வளைத்தார்" வையகத்தில் நானறியேன்...?.

3 comments:

வினோ said...

/ எண்ணக் குமுறல் நுமக் கில்லையோ
எம்போல்...!!! /

இருந்திருக்கலாம்,
சொல்ல வாய்ப்பு இருந்திருக்காது

'பரிவை' சே.குமார் said...

ரசித்தேன்...

தமிழ்க்காதலன் said...

நன்றி வினோத் நிலா..,

நன்றி குமார்..,