Thursday, January 05, 2012

”சரணாகதி..!”

நூலளந்த மனம் வானளந்த விதம்
தானளந்த தன்னுணர்வில் ஆழும்
நானளந்த மனதின் மகரந்தம் விழும்
பாரளந்த பரமன் பதத்தில்..!
யாரளந்த போதும் மீளாத இடம்
யானளந்த போது மீளக் கண்டேன்
வாலளந்த வாயு புத்திரன் வாள் அளந்த
வான் பரப்பில் வண்ணம் கண்டேன்

இளம்தளிர் தள்ளாட வரும் தளிர்
தானாட தள்ளாடும் குளத்தில் மீனாட
அல்லாடும் மனதில் ஆர்ப்பரிப்பு கொண்டாட
சொல்லோடும் பொருளோடும் திண்டாடும்

முன்னும் பின்னும் மூண்டது யாகம்
முன்னால் பின்னது கண்டது தியாகம்
மூன்றும் ஒன்றில் ஒன்றிய தேகம்
மூவாறு பருவத்து முடங்கிய தாகம்

பாவாற்றில் பாலோடும் பண்ணில் தேனோடும்
மூவாறும் கலந்த வெள்ளம் முன்னாடும்
பாவூறும் உள்ளம் மணக்க வாயூறும்
அமுதம் சுவைக்க சிந்தை தானூறும்

சிவனுள் சீவன் கலக்க....

4 comments:

rajamelaiyur said...

அழகான கவிதை

rajamelaiyur said...

நண்பர்களே உங்களுக்காக :

ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)

Thoduvanam said...

எமையாளும் ஈசன் சிவனுள் சீவன் கலக்க விரும்புகிறேன்.அருமை ..

Kumar Ganesan said...

வார்த்தை விளையாட்டு...
அருமை... உண்மையும் கூட...