Monday, March 21, 2011

"ஒளிந்தக் காதல்..!"


பிரியங்களை பிழிந்து தாகங்கள் தணிந்து
பிணமாக நடக்கவிட்டு ஞானம் பேசி...
இதயத்தை தூக்கிலிட்டு மனிதம் பேசுகிறாய்...!
மறக்கமுடியா நினைவுகளில் மகரந்தம் வீசுகிறாய்...!

கனவல்ல காலம் காட்டிய கோலம்
நிசமல்ல நீ சொன்ன மொழிகள்
உன்னை நிசமென்ற நான் பொய்..!
என்னைப் பொய்யென்ற நீ நிசம்..?

கரைகின்ற வினாடிகளில் உறையும் கண்ணீர்
கல்வெட்டாய் விழுந்த உன் கண்வெட்டுகள்..!
மின்னலாய்த் தாக்கிய உன் எண்ணங்களில்
மீதமின்றி உருகிப்போனது நானும், கனவும்...!

உன்னை மறைக்க என்னை எரிக்கும்
கலையை கற்றவளே...! உருவத்திலா காதல்..?
உள்ளத்தில் உள்ளக் காதலை புதைக்க
பூமியில் இல்லை இடம்,- புரி
யாதவளே...!

மேகம் கொண்டு மூடிவிட கதிரல்ல
காதல்...! உன்னை உடைத்த உண்மைதான்
காதல் என்பது எப்போது உணர்வாய்...?
இருட்டுக்குள் ஒளிந்து கொண்டால் நீ

இல்லையென்று ஆகிவிட மாட்டாய் சகியே..!  
இல்லாததது போல் இருக்கும் உணர்வல்ல...
சொல்லாதது போல் நடிக்க பொய்யல்ல...
புத்துயிர் பெற்ற புனிதமே புரிவாய்....!

நெஞ்சம் நிறைந்தவளே வந்து பார்...
வெந்து தணியும் நெஞ்சம் பார்..!
வெற்றுப் பார்வை ஒன்றை வீசிப்போ...
உற்றுப் பார்த்த என் விழிகளில்...!

14 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவையான காதல் கவிதை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

திரட்டிகளில் இணையுங்கள் நண்பா..

சி.பி.செந்தில்குமார் said...

aahaa ஆஹா

சக்தி கல்வி மையம் said...

தமிழ் தங்களிடம் விளையாடி இருக்கிறது நண்பா...

எஸ்.கே said...

இந்த கவிதை தெளிவா புரியுது!:-)))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மறுபடியும் வந்து ஓட்டு போட்டுட்டேன்..

செல்வா said...

ஐ அண்ணா காதல் கவிதை பிடிச்சிருக்கு ..அதிலும்

//உன்னை மறைக்க என்னை எரிக்கும்
கலையை கற்றவளே...! //

இது ரொம்ப பிடிச்சிருக்கு .. ஆனா இலக்கிய தரமா இருக்கிறதால இரண்டு தடவ படிக்க வேண்டி இருக்கு .. அதுவே உரைநடை கவிதை மாதிரினா ரொம்ப எளிமையா இருக்கும் ..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///கல்வெட்டாய் விழுந்த உன் கண்வெட்டுகள்..!
மின்னலாய்த் தாக்கிய உன் எண்ணங்களில்
மீதமின்றி உருகிப்போனது நானும், கனவும்...!////

....ஹ்ம்ம்ம்.. ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. இவ்ளோ சொல்லிட்டீங்க.. புரிஞ்சிக்குவாங்கன்னு நினைக்கிறேன்.. :-)) வாழ்த்துக்கள்..

தமிழ்க்காதலன் said...

வாங்க கவிதை வீதி சௌந்தர், முதல் முதலாய் வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. தொடருங்கள்....

தமிழ்க்காதலன் said...

வாங்க சி.பி.செந்தில், உங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடருங்கள்...

தமிழ்க்காதலன் said...

வாங்க கருன், உங்களின் தொடர் வருகைக்கும் அடர் வாசிப்பிற்கும் மிக்க நன்றி. தொட்ர்ந்திருங்கள்...

தமிழ்க்காதலன் said...

அன்பு தம்பி செல்வாவுக்கு, கருத்து தந்தமைக்கு நன்றி தம்பி... ஆமா... எப்படி தொடர்ந்து மொக்கையா போட்டுத் தாக்குற... இரகசியம் என்னவோ..?

தமிழ்க்காதலன் said...

வாங்க ஆனந்தி, உங்களின் வருகையும் கருத்தும் நிறைய நிறைவைத் தருகின்றன. தொடருங்கள். நல்ல விசயங்கள் தொடர்ந்து எழுத விரும்புகிறேன். தங்களின் ஆதரவை நல்குங்கள்... நன்றி.

தமிழ்க்காதலன் said...

எனதன்பு எஸ்.கே, வாங்க. நலமா..? உங்களின் புரிதலுக்கு நன்றி. புரியாதவற்றை கேளுங்க... பேசுவோம்..