Thursday, March 24, 2011

"காத்திருக்கிறேன்..."


கனவென்றால் கண் விழிக்க மறையும்
உணர்வென்றால் உறங்கும் போது மறையும்
நினைவென்றால் மறக்கும் போது மறையும்
உயிரென்றால் உடல் பிரிய மறையும்

காதலே நீ எப்போது மறைவாய் ...?

இருக்கும் வரை நீ இருக்கிறாய்
இறந்த பின்னும் இருக்கிறாய்
நீ மட்டும்...!

நீ அவள் வருகைக்கு முன் வந்தாய்
நீ வந்தபின் அவள் வந்தாள்
நீ இருக்கும்போதே அவள் இருந்தால்
நீ இருக்கிறாய்...! அவள் இல்லை..?

அவளிடம் சொல்..
அல்லது
அவளிடம் செல்.

இருவரும் இல்லாத வாழ்வு
நரகம் என்று...

என்ன நினைக்கிறாள் அவள்..?
என்னை தொலைத்து
தன்னையும் தொலைத்து  
எதைத் தேடுகிறாள்..?

போகாத ஊருக்கு வழி எதற்கு..?
பொய்யாக ஒரு நடிப்பெதற்கு..?
செய்யாத சிலைக்கு விலை எதற்கு..?
பிறக்காத பிள்ளைக்கு பெயர் எதற்கு..?

இன்னும் இனிக்கிறது அவள் குரல்...
மனதில் ரீங்காரமாய்...
இன்னும் இருக்கிறது அவள் நினைவு
மனதில் பசுமையாய்...
இன்னும் வலிக்கிறது அவள் காதல்
உயிரில் உறைபனியாய்...

அவள் பாத்திரம் அறியாமல் நடிக்கிறாள்.
அவள் பாத்திரம் புரிந்ததால் துடிக்கிறேன்.
நடக்கும் நாடகத்தில்...
நான் நடிகனா..? இரசிகனா..?
நானறியேன்.

விடியும் வரை பொறுத்திருந்தால்
முடிவு தெரியுமென்றால்..?
காத்திருக்கலாம்...
இந்த நாடகம்
வாழ்க்கை...!?
முடியும் வரை...
காத்திருக்க சொல்கிறது.
..............................
..............................
..............................

காத்திருக்கிறேன்...






32 comments:

Unknown said...

படங்களும். கவிதையும் அசத்தல்

Kousalya Raj said...

காதலில் காத்திருப்பதை இதை விட தெளிவா விளக்கமுடியாது ரமேஷ்.

சரமாரியான கேள்விகளால் ஸ்தம்பித்து போய் நிற்கிறது காதல்...!

நாடகம் முடிந்துவிட்டால் இப்படி கவிதை கிடைக்காதே ...தொடரட்டும் கவிதையும் நாடகமும் .....?! :)))

எஸ்.கே said...

வாவ்! அப்படியே படிச்சிகிட்டே வந்து கடைசியில அந்த ‘காத்திருக்கிறேன்...’ அப்படினு முடிக்கிறப்ப, செம ஃபீல் கிடைக்குது!

எஸ்.கே said...

//அவள் பாத்திரம் அறியாமல் நடிக்கிறாள்.
அவள் பாத்திரம் புரிந்ததால் துடிக்கிறேன்.
நடக்கும் நாடகத்தில்...
நான் நடிகனா..? இரசிகனா..?
நானறியேன்.//

வார்த்தைகளில் சூப்பரா விளையாடுறீங்க!

தமிழ்க்காதலன் said...

வாங்க கே.ஆர்.பி செந்தில், வணக்கம். உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க கௌசல்யா, வணக்கம். நலமா..? இந்த வருகைக்கும், அன்பான உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

காதலிக்கிறேன் என்றா நினைக்கிறீர்கள்....

ஹி..ஹி..ஹி..

எனக்கு தெரியாது.

தமிழ்க்காதலன் said...

வாங்க எஸ்.கே, உங்களின் இரசனையை இரசித்தேன். நல்ல கருத்தை தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

Prabu Krishna said...

முதல் படமே மிகவும் அருமைங்க. ஹையோ ஒவ்வொரு வரியும் மிகவும் அருமை.

அதுவும் இது

//நீ அவள் வருகைக்கு முன் வந்தாய்
நீ வந்தபின் அவள் வந்தாள்
நீ இருக்கும்போதே அவள் இருந்தால்
நீ இருக்கிறாய்...! அவள் இல்லை..?//

சான்ஸே இல்லைங்க.

Yaathoramani.blogspot.com said...

எப்படி இவ்வளவு தெளிவாக
உணர்வுகளைப் படைப்பாக்கித் தரமுடிகிறது
மொழி லாவகத்தால் மட்டும் இது
நிச்சயம் சாத்தியம் இல்லை
பின் எப்படி?
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Chitra said...

இன்னும் இனிக்கிறது அவள் குரல்...
மனதில் ரீங்காரமாய்...
இன்னும் இருக்கிறது அவள் நினைவு
மனதில் பசுமையாய்...
இன்னும் வலிக்கிறது அவள் காதல்
உயிரில் உறைபனியாய்...



.......மிகவும் ரசித்து வாசித்தேன்... கவிதைகளில், உணர்வுகளை கொட்டி வெளிப்படுத்த சிலருக்கே முடியும்.

MANO நாஞ்சில் மனோ said...

//இன்னும் இனிக்கிறது அவள் குரல்...
மனதில் ரீங்காரமாய்...
இன்னும் இருக்கிறது அவள் நினைவு
மனதில் பசுமையாய்...
இன்னும் வலிக்கிறது அவள் காதல்
உயிரில் உறைபனியாய்...//

அடடடடா கலக்கல் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//விடியும் வரை பொறுத்திருந்தால்
முடிவு தெரியுமென்றால்..?
காத்திருக்கலாம்...
இந்த நாடகம்
வாழ்க்கை...!?
முடியும் வரை...
காத்திருக்க சொல்கிறது.
..............................
..............................
..............................

காத்திருக்கிறேன்...//

கவிதை வலிக்கவும் செய்கிறது....
தேன் தமிழ் இனிக்கவும் செய்கிறது....
அசத்தல் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//Ramani said...
எப்படி இவ்வளவு தெளிவாக
உணர்வுகளைப் படைப்பாக்கித் தரமுடிகிறது
மொழி லாவகத்தால் மட்டும் இது
நிச்சயம் சாத்தியம் இல்லை
பின் எப்படி?
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

நம்ம குருவே வாழ்த்திட்டார்னா.....அடி தூள்தான்...

MANO நாஞ்சில் மனோ said...

அந்த நிழல் படம் எங்கே சுட்டீர்ய்யா அட்டகாசமா இருக்கு கவிதைக்கு பொருத்தமாக.....

வினோ said...

அருமையா இருக்கு தல.. படங்களும் செம...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. மொத்த கவிதையும் அருமை..

காத்திருக்கும் கணங்கள்..
காதலின் ரணங்கள்..

//இன்னும் வலிக்கிறது அவள் காதல்
உயிரில் உறைபனியாய்...//

ரொம்ப பிடித்தது.. நன்றிங்க :)

ப்ரியமுடன் வசந்த் said...

உங்களுக்கு இலக்கியநடை இலகுவாக வருகிறது

//கனவென்றால் கண் விழிக்க மறையும்
உணர்வென்றால் உறங்கும் போது மறையும்
நினைவென்றால் மறக்கும் போது மறையும்
உயிரென்றால் உடல் பிரிய மறையும் //

முதல் பாராவில் காதலை விளங்கவைத்துவிட்டு அடுத்தவரியிலே கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள்..!

தமிழ்க்காதலன் said...

வாங்க பலே பிரபு, வணக்கம். முதல் முறை வருகைத் தந்து முத்தாய்ப்பான கருத்துகளை வைத்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க ரமணி, வணக்கம். உங்களின் ஒவ்வொரு வருகையும் எமக்கு மகிழ்வைத் தருகின்றன. அருமையான கருத்தை பதித்து கவிதைக்கு சிறப்பு செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

என் அன்பு சகோதரிக்கு, வாங்க. என்ன நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்துள்ளீர்கள். மிக்க சந்தோசம், அக்காள் வருகைக்கும், கருத்துக்கும். தொடருங்கள். நன்றி.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு தோழமைக்கு, (மனோ)இத்தனை அன்பை எப்படித் தாங்குவேன் நண்பரே, உங்கள் வருகையும் சரி, கருத்தும் சரி, இரண்டுமே என்னை புரட்டிப் போடுகின்றன. மிகுந்த உற்சாகம் தரும் வார்த்தைகள்.
தொடருங்கள். மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

அடடா.... யாரது..? என் அன்புக்குறிய இனிக்க நினைக்கும் வினோவா...! அப்பாடா.. எங்கய்யா போனீர்...? இப்போதான் என் நினைவு வந்ததா..? உமது வருகையே எமக்கு சந்தோசம். தொடருங்கள்.

தமிழ்க்காதலன் said...

அன்பு ஆனந்தி, உங்களின் இனிப்பான வருகையும், கனிவான கருத்தும் இனிக்க வைக்கின்றன. உங்களின் தொடர்வருகை எம்மை மெருகேற்றும் என நினைக்கிறேன். நன்றி.

தமிழ்க்காதலன் said...

வாங்க பிரியமுடன் வசந்த், உங்களின் முதல் வருகை மிக சந்தோசம் தருகிறது. நல்ல உணர்வுகளை விதைத்து செல்கிறீர். மிக்க நன்றி. தொடர்ந்து வருகைத் தாருங்கள்.

Thoduvanam said...

ரொம்ப அருமையாய் எழுதி இருக்கீங்க ..வாழ்த்துக்கள்

தமிழ்க்காதலன் said...

வாங்க ஐயா, வணக்கம். நீண்ட இடைவெளிக்குப்பின் வருகிறீர்கள். உங்கள் அன்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

தமிழ்க்காதலன் said...

இந்த பதிவுக்கு வாக்களித்து பிரபலமாக்கிய அன்பு உள்ளங்கள்...

@ இரமேஷ்
@ பனித்துளி சங்கர்
@ தருண்
@ பூபதி
@ பார்வை
@ மரகதம்
@ ஆனந்தி
@ கௌசல்யா
@ பாலா
@ ஜகதீஷ்
@ கோகுலா
@ எஸ்.கே
@ வசந்த
@ கொசு
@ விளம்பி
@ கே.ஆர்.பி.செந்தில்
@ சித்ரா
@ ஈஸி
@ கார்த்தி
@ வினோ

ஆகிய அத்தனை இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

தீபிகா said...

சூப்பரா இருக்குங்க..

'பரிவை' சே.குமார் said...

//இன்னும் இனிக்கிறது அவள் குரல்...
மனதில் ரீங்காரமாய்...
இன்னும் இருக்கிறது அவள் நினைவு
மனதில் பசுமையாய்...
இன்னும் வலிக்கிறது அவள் காதல்
உயிரில் உறைபனியாய்...
//


வாவ்.. மொத்த கவிதையும் அருமை.

தமிழ்க்காதலன் said...

வாங்க தீபிகா, முதல்முறையாய் வருகைத் தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு நண்பா, குமார். பிரபல பதிவரே, வாங்க...
உங்கள் வருகையில் மனம் மகிழ்கிறேன். உங்க அளவுக்கு எழுத முயல்கிறேன்.

Kayathri said...

அவள் வருகைக்கு முன் வந்த காதல் இன்னும் உங்கள் வசமிருக்க..இடையில் வந்து சென்றவளைப் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும்.??

நடக்கும் நாடகத்தில்...
நான் நடிகனா..? இரசிகனா..?
நானறியேன்...பல பேருக்கு விடை தெரியா வினா இது..