Friday, April 1, 2011

"இதயத்துக்குரியவள்...!"


போகாத் துயர் தந்தாய் நீ
போகு முயிர் போகும் வரை
நீங்கா நிழல் நான் உனக்கு
நீடு நல் வளம் காண்.

காடழைத்த சேதி காதில் விழுங்கால்
கண்மணி,- கண்மணி உதிர்க்கட்டும் ஒருதுளி
கடமைக்காய் அன்றி நம் காதலுக்காய்...!
காலம் உடைத்த கலன் மாயும்...

காணலாம் ஞாலன் வகுத்த வுயிர்
வாழ்த்தும் காதல் நின்று வாழ
நின்னை நினைத்த நெஞ்சும் ஆவலில்
தாவி அணைத்தக் கரங்களும் அஞ்சுமோ..?!

மேவித் தழுவும் மேனியில் தீக்கண்டு
மெல்லிய மனம் பாடும் வல்லினம்
கேட்கிறதா என் கண்மணி..! நீர்த்த
வாழ்வில் நீர்க்கு முயிர் தாங்கும்

நின் நினைவுகள் அடைத்து அடைக்காக்கும்
அதிர்வுகள் இன்னொரு சென்மத்துக்கு எனை
அழைக்கும் இரகசியம் பிறவிக்கு பிறவி
பின்பற்றும் நின்னடி, நில்லடி..! எனக்கு

பதில் சொல்லடி..!! பாதிவுயிர் பறித்தவளே...
மீதியை மீதமின்றி பறிக்க மனமன்றி
பாதியில் எனை விட்டு பரிதவிக்க
ஆவியுள் அடங்கி ஆட்டுவிப்பவள் நீ.

 

வாழும் நாளெல்லாம் வாளாயிருக்க யான்
வாழாதிருந்து பழக்கமில்லை...! கேள்,- சித்திரமே
சிந்தனை முழுக்க சிம்மாசனமிட்டு சிறகை
ஓடித்து பறக்க சொல்பவள் நீ.

ஆன்மாவின் அதிர்வுகளில் அலைபாயும் நின்
நினைவுகள் அதிர வைக்கும் பிறவிகள்
அடுத்தடுத்து தொடுக்கும் அம்புகளாய் தொடர்ந்து
இதயம் கிழித்த உதிரம் உனைச்சேரும்..!

விடுக்கும் எண்ணமில்லை எடுக்கும் பிறவிதோரும்
என்னவளே..! இப்போதும் அப்போதும் இனி
எப்போதும் நின்னைத் தொடரும் உறவில்
உயிர்த்திருக்கும் என் காதல்..!,- தனித்தே

 

தவமிருக்கும் உனக்கே வரம் கேட்கும்..!
உதறினும் உதறா உறவிது என்பதறிய
எத்தனை சென்மமோ நானறியேன் இனியவளே...!!
இன்னும் நீ என் இதயத்துக்குரியவள். 

14 comments:

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ் தென்றலை உருக்கி தேன்மழை பொழியுங்க மக்கா பொழியுங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//பதில் சொல்லடி..!! பாதிவுயிர் பறித்தவளே...
மீதியை மீதமின்றி பறிக்க மனமன்றி
பாதியில் எனை விட்டு பரிதவிக்க
ஆவியுள் அடங்கி ஆட்டுவிப்பவள் நீ.//


கவிசதிராடல் அழகோவியம் பாவிக்கிறதே...

MANO நாஞ்சில் மனோ said...

என்கிருந்துய்யா கொட்டுது இவ்வளவும்....!!!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் கவிதை நண்பா..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நின் நினைவுகள் அடைத்து அடைக்காக்கும்
அதிர்வுகள் இன்னொரு சென்மத்துக்கு எனை
அழைக்கும் இரகசியம் பிறவிக்கு பிறவி
பின்பற்றும் நின்னடி,//

...தொட முடியா காதலையும், பிறவி தோறும தொடரும் விதம்... ரொம்ப நல்லா இருக்குங்க.

//விடுக்கும் எண்ணமில்லை எடுக்கும் பிறவிதோரும்
என்னவளே..! இப்போதும் அப்போதும் இனி
எப்போதும் நின்னைத் தொடரும் உறவில்
உயிர்த்திருக்கும் என் காதல்..!,- தனித்தே //

...ஒரு தலைக் காதலும், ஓயாத மன போராட்டமும்... ஹம்ம்ம்ம்.. தொடரட்டும் காதல். :)

உயிர்ப்புடன் உன்னதக் காதல் நிலைக்கட்டும்..... :))

Chitra said...

வாவ்! அருமையான கவிதை.

நிலாமதி said...

தவமிருக்கும் உனக்கே வரம் கேட்கும்..!
உதறினும் உதறா உறவிது என்பதறிய
எத்தனை சென்மமோ நானறியேன் இனியவளே...!!
இன்னும் நீ என் இதயத்துக்குரியவள்.

மிகவும் சோகம் மனதை பிழிந்து செல்கிறது .........மீண்டு வாங்க உங்களுக்காக ஒருவாழ்வு காத்திருகிறது.

அழகுதமிழில் கோர்த்து சொல்லவும் விதம் அழகு

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல கவிதை இது. ஆனால் அதனை ரசிக்க முடியாமல் டெம்ப்ளேட் சிறியதாக இருக்கிறது...

சே.குமார் said...

அருமையான கவிதை.

மதுரை சரவணன் said...

//மேவித் தழுவும் மேனியில் தீக்கண்டு
மெல்லிய மனம் பாடும் வல்லினம்
கேட்கிறதா என் கண்மணி..! நீர்த்த
வாழ்வில் நீர்க்கு முயிர் தாங்கும் //

arumai..vaalththukkal

Meena said...

கவிதை மிகவும் அருமை. அசத்திட்டீங்க !

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்+ சரஸ்வதி விளையாடறாங்கப்பா..

போளூர் தயாநிதி said...

//நின் நினைவுகள் அடைத்து அடைக்காக்கும்
அதிர்வுகள் இன்னொரு சென்மத்துக்கு எனை
அழைக்கும் இரகசியம் பிறவிக்கு பிறவி
பின்பற்றும் நின்னடி,//
கவிதை மிகவும் அருமை

anitaraj said...

arumai tamil