சுழலும் எண்ணங்கள் யாவும் உன்னை
சுற்றும் இரகசியம் நீயறிவாய் மலரே
கழலும் எண்ணம் உன்னில் கண்டேன்
உழலும் நெஞ்சம் உனக்கெப்படி புரியும்..?
இனியேனும் இனியவளே
உன்னை மறக்காத என் மனதை
உதற முயல்கிறேன்.
மனம் மாறாது என்றால்
மறுபிறவிக்கு என்னை
மாற்ற முயல்கிறேன்.
எத்தனை முயன்றென்ன..?
அத்தனையும் நீயாகவே
ஆனப் பின்பு.....
இந்த பெருவெளியில் நான்
தனித்திருக்க விடு...
தொடராதே....
உறவுகளை துண்டித்து
உணர்வுகளை தண்டிக்கத் தெரிந்தவளே...!
உன் நினைவுகளை மட்டும்
ஏனடி விட்டு வைத்தாய்...?
எங்கு அலைந்தும்
எப்படி கலைந்தும்
என்னில் நிறைந்த உன்னை
தொலைக்க முடியாமல்
தொலைந்துபோகிறேன்...!
பிரிந்துப் போனவளே...
பிரியங்களையும்...
அழித்துப் போ..!
கட்டுரைத்தக் காதல்
விட்டகன்ற வித்தகியே...!
விலகல் விதியல்ல...
விதியும் அதுவல்ல...!
விளிம்பின் மையம்
வெளியில் இல்லையடி..!
புறத்தே இருந்து அகம்
புகுந்து புலம்ப வைத்தவளே..!
புரிந்துகொள்.
பிரபஞ்சம் முழுக்க பிரிந்தாலும்
பிரியமானவளே..! உன்னைப் பிரியேன்.
தனித்த ஒரு தவம்
வரமா...? சாபமா...?
பலாக்கனியாய் உன்னை மாற்றி
பகடையாடுகிறாய்...
என்னை.
சுற்றும் இரகசியம் நீயறிவாய் மலரே
கழலும் எண்ணம் உன்னில் கண்டேன்
உழலும் நெஞ்சம் உனக்கெப்படி புரியும்..?
இனியேனும் இனியவளே
உன்னை மறக்காத என் மனதை
உதற முயல்கிறேன்.
மனம் மாறாது என்றால்
மறுபிறவிக்கு என்னை
மாற்ற முயல்கிறேன்.
எத்தனை முயன்றென்ன..?
அத்தனையும் நீயாகவே
ஆனப் பின்பு.....
இந்த பெருவெளியில் நான்
தனித்திருக்க விடு...
தொடராதே....
உறவுகளை துண்டித்து
உணர்வுகளை தண்டிக்கத் தெரிந்தவளே...!
உன் நினைவுகளை மட்டும்
ஏனடி விட்டு வைத்தாய்...?
எங்கு அலைந்தும்
எப்படி கலைந்தும்
என்னில் நிறைந்த உன்னை
தொலைக்க முடியாமல்
தொலைந்துபோகிறேன்...!
பிரிந்துப் போனவளே...
பிரியங்களையும்...
அழித்துப் போ..!
கட்டுரைத்தக் காதல்
விட்டகன்ற வித்தகியே...!
விலகல் விதியல்ல...
விதியும் அதுவல்ல...!
விளிம்பின் மையம்
வெளியில் இல்லையடி..!
புறத்தே இருந்து அகம்
புகுந்து புலம்ப வைத்தவளே..!
புரிந்துகொள்.
பிரபஞ்சம் முழுக்க பிரிந்தாலும்
பிரியமானவளே..! உன்னைப் பிரியேன்.
தனித்த ஒரு தவம்
வரமா...? சாபமா...?
பலாக்கனியாய் உன்னை மாற்றி
பகடையாடுகிறாய்...
என்னை.
முள்ளின் மீதுதான் பயணம்
முழுதும் உன்வாசம் நுகர்ந்தபடி..
உன்னை கிழிக்க மனம் இல்லை.
காத்திருக்கிறேன்.
நீ வெடிக்கும் வரை....
உன்னை கிழிக்க மனம் இல்லை.
காத்திருக்கிறேன்.
நீ வெடிக்கும் வரை....
16 comments:
//தனித்த ஒரு தவம்
வரமா...? சாபமா...?
பலாக்கனியாய் உன்னை மாற்றி
பகடையாடுகிறாய்...
என்னை.//
தேன் தமிழ் கவிதை பகடை ஆட்டம் அருவியாக....
//முள்ளின் மீதுதான் பயணம்
முழுதும் உன்வாசம் நுகர்ந்தபடி..
உன்னை கிழிக்க மனம் இல்லை.//
காதல் காதல் ரசம் சொட்டுது மக்கா....
அபிராமி அபிராமி......
>>இந்த பெருவெளியில் நான்
தனித்திருக்க விடு...
இந்த பெருவெளியில் என்னைத்
தனித்திருக்க விடு...
>>பலாக்கனியாய் உன்னை மாற்றி
பகடையாடுகிறாய்...
ஆஹா சுவையான கற்பனை
///
எங்கு அலைந்தும்
எப்படி கலைந்தும்
என்னில் நிறைந்த உன்னை
தொலைக்க முடியாமல்
தொலைந்துபோகிறேன்...!///
உச் கொட்ட வைக்கும் வரிகள்..
சூப்பர் கவிதை..
வாழ்த்துக்கள்..
அருமையான கவிதை..ஆழமான வரிகள்...உணர்வின் வெளிப்பாடு..
அருமையான கவிதை... வரிகள் ஒவ்வொன்றும் அழகு.
//கட்டுரைத்தக் காதல்
விட்டகன்ற வித்தகியே...!
விலகல் விதியல்ல...
விதியும் அதுவல்ல...!//
அட போட வைக்கும் வார்த்தைகோர்ப்பு
காதல் இன்பத்தை மட்டுமல்ல துன்பத்தையும் சேர்த்தே தருகிறது..!
//எங்கு அலைந்தும்
எப்படி கலைந்தும்
என்னில் நிறைந்த உன்னை
தொலைக்க முடியாமல்
தொலைந்துபோகிறேன்...!//
Super! :-)
இந்த கவிதையில் ஒரு திரைப்பாடல் வடிவம் இருக்கிறது..
உங்களை கவிஞ்சனாக்கி புலம்ப வைத்த அவள் தந்த வரமா சாபமா?
வாங்க மனோ, வணக்கம். உங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க சி.பி.செந்தில், வணக்கம். உங்கள் கருத்துக்கு நன்றி. தொடருங்கள்.
வாங்க கவிதை வீதி சௌந்தர், அன்பான உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் தொடர்ந்து தாருங்கள்.
வாங்க படைப்பாளி, உங்கள் வருகை எமக்கு உவகைத் தருகிறது. மிக்க நன்றி. தொடருங்கள்.
Post a Comment