உன்னைத் துரத்தும் என் நினைவுகளில்
கண்ணை உறுத்தும் தூசாய் உன் உணர்வுகள்
என்னைத் துரத்தத் துவள்கிறேன் என்னவளே
இன்னும் நீ அறியாயோ என்னை...?!
கண்களை விற்று கனவுகள் வாங்கும்
கவிஞன் இன்று உணர்வுகள் விற்று
உயிர்த் தரிக்கிறேன்...! உள்ளத்துள் உள்ள
யாவும் கவிதையில் விதைக்கிறேன், முளைக்குமோ..?!
நெஞ்சக் கூட்டில் நிலைத்தவளே..! நின்னை
வஞ்சி என்பதா..? வஞ்சகி என்பதா..?
நினைவு மஞ்சத்தில் நீங்காதவளே...! நின்னை
கெஞ்சிக் கேட்பேனா..? கொஞ்சிக் குழைவேனா..?
முற்றத்துக் கோலமாய் முற்றுப்புள்ளி வைக்க
முனைந்தவளே..! காதலின் பின்னலில் பிடிபட்ட
உள்ளத்தின் உள்ளுக்குள் சிக்கிக் கிடக்கும்
சீவன்கள் சிந்தும் கண்ணீர்க் காணாயோ...!
உதிரும் இலைகளில் உரம்பெற்று உச்சியில்
உவப்புடன் பூக்கும் பூக்களில் உயிர்த்திருக்கும்
இலைகளின் உயிரதுபோல் காத்திருக்கும் காதல்
பூத்திருக்கும் உன் ஒற்றைப் புன்னகையில்...!
இதயத்து வேர்களில் வெடி வைக்கிறாய்
இனியவளே..! உயிர்க் கிளைகளில் விழுதுகள்
இன்னுமின்னும் ஆழமாய் உன்னைச் சூழ்கின்றன.
விரும்புவது வேர்கள் மட்டுமல்ல விழுதுகளும்....
நடிக்கத் தெரியாதவளே...! நாடக மெதற்கு..?
விழிகள் பேசும் உண்மைக்கு முன்
மொழிகள் பொய்த்துப் போகின்றன,- புனிதமே..!
நம்பவில்லை நீ நவின்றதை நான்.
கண்ணை உறுத்தும் தூசாய் உன் உணர்வுகள்
என்னைத் துரத்தத் துவள்கிறேன் என்னவளே
இன்னும் நீ அறியாயோ என்னை...?!
கண்களை விற்று கனவுகள் வாங்கும்
கவிஞன் இன்று உணர்வுகள் விற்று
உயிர்த் தரிக்கிறேன்...! உள்ளத்துள் உள்ள
யாவும் கவிதையில் விதைக்கிறேன், முளைக்குமோ..?!
நெஞ்சக் கூட்டில் நிலைத்தவளே..! நின்னை
வஞ்சி என்பதா..? வஞ்சகி என்பதா..?
நினைவு மஞ்சத்தில் நீங்காதவளே...! நின்னை
கெஞ்சிக் கேட்பேனா..? கொஞ்சிக் குழைவேனா..?
முற்றத்துக் கோலமாய் முற்றுப்புள்ளி வைக்க
முனைந்தவளே..! காதலின் பின்னலில் பிடிபட்ட
உள்ளத்தின் உள்ளுக்குள் சிக்கிக் கிடக்கும்
சீவன்கள் சிந்தும் கண்ணீர்க் காணாயோ...!
உதிரும் இலைகளில் உரம்பெற்று உச்சியில்
உவப்புடன் பூக்கும் பூக்களில் உயிர்த்திருக்கும்
இலைகளின் உயிரதுபோல் காத்திருக்கும் காதல்
பூத்திருக்கும் உன் ஒற்றைப் புன்னகையில்...!
இதயத்து வேர்களில் வெடி வைக்கிறாய்
இனியவளே..! உயிர்க் கிளைகளில் விழுதுகள்
இன்னுமின்னும் ஆழமாய் உன்னைச் சூழ்கின்றன.
விரும்புவது வேர்கள் மட்டுமல்ல விழுதுகளும்....
நடிக்கத் தெரியாதவளே...! நாடக மெதற்கு..?
விழிகள் பேசும் உண்மைக்கு முன்
மொழிகள் பொய்த்துப் போகின்றன,- புனிதமே..!
நம்பவில்லை நீ நவின்றதை நான்.
சிந்தனைக்குள் சிம்மாசன மிட்டவள் நீ
சிதைக்க நினைப்பது நினைவுத் தேன்கூடு
கொட்டும் உண்மைகளை என் செய்வாய்..?
ஆடைகளில் ஆன்மா அடைகாக்கும் காதல்.
சிதைக்க நினைப்பது நினைவுத் தேன்கூடு
கொட்டும் உண்மைகளை என் செய்வாய்..?
ஆடைகளில் ஆன்மா அடைகாக்கும் காதல்.
குறிப்பு : இங்கே காதலை உணர்ந்தவர்கள் வாக்களியுங்கள். காதலில் கனிந்தவர்கள் கருத்தளியுங்கள்.
19 comments:
//உன்னைத் துரத்தும் என் நினைவுகளில்
கண்ணை உறுத்தும் தூசாய் உன் உணர்வுகள்
என்னைத் துரத்தத் துவள்கிறேன் என்னவளே
இன்னும் நீ அறியாயோ என்னை...?!//
ஹே ஹே தமிழ் காதலன் காதல் குளத்தில் குதிச்சி மீன் பிடிக்க கிளம்பிட்டார்.....
//நெஞ்சக் கூட்டில் நிலைத்தவளே..! நின்னை
வஞ்சி என்பதா..? வஞ்சகி என்பதா..?
நினைவு மஞ்சத்தில் நீங்காதவளே...! நின்னை
கெஞ்சிக் கேட்பேனா..? கொஞ்சிக் குழைவேனா..?//
என் நண்பனுக்கு வஞ்சியாய் இரு என்றும்.
வஞ்சகி ஆனால் வீச்சருவாளோடு நான் வந்துருவேன் சாக்கிரதை....
//உதிரும் இலைகளில் உரம்பெற்று உச்சியில்
உவப்புடன் பூக்கும் பூக்களில் உயிர்த்திருக்கும்
இலைகளின் உயிரதுபோல் காத்திருக்கும் காதல்
பூத்திருக்கும் உன் ஒற்றைப் புன்னகையில்...!//
காத்திருக்கும் காதலின் உயிர்ப்பு அடடா....
//இதயத்து வேர்களில் வெடி வைக்கிறாய்
இனியவளே..! உயிர்க் கிளைகளில் விழுதுகள்
இன்னுமின்னும் ஆழமாய் உன்னைச் சூழ்கின்றன.
விரும்புவது வேர்கள் மட்டுமல்ல விழுதுகளும்....//
கவிதை பாம் போட்ட மாதிரி இருக்கே.....
ஹே ஹே ஹே சும்மா வெடின்னு சொல்றீங்களே எனக்கு அது பாம் மாதிரிதான் தெரியுது.....
//நடிக்கத் தெரியாதவளே...! நாடக மெதற்கு..?
விழிகள் பேசும் உண்மைக்கு முன்
மொழிகள் பொய்த்துப் போகின்றன,- புனிதமே..!
நம்பவில்லை நீ நவின்றதை நான்.//
ஹே அப்போ காதல் சக்சஸசா......
அடி தூள்.....
//சிந்தனைக்குள் சிம்மாசன மிட்டவள் நீ
சிதைக்க நினைப்பது நினைவுத் தேன்கூடு
கொட்டும் உண்மைகளை என் செய்வாய்..?
ஆடைகளில் ஆன்மா அடைகாக்கும் காதல்.//
அப்போ ரூட் கிளியர் ஆகிருச்சி மக்கா....
தேன் சொட்டும்
தேன் சிந்தும்
தேனாறு - இந்த
காதல் கவிதை.....
"அசத்தல் மக்கா"
பருகி மகிழ்ந்தேன்...
////////உதிரும் இலைகளில் உரம்பெற்று உச்சியில்
உவப்புடன் பூக்கும் பூக்களில் உயிர்த்திருக்கும்
இலைகளின் உயிரதுபோல் காத்திருக்கும் காதல்
பூத்திருக்கும் உன் ஒற்றைப் புன்னகையில்...!//////////
அருமையா இருக்கு நண்பா...............!
வாங்க என் அன்பு மனோ, உங்களின் அன்பிற்கும் வருகைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். கவிதையில் காதலியின் முரண்பாடுகள் பேசியிருக்கிறேன் நண்பரே...
மிகவும் ரசித்தேன் நண்பா... கவிதைக்கரு நல்ல சிந்தனை...
காதலில் மூழ்கி விடுவேன் போலவே.....
ரொம்ப அருமை...........
வார்த்தைகளை கையாண்ட விதம் மிகவும் அழகு..........
எமது வலைப்பூவுக்கு முதல் வருகைத் தரும் பலே பிரபு, வாங்க... உங்களின் கருத்துரைக்கும், பின்தொடரலுக்கும் என் நன்றி. தொடர்ந்திருங்கள்...
கவிதையை உணர்ந்து களித்ததினால் கருதிடுகிறேன். :))
//நினைவுத் தேன்கூடு, கொட்டும் உண்மைகளை,
ஆடைகளில் ஆன்மா அடைகாக்கும்// வித்தியாசமாய் வந்து ரசிக்க வைக்கின்றன வார்த்தைகள்.
தொடக்கம் முதல் முடிவு வரை உணர்வுகளின் அற்புத வெளிபாடு...
கவிதை பரவசபடுத்துகிறது.
வாங்க ராம்சாமி அண்ணா, உங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.
வாங்க கௌசல்யா, வணக்கம். நலமா..? உங்கள் கருத்துகள் என்னை மெருகேற்றுகின்றன. நல்ல இரசனையுடன் கருத்துகள் சொல்லும் உங்கள் அன்புக்கு நன்றி.
எமது வலைப்பூவுக்கு முதல் வருகைத் தரும் தீபா செல்வன் அவர்களுக்கு, உங்களின் கருத்துக்கும், பின்தொடரலுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்திருங்கள்.
காதல் ரசம் சொட்டுகிறது கவிதையில்....
(காதலைப் பற்றி ஏதோ கொஞ்சம் தெரிந்தவன் மட்டுமே நான்!:-)))
வாங்க அன்பு நண்பா எஸ்.கே, உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
//உதிரும் இலைகளில் உரம்பெற்று உச்சியில்
உவப்புடன் பூக்கும் பூக்களில் உயிர்த்திருக்கும்
இலைகளின் உயிரதுபோல் காத்திருக்கும் காதல்
பூத்திருக்கும் உன் ஒற்றைப் புன்னகையில்...!//
...என்ன ஒரு ஒப்புமை...!
மொத்தக் காதலையும் விதைத்து,
காதல் நினைவுகளை உரமாக்கி,
காத்திருக்கும் உயிரின் உணர்வை..
ரசித்தேன்..!! :-))
Post a Comment