Tuesday, March 22, 2011

"பொய் பேசும் மெய்.."




உனக்கென்ன என்னவளே..!
உதறிவிட்டாய் என்னை
உதடுகள் உச்சரித்த பொய்களில்...

உருகும் உயிரிடம் யார் சொல்வார்
நீ உரைத்த பொய்யை..?

மனம் ஏற்ற உண்மையை
மறுத்த பெண்மையே..!
மறக்க முடியுமா...
மனதால்..?

நினைக்கவும்...
நினைத்த வேகத்தில்
நினைவுகளில் அணைக்கவும்
நிதம் பிரியப்பட்டவளே..!

முத்தத்தில் அல்லவா
முகிழ்த்தெழுந்தோம்...!
உயிர்சத்தத்தில் அல்லவா
உறைந்துகிடந்தோம்..!

முன்பனிக் காலம்
முடியும்வரை...
விடியும்வரை...
பேசிய இரவுகள்
பொய்யாமோ...?!

கொட்டும் பனிக்கும்
வாட்டும் குளிருக்கும்
மௌனத்தைப் போர்த்திய
மரத்தடியில்....
எத்தனை இரவுகள்....?

எத்தனை இரவுகள்...
நின்றபடி பேசி...
நெடுமூச்செரிந்து 
சென்ற பொழுதுகளில்...
சொக்கி நிற்கும் மனதுக்கு
யாரடி சொல்வார்..?
இன்று நீ இல்லையென்று...

கள்ளி..! உன் கனிந்த இதயம்
என்னை புறந்தள்ளக் கூடுமோ..?
காணாமல் வாடும் கண்களில்
உந்தன் பிம்பம் என்று விழும்...?

இதயம் கொன்று இன்பம் காண்பது
இயலாத ஒன்று இன்னுயிரே...!
நீ எதையும் செய்ய இயலும்
என்பது பொய்...

உறுத்தும் உணர்வுகளில்
உறக்கம் மறுக்கும் இரவுகள்
உண்மை என்றால்...
உனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு..?  

கல்லாய் இருந்தாலும்
கடவுளாய் இருந்தாலும்
காதலியே உன்னைக் காதலிப்பேன்.

முள்ளாய் இருந்தாலும்
மலராய் இருந்தாலும்
மறுபடி மறுபடி உன்னை நேசிப்பேன்.

காற்றானாலும் உயிர்
ஊற்றானாளும் செந்தமிழே..!
உன்னையே சுவாசிப்பேன்.

இத்தனைக் காலமாய்
தேடிய சொந்தம் நீ...
எங்கே தொலைந்தாய் என்னவளே..?

உயிர்த்திட்ட காதல்
உண்மையென்றால்
உயிர்த்தரிக்கிறேன்...

உரிமையானவளே...!
உன் காதல் பொய்யென்றால்
உயிர்த் துறக்கிறேன்.

34 comments:

சக்தி கல்வி மையம் said...

வலிகள் மிகுந்த கவிதை..

MANO நாஞ்சில் மனோ said...

//முத்தத்தில் அல்லவா
முகிழ்த்தெழுந்தோம்...!
உயிர்சத்தத்தில் அல்லவா
உறைந்துகிடந்தோம்..!//

அருமை அருமை...

MANO நாஞ்சில் மனோ said...

//எத்தனை இரவுகள்...
நின்றபடி பேசி...
நெடுமூச்செரிந்து
சென்ற பொழுதுகளில்...
சொக்கி நிற்கும் மனதுக்கு
யாரடி சொல்வார்..?
இன்று நீ இல்லையென்று...//

ஓ வலி....................

MANO நாஞ்சில் மனோ said...

//முள்ளாய் இருந்தாலும்
மலராய் இருந்தாலும்
மறுபடி மறுபடி உன்னை நேசிப்பேன்///

காதல் காதல் காதல் காதல்......

MANO நாஞ்சில் மனோ said...

//காற்றானாலும் உயிர்
ஊற்றானாளும் செந்தமிழே..!
உன்னையே சுவாசிப்பேன்.//

அசத்தல் அசத்தல் மக்கா.....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல் கவிதை...
வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

நல்லாருக்கு நண்பா

எஸ்.கே said...

//முள்ளாய் இருந்தாலும்
மலராய் இருந்தாலும்
மறுபடி மறுபடி உன்னை நேசிப்பேன்.
//

உண்மையான அன்பின் வெளிப்பாடு!

Kousalya Raj said...

ஆரம்பத்தில் இருந்தது இறுதிவரை காதல் மட்டுமே முழுதாய் ஆக்கிரமித்து இருக்கிறது. அற்புதம் !

'பரிவை' சே.குமார் said...

//மனம் ஏற்ற உண்மையை
மறுத்த பெண்மையே..!
மறக்க முடியுமா...
மனதால்..?//


//முத்தத்தில் அல்லவா
முகிழ்த்தெழுந்தோம்...!
உயிர்சத்தத்தில் அல்லவா
உறைந்துகிடந்தோம்..!//


//கொட்டும் பனிக்கும்
வாட்டும் குளிருக்கும்
மௌனத்தைப் போர்த்திய
மரத்தடியில்....
எத்தனை இரவுகள்....?//

//உறுத்தும் உணர்வுகளில்
உறக்கம் மறுக்கும் இரவுகள்
உண்மை என்றால்...
உனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு..? //

//கல்லாய் இருந்தாலும்
கடவுளாய் இருந்தாலும்
காதலியே உன்னைக் காதலிப்பேன்.//

//முள்ளாய் இருந்தாலும்
மலராய் இருந்தாலும்
மறுபடி மறுபடி உன்னை நேசிப்பேன்.//

காதலில் விழுந்து... விழுந்து... கரைந்து விட்டாயா நண்பா...?
உயிர் வாங்கும் வரிகளில் உயிர் வலி சொல்லியிருக்கிறாய்..
மேலே கோடிட்டவை எல்லாம் என் மனசுக்குள் பதிந்துவிட்ட வரிகள்...
அருமையான் கவிதை கவிஞரே..!

போளூர் தயாநிதி said...

//உனக்கென்ன என்னவளே..!
உதறிவிட்டாய் என்னை
உதடுகள் உச்சரித்த பொய்களில்...//
வலி....................

போளூர் தயாநிதி said...

//மனம் ஏற்ற உண்மையை
மறுத்த பெண்மையே..!
மறக்க முடியுமா...
மனதால்..?//
அசத்தல் அசத்தல் .....

போளூர் தயாநிதி said...

//உரிமையானவளே...!
உன் காதல் பொய்யென்றால்
உயிர்த் துறக்கிறேன்.//
காதல் காதல் காதல் காதல்......

Yaathoramani.blogspot.com said...

ஒவ்வொரு வார்த்தையிலும்
உண்ர்வுகள் கொப்பளிக்கும்
மிகச் சிறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நிலாமதி said...

கவித்துவ உணர்வுகளால் மிளிர்கிறது. கவிதை .....அழகான் சொல்லாடல். பாராட்டுக்கள்.

Prabu Krishna said...

வார்த்தைகளின் விளையாட்டில் கவிதையை மனதும் காதல் செய்கிறது.

தமிழ்க்காதலன் said...

வாங்க கருன். உங்களின் முதல் வருகை எமக்கு உவகை. எப்போதும் தொடர்ந்திருங்கள்.நன்றி.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு அருமை தோழர் மனோ, வாங்க. உங்களின் கருத்து மழையில் இதயம் முழுக்க இதமாய் நனைகிறேன். எத்தனை அன்புடன் எம்மை செதுக்குகிறீர். மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க கவிதை வீதி சௌந்தர், வணக்கம். உங்களின் இனிய வருகைக்கும், இதமான கருத்துக்கும் என் நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க சி.பி.செந்தில், வணக்கம். நலமா..? உங்களின் அன்பு வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க அருமை நண்பன் எஸ்.கே, உங்களின் தொடர்ந்த வருகைக்கும், நிறைந்த வாசிப்புக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க கௌசல்யா, வணக்கம். நலமா..? உங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க மனசு தோழா, மனசு குமாருக்கு என் அன்பு நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க போளூர் தயாநிதி, வணக்கம். உங்களின் நீண்ட இடைவெளிக்குப் பின்னான வருகை எமக்கு மகிழ்வு தருகிறது. தொடருங்கள். நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க ரமணி, வணக்கம். முதன்முறையாய் வருகைத் தந்து எம்மை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க நிலாமதி, தங்களின் வருகையும், கருத்தும் எமக்கு ஊக்கம் தருகின்றன. உங்களின் தொடர் வருகையை எதிர்ப்பார்க்கிறேன்.

வாருங்கள்.

செல்வா said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா. புரிஞ்சும் இருக்கு.
காதலின் வலி தெரிகிறது. மூணு தடவை படிச்சேன்.
வார்த்தைகள் மேலும் மேலும் படிக்கத் தூண்டுகின்றன.
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிறைந்திருக்கும் பின்னூட்டங்களை பார்த்து மகிழ்கிறேன் நண்பா... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

காதல் மென்சோகம் என்றாலே கலக்கிவிடுகிறீர்களே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முன்பனிக் காலம்
முடியும்வரை...
விடியும்வரை...
பேசிய இரவுகள்
பொய்யாமோ...?!////////

அருமையான சொல்லாடல்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////உறுத்தும் உணர்வுகளில்
உறக்கம் மறுக்கும் இரவுகள்
உண்மை என்றால்...
உனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு..? //////

காதலோடு எதுகை விளையாடி உணர்வுகளை அள்ளுகிறது............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///உயிர்த்திட்ட காதல்
உண்மையென்றால்
உயிர்த்தரிக்கிறேன்...

உரிமையானவளே...!
உன் காதல் பொய்யென்றால்
உயிர்த் துறக்கிறேன்.////////

கவிதையின் உச்சம்..............

தமிழ்க்காதலன் said...

அன்பு தம்பி செல்வா, வாடா, உன் சந்தோசம் எனக்கு சந்தோசமளிக்கிறது. உன் அன்புக்கு நன்றி. தொடர்ந்து வா.

தமிழ்க்காதலன் said...

என் மதிப்பிற்குறிய நண்பர் ராம்சாமிக்கு, வாங்க. உங்கள் வருகையும், கருத்துகளும் எமக்கு தந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.