Wednesday, January 04, 2012

”குருவிக்கூடு..!”

பற்றற பற்றிய பற்றில் பற்றற
முற்றிய முற்றல் முற்றிலா முற்றில்
தொற்றிய தொற்றலாய் தொடரும் பிறவித்
தொற்றில் பதியமிடும் பற்று.
 
விட்டது விட்டு விட்டத்தை விட்டு
விற்றது கற்றது பெற்றது விற்றது
வீட்டின் வீட்டை விட்டு விலகி
கூட்டின் பிடியில் கூடிய குருவி.
கூட்டுக்குள் கூட்டில் கூடுபாயும் கூடிய
கூட்டுக்குள் கூடும் கட்டி கூடுவிட்டு
கூடடையும் கூத்தில் குருவிக்கு குருவி
கூட்டுக்கு கூடு குவியும் பற்று.
காட்டுக்கு காடு இடம் தேடி
காட்டில் ஓர் கட்டில் அமைத்து
காட்டுக்குள் கால்தலை மாற்றி காடடைய
கட்டுக்குள் அடங்காத குருவி காட்டில்.

மாடத்தில் ஏற்றிய மாடவிளக்கு எரிகிறது
மாடம் விட்டு மாடம் விட்டு
மாடங்கள் மாறும் விளக்குகள் மாறவில்லை
மாற்றமிலா சோதியில் ஏற்றிய தீபங்கள்.

3 comments:

மதுரை சரவணன் said...

vaav aruputhamaana kavithai... vaalththukkal

MANO நாஞ்சில் மனோ said...

ரசிக்கும் ரசிக்க வைக்கும் கவிதை அருமை மக்கா...!!!!

Kumar Ganesan said...

அருமை...
பற்றற்ற கவிதை
என்னையும் பற்றியது
தீ போல...