Wednesday, March 30, 2011

"தமிழினத் துரோகி..."
எனதன்பு தமிழின உணர்வுள்ள தமிழர்களே...! இந்த நூற்றாண்டின் கொடுங்கோலன், தமிழனுக்கெதிரான ஹிட்லர், மனிதசதைத் தின்று தன் இனப் பசியாற்றும் பரதேசி, இரத்தத்தை அருவியாய் ஓடவைத்து இலங்கையை தட்டிப்பறித்து, தமிழனை வாழவொட்டாமல் இனத்தை அழித்த இராட்சசன் இராசபக்சே இப்போது இந்தியா வந்து செல்வது என்பது மாமனார் வீட்டுக்கு வந்து போகும் மருமகன் போல ஆகிவிட்டது. ஒருதேசத்தின் பாரம்பரியமிக்க இனத்தை அழித்தவனை இங்கே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் காங்கிரசும், அதன் தலைவர்களும், நம் இனத்துரோகி என்பது சொல்லாமலே விளங்கும்.
 

காங்கிரஸ் கட்சி எப்போதுமே தென்னகத்தை பின்தங்க வைத்தே பார்த்திருக்கிறது. அதிலும் தமிழன் என்றால் மாற்றாந்தாய் பிள்ளைதான். இந்நிலையில் நாளை திருப்பதிக்கு வர இருக்கும் இரத்தக்காட்டேரி இராசபக்சே வை எதிர்த்து தமிழகத்தில் உணர்வாளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க இதன் மூலம் கோருகிறோம்.


 1,50,000  பேரை போர் என்கிற பெயரில் அரக்கத்தனமாய் கொன்று குவித்த மனித உருவத்தில் உலவும் மிருகம் இராசபக்சே இந்தியாவுக்குள் நுழையக்கூடாது என்கிற நம் எதிர்ப்பை எல்லோரும் இதன் மூலம் தெரிவிப்போம்.
அப்பாவி மக்களையும், பெண்களையும், குழந்தைகளையும், பத்திரிக்கையாளர்களையும் கொன்று குவித்து உலக அரங்கில் இன்று 
தன்னை ஒரு தலைவனாய் காட்டிக்கொள்ளும் கொடுங்கோலன் 
தமிழுக்கும், தமிழனுக்கும் எதிரி என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

*********************************************************************

தமிழகத்தில் தற்போது தேர்தல் சூடுப்பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஆளுக்கு ஆள் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று இலவச மயக்கத்தை மக்கள் முன் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் டீ.வி., மிக்சி, கிரைண்டர், இப்படிப் பட்ட பொருட்கள்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்பது போல் நமது அரசியல்வாதிகள் பேசிவருகிறார்கள்.

எந்த சமூகப் பொருளாதார தொலைநோக்குப் பார்வையும் இவர்களிடம் இல்லை. தலைமுறை முன்னேற்றம், சமூக வளர்ச்சி, தனிமனித வருமானத்தை பெருக்கும் திட்டம் இப்படி எதுவுமே இல்லாமல் ஒருக் கூட்டம் நம்மை தேர்தலில் சந்திக்க வருகிறது.

எண்ணிப்பார்த்து மிகச் சரியாய் செயல்படவேண்டிய தருணமிது. மக்களே மறவாதீர்கள். உங்களின் எதிர்காலம் இவர்களைப் போன்றவர்களிடம் ஒப்படைக்கப் பட்டால் நம் தேசம், நம் நாளையத் தலைமுறை என்னவாகும் என்பதை எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள். தனிமனித தேசியக் கடன் ரூபாய் 3000  லிருந்து இப்போது ரூபாய் 15000  என மாறி இருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள்.

நம் பெயரைச் சொல்லி உலக வங்கியில் கடனை வாங்கி, அந்தப் பணத்தில் நமக்கு இலவசம் தந்து விட்டு, உலக வங்கிக் கடனை நம் தலையில் கட்டிவிட்டு, அவர்கள் வாங்கும் இலஞ்சப் பணத்தையும், சுருட்டும் ஊழல் பணத்தையும் தங்கள் வீட்டுக்கு கொண்டுப் போகும் கூட்டம் உங்களுக்கு எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை என்பதை புரிந்து செயல்படுங்கள்.

படித்தவர்கள் தான் நம் தேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பவர்களாக இருக்கிறார்கள். எந்தக் காரணத்தை சொல்லி நமது வாய்ப்பை நாம் பயன்படுத்தாமல் விட்டாலும், அது யாருக்கு சாதகம் என்பதை எண்ணிப் பாருங்கள். கள்ள ஓட்டுப் போடுவோருக்கு இந்த வாய்ப்பு சாதகம் ஆகா வண்ணம் நமது ஓட்டுரிமையை நாம் பயன்படுத்துவோம். அவசியம் புரிந்து கொண்டு செயல்படுவோம்.

************************************************************************


கவனத்தில் கொள்ளவேண்டியவை.....
************************************** 

* அடிப்படையில் தவறான கொள்கைகளை கொண்டிருக்கும் அமெரிக்கக் கைக்கூலியாக செயல்படும் காங்கிரஸ் கட்சியும், அதன் தவறான அணுகுமுறையின் காரணமாய் ஏற்பட்ட விலைவாசி உயர்வும், மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் மத்திய அரசும்,

* மாநிலப் பிரச்சனைகளுக்காகவோ, மக்கள் தேவைகளுக்காகவோ, மத்திய அரசை அணுகாதவர்கள் தங்களுக்கு வேண்டியப் பதவிகளுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களின் பதவிகளுக்கும், மத்திய அரசிடம் தவம் கிடந்தது....

* காவிரி, முல்லைப்பெரியாறு, ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிப் பிரச்சனை பற்றிப் பேசாதவர்கள், காங்கிரஸ் கூட்டணிப் பற்றி பேச நாள் கணக்கில் காத்திருந்து, தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, தங்கள் சொத்துக்களையும், தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அமைக்கப் பட்ட சுயநல கூட்டணி....

* மின்சாரத் தேவைக்கும், உற்பத்திக்கும் இருக்கும் இடைவெளி நீண்டுக் கொண்டே போகும் நிலையில் அது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், நடவடிக்கை எடுக்காமல், இலவச மின்சாரம் தருவதாக சொல்வதும், இலவச மின்சாரப் பொருட்கள் தருவதும், அதன் மூலம் இன்னும் மின்சார பற்றாகுறையை அதிகப் படுத்துவதும்....


* மகன்களுக்கும், மகள்களுக்கும், பதவி கிடைக்க எல்லாவற்றையும் துறந்து விட்டு மக்கள் முன்பு உத்தமர்களைப் போல பேசுவது, திரைமறைவு மிரட்டல்கள், தில்லுமுல்லுகள்.....

*  மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் மனதைரியம் இல்லாத களவாணிகள். அவர்களின் உயிர்களில் விளையாடி தங்களின் பதவிகளை தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கும் இவர்களுக்கு ஒருப் பாடம் புகட்டுவோம்... 
* அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டிய கல்வித் துறையை, தனியாருக்கு தாரை வார்த்தது, அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு கல்லூரித் துவங்கி கொள்ளை அடிப்பது, ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப் படும் தேர்வுகளின் முடிவுக்கும், வேலை வாய்ப்புக்கும் எட்டாத தூரத்தில் இங்கே வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
 

* மக்களுக்கு இலவசமாய் தரப்பட வேண்டிய மருத்துவம், வியாபாரமக்கப் பட்டது. அரசு பணியில் இருந்து கொண்டு அங்கே கையெழுத்து மட்டும் போட்டு விட்டு, தனியாக கிளினிக் வைத்துக் கொண்டு கொள்ளை அடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், இலஞ்சம் சரி என்பது போன்ற ஒரு அரசியல், அதிகார அமைப்பைத்தான் நாம் கொண்டிருக்கிறோம்.

* ஏற்கனவே நமக்கு அளிக்கப்பட்ட இலவச கலர் டி.வி., மற்றும் ஒரு ரூபாய் அரிசி ஆகியவற்றால் நமக்கு புதிய கடனாக ரூபாய். 1,00,192  இலட்சம் கோடிகள் உலக வங்கி கடன் நம் மீது விழுந்து இருக்கிறது. புரிந்துக் கொள்ளுங்கள். இலவசமாய் டிவியை மட்டும் கொடுத்து விட்டு, அரசு வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் திட்டம் ரூபாய். 750  கோடியை அப்படியே விரயம் செய்து, திட்டத்தை கிடப்பில் போட்டதன் மூலம் தனியார் கேபிள் இணைப்பின் மூலம் மாதம் ஒன்றுக்கு அவர்களுக்கு போகும் வருமானம் குறைந்தபட்சம் ரூபாய். 300  கோடி, இது நமது அரசாங்கத்துக்கு இழப்பு. இது ஒரு வகையில் அரசாங்கத் துரோகம். புரிந்து செயல்படுங்கள்.

* இன்னும் ஏராளமாய் இருக்கிறது. பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன். சற்றேனும் சிந்தித்து வாக்களிப்போம். தமிழினத்தின் தலைஎழுத்து மாற்றப் படும் என்கிற நம்பிக்கையுடன்...........


மாற்றங்களை எதிர்பார்க்கும் மனதுடன்...
-தமிழ்க்காதலன்.                                

10 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் said...

மாற்றம் வந்தா சந்தோஷம்.. இல்லைன்னா நாட்டுக்கே தோஷம்

MANO நாஞ்சில் மனோ said...

//அடிப்படையில் தவறான கொள்கைகளை கொண்டிருக்கும் அமெரிக்கக் கைக்கூலியாக செயல்படும் காங்கிரஸ் கட்சியும், அதன் தவறான அணுகுமுறையின் காரணமாய் ஏற்பட்ட விலைவாசி உயர்வும், மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் மத்திய அரசும்,//

மக்களே ரோசிச்சி செயல் படுங்கள்....

MANO நாஞ்சில் மனோ said...

//* மகன்களுக்கும், மகள்களுக்கும், பதவி கிடைக்க எல்லாவற்றையும் துறந்து விட்டு மக்கள் முன்பு உத்தமர்களைப் போல பேசுவது, திரைமறைவு மிரட்டல்கள், தில்லுமுல்லுகள்.....//

எல்லாத்தையும் நாங்க பார்த்துட்டுதான் இருக்கோம் கொய்யால...

MANO நாஞ்சில் மனோ said...

கண்டிப்பா மாற்றம் வந்துரும் மக்கா....

கே.ஆர்.பி.செந்தில் said...

ஒரு நீண்ட பெருமூச்சுதான் விடமுடிகிறது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிரிக்கெட் இறுதிபோட்டி பார்க்கவும் ராஜபக்சே வருகிறாராம். மைதானத்திலேயே கருப்புக் கொடி காட்டினால், அதிக பட்ச கவனத்தையும் ஈர்க்க முடியும்.... இதைச் செய்யக் கூடிய சாத்தியம் இருப்ப்வர்களுக்கு இச்செய்தி சென்று சேர வேண்டும்...!

MANO நாஞ்சில் மனோ said...

மும்பையில் கண்டிப்பாக கருப்பு கொடி காட்டப்படும்..

சே.குமார் said...

கண்டிப்பா மாற்றம் வரும்...

தோழி பிரஷா said...

கண்டிப்பா மாற்றம் வரும்...