சட்டத்துள் சட்டம் சகடமிட்டு வட்டத்துள்
வழுத்தி மூட்டும் தீயில் வளரும்
வாழிட மிட்டேகி வழிமாறும் தடம்
வழுக்கி தையல் புதையல் காக்கும்
பூதத்துள் புகுந்து பூதம் பெருகும்
வாதம் மிகும் பானைக்குள் சிலேத்தும
மிகுத்து மிதக்கும் ஒளியின் சுடர்
பற்றும் கொடி முற்றும் படர்ந்து
ஊட்டும் உணர்வுக் கூட்டும் உறவில்
காட்டும் காற்றுக்கு கதவு திறக்கும்
திணை தின்று தினம் விண்டு
மனைக் கோலும் மாண்பில் சுழலும்
வினைக்கு விதி மயங்கும் அழகு
சுனைச் சுருக்கி தனைப் பெருக்கி
காலம் கனிய காத்துழன்று சூனியத்துச்
சுழன்று முடிக்க உடையும் பானை.
10 comments:
அருமையான கவிதை...
வாங்க கருன்... உங்களின் கருத்துக்கு நன்றி.
ஆகா... பிரமாதம்...
நண்பா...
கலையாத காதலில் லயித்து வந்தால் இரகசியப் பயணம் இதமாய் இம்சிக்கிறது...
வரிக்கு வரி தமிழ் வரிந்து கட்டி விளையாடுகிறது...
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.
தினேஷ் கூட சேராதீங்கன்னு அப்பவே சொன்னேனே கேட்டீங்களா அவ்வ்வ்வ்வ்வ் ஒன்னுமே புரியலை....
ஆஹா தமிழ் தமிழ் தமிழ் தேன் தமிழ் பகடை ஆட்டம் எழுத்தில் உருண்டு புரண்டு தேன் பொழியுது.....
வாங்க குமார், உங்களின் அன்பான கருத்துக்கு என் நன்றி. தொடர்ந்திருங்கள்.
வாங்க மனோ, உங்களின் வருகைக்கும் உணர்வுக்கும் நன்றி. தொடர்ந்திருங்கள்.
வார்த்தை நயம் சூப்பரா இருக்கு!
வாங்க அன்பு எஸ்.கே, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment