Monday, April 18, 2011

"கலியுகத்துக்குத் திருமணம்"
எனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம்.

               என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் 21 ம் நாள் காலையில் கடலூர் அருகில் உள்ள நெல்லிக்குப்பத்தில் நடைபெற இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கலந்து கொள்ள முடிந்த அத்தனை அன்பு நெஞ்சங்களும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பான ஆசிர்வாதத்தை மணமக்களுக்கு தந்து அவர்களை வாழ்த்துமாறு கேட்கிறேன்.  

 

                  திருமண வாழ்த்து

கரும்புச்சாறில் கற்கண்டு கலந்து இன்பத்தேன்
கலந்து இதமாய் அமுது படைக்க
அன்னவள் வருகிறாள் அன்ன நடையில்
அன்பில் நனைத்து ஆரத்தழுவு தம்பி

உன்னை உலகமென ஒப்படைத்தாள் தன்னை
உவப்புடன் உரிமைக் கொள் உலகறிய
இப்புவியுள் இன்பம் துய்க்க இன்முகம்
முழுதும் புன்னகை ஏந்தும் பொற்கொடிமருத நிலத்து மருக்கொழுந்து அவள்
குறிஞ்சி நிலத்து மானடா நீ
விருந்துக்கா பஞ்சம்,- அரும்பும் ஆசைகள்
துளிர்த்து செழிக்க தோட்டம் இருக்கு

கனிந்த காதல் நம் கலாச்சாரம்
கனியும் கனிச்சாறு ஒழுகும் அன்பில்
நனையும் நீவிர் நாணியும் போவீர்
அன்னையும் பிதாவும் அகமகிழ வாழ்வீர்

பிள்ளையும் பெரும் பேறுகளும் பெறுவீர்
முத்தமிழ் நம் சொத்து முக்கண்ணன்
நம் கடவுள் பிள்ளைப் பேசும்
பிஞ்சுத் தமிழ்க்கேட்டு நெஞ்சு நிறை.குடும்பப் பெருமை குலப் பெருமை
அரும்பும் மொட்டுக்கு பாட்டன் சொத்து
அழியாமல் காத்து வளர்த்து காப்பாற்று
குழந்தையோடு குலப் பெருமை வளமையும்

சங்கத் தமிழ் சங்கு பாலில்
சங்கம மாகட்டும் தாய்ப்பாலும் தாய்மொழியும்
நம் கண்கள் மறந்து விடாதே....
பிறவிப்பயன் பெற்றவனே "சக்தி"யின் கொற்றவனே. 


ஆனந்தக் கடலில் ஆழ்க்காதல் மூழ்கி
அனுபவ முத்தெடுக்க வாழ்க்கை வளம்
அள்ளி நலம் யாவும் வழங்கட்டும்
அன்பனே தம்பி சுகம் காண்பாய்.

ஊராரும் உற்றாரும் போற்ற ஊரில்
மாற்றாரும் மெச்ச இருவரும் இணைந்து
நல்லற மென்னும் இல்லறம் அமைக்க
ஆசீர்வாதங்களுடன் அன்பு அண்ணன்

 
                                                  -தமிழ்க்காதலன்.

16 comments:

MANO நாஞ்சில் மனோ said...

தேன்தமிழ் வாழ்த்து கவிதை.....

MANO நாஞ்சில் மனோ said...

மனமார வாழ்த்துகிறேன் நண்பா....

# கவிதை வீதி # சௌந்தர் said...

எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று சிறப்புற்று வாழ கவிதை வீதி வாழ்த்துகிறது...

# கவிதை வீதி # சௌந்தர் said...

எனது முதலிரவு அனுபவங்கள்...

http://kavithaiveedhi.blogspot.com/2011/04/blog-post_18.html

Chitra said...

அற்புதமான வாழ்த்து. இத்துடன் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் இணைக்கிறேன். என்றும் அன்புடன் ஆசிருடன் சிறந்து இருக்க வாழ்த்துக்கள்!

நிலாமதி said...

இனிய இல்லறம் அமைத்து வளமோடும் நலமோடும் வாழ்க் என் வாழ்த்துகிறேன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

தினேஷ், உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..!

தமிழ் பிரியருக்கு, தமிழ் காதலன் எழுதிய அருமையான வாழ்த்துக்கவிதை...! :-))

//ஊராரும் உற்றாரும் போற்ற ஊரில்
மாற்றாரும் மெச்ச இருவரும் இணைந்து
நல்லற மென்னும் இல்லறம் அமைக்க
ஆசீர்வாதங்களுடன் அன்பு அண்ணன்//

...எல்லா வளங்களும் பெற இறைவனை வேண்டுகிறேன். :)

சே.குமார் said...

அற்புதமான வாழ்த்து. மனமார வாழ்த்துகிறேன் நண்பா.

சி.பி.செந்தில்குமார் said...

தினேஷ்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஹாய்.. உங்க ஃபோன் நெம்பர் குடுங்க... கல்யானத்துக்கு வர அங்கே ரயில் ரூட் இருக்கா? ஈரோடு டூ விழுப்புரம் வர லாமா?

ஜெயசீலன் said...

இதுவரைக்கும் இப்படி ஒரு திருமண வாழ்த்தை படித்ததே இல்லை நண்பா... சூப்பர்ப்...
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுது...
இவ்வளவு நாளா உங்க தளத்துக்கு வராததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்..
வேலைப்பளு... :(

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்... தம்பி தினேஷ் குமாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

--
அன்பின்
ப. ஜெயசீலன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அற்புதமான வாழ்த்துக்கவிதை, எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

கோமாளி செல்வா said...

ரொம்ப அருமையான வாழ்த்து அண்ணா. கவிதைலையே வாழ்த்திட்டீங்க.
அதுவும் அவருக்கும் கவிதை பிடிக்கும் .

தினேஷ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் :-))

போளூர் தயாநிதி said...

//ஊராரும் உற்றாரும் போற்ற ஊரில்
மாற்றாரும் மெச்ச இருவரும் இணைந்து
நல்லற மென்னும் இல்லறம் அமைக்க
ஆசீர்வாதங்களுடன் அன்பு அண்ணன் நன்றாகவே //
செதுக்கு கின்றீர் வார்த்தைகளை நல்ல நண்பனுக்கு வாழ்த்துப்பா பாராட்டுகள் உங்களின் நண்பருக்கு இனிய வாழ்த்துகளுடன்

Meena said...

இனிய திருமண வாழ்த்துக்கள் !

Kayathri said...

உங்கள் தம்பி கொடுத்து வைத்தவர் இப்படி ஒரு வாழ்த்தை பெற...அருமையான வாழ்த்துமடல்..சகோதரரின் திருமண வாழ்க்கை என்றென்றும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...