Thursday, March 03, 2011

"விதியின் நிழல்..!"


ஓ..! என் இயற்கையே...!!

சூழும் சூழல் சுழலில் உழலும்
பாழும் மனம் பதியை வெறுக்கும்
சதியைச் சூழும் சதியில் வெதும்பும்
விதியும் வினையும் கொன்ற உயிர்...!

நனையும் பயிர் தணியும் தாகம்
அணையும் உயிர் தணியும் மோகம்
துணியும் மனம் துறக்கும் பாசம்
அணையும் உடல் அணைக்கும் உயிர்...!
 
















இப்பாழ் பிறவி எப்பாழ் பட்டு 
முப்பாழ் வினை முடிக்கும் தொட்டு
புல்லுறை பனியுறை புனித சீவன்
கதிறுறை சுடரில் காணாமல் போகுமுயிர்...!
  
பூவென்றும் பிஞ்சென்றும் காய்யென்றும் கனியென்றும் 
காணாது காற்றும் காலமும் விதியும் 
மடைதிறக்க பாயும் நதியாய் ஓடி
நடைதளர்ந்து முடியும் வாழ்க்கையற்ற யாக்கை...!
 
 
 தள்ளாடும் பூவில் ததும்பும் தேனைத் 
அள்ளிப் பருக அலையும் சீவனை
அலைகழிக்கும் காலம் காற்றில் ஒழுகும்
துளியில் உயிர்கறைய நடுங்கும் உடல்...!
 
 
குணம் நிறம் மனம் கூடுக்குக்கூடு
மாறும் மாயம் அறிந்திலேன் ஆகின்
மாற்று உபாய மறிந்து மாற்றிடுவேன்
மாறா நினைவில் மாயும் உலகை.

 
நிலையில்லா நினைப்புகளின் அலைக்கழிப்பு - மறதி
நினைத்த ஒன்றில் நிலைத்திருத்தல் - உறுதி        
சதையும் எலும்பும் சாகக் கூடும்
சகத்தி(தீ)யே அகத்துள் வாழும் அன்பு...?

குறிப்பு :  ஒரு படைப்பாளிக்கும் அவனுடைய வாசகனுக்கும் அல்லது வாசகிக்கும் உள்ள உறவு அவர்களின் விமர்சனத்தில் பிறக்கிறது. நீங்களும் ஏன் இருக்க கூடாது ஒரு படைப்பாளியாக...? அல்லது வாசகனாய்.. அல்லது வாசகியாய்.... விமர்சியுங்கள்.... (எழுத்தை மட்டும்..)

வாக்களியுங்கள்....... வாழ்க்கைக்கு.


17 comments:

சக்தி கல்வி மையம் said...

கவிதை , படங்கள் , டெம்பிளேட் மூன்றும் முத்தானவை...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/2.html

எஸ்.கே said...

//இப்பாழ் பிறவி எப்பாழ் பட்டு
முப்பாழ் வினை முடிக்கும் தொட்டு
புல்ளுறை பனியுறை புனித சீவன்
கதிறுறை சுடரில் காணாமல் போகுமுயிர்...!//

வரிகளெல்லாம் அருமை. சில சமயம் சிலவார்த்தைகளின் அர்த்தங்கள் சரிவர புரிவதில்லை. இருப்பினும் அவையும் அழகாகவே உள்ளன படிப்பதற்கு!

Chitra said...

விமர்சிக்கும் அளவுக்கு திறமை இல்லை. ஆனால், வாசித்து ரசிக்க தெரியும். அருமையாக வந்து இருக்கிறது.

தமிழ்க்காதலன் said...

வாங்க கருன், உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

என் அன்பு தோழா, (எஸ்.கே)உங்களின் அன்பும், ஆதரவும் தொடர விரும்புகிறேன்.

தமிழ்க்காதலன் said...

அன்பு அக்கா, உங்களுக்கு திறமையில்லை என சொல்லி என்னை சங்கடபடுத்தி விட்டீர்கள் போங்கள். மாமாவையும் குட்டீசையும் விசாரித்ததாக சொல்லவும்.

ஜீவன்சிவம் said...

அருமையான வரிகள்

மதுரை சரவணன் said...

//இப்பாழ் பிறவி எப்பாழ் பட்டு
முப்பாழ் வினை முடிக்கும் தொட்டு
புல்லுறை பனியுறை புனித சீவன்
கதிறுறை சுடரில் காணாமல் போகுமுயிர்...!//
arumai... vaalththukkal

தமிழ்க்காதலன் said...

வாங்க ஜீவன்சிவம், முதன்முறையாய் வருகை தந்து கருத்துரை தந்தமைக்கு என் நன்றி. தொடர்ந்திருங்கள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க மதுரை சரவணன், நீங்களும் முதன்முறை வருகை தந்துள்ளீர்கள். உங்களை அன்புடன் வரவேற்று உங்களின் கருத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

தள்ளாடும் பூவில் ததும்பும் தேனைத்
அள்ளிப் பருக அலையும் சீவனை
அலைகழிக்கும் காலம் காற்றில் ஒழுகும்
துளியில் உயிர்கறைய நடுங்கும் உடல்//
அருமையான வரிகள்.

தமிழ்க்காதலன் said...

வாங்க இராஜராஜேஸ்வரி, எமது வலைப்பூவுக்கு வருகைத் தந்து உங்களின் கருத்துகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

தொடர்ந்திருங்கள்...

Anonymous said...

மனம் மயக்கும் வரிகள்

'பரிவை' சே.குமார் said...

அருமையான வரிகள்.

Thangarajan said...

கவிதை அருமை. படங்களும் அருமை.சுற்றி இருக்கும் ரோஜா கூட்டம் மேலும் அழகு சேர்க்கிறது.வாழ்த்துக்கள்.

siva said...

எழுத்து,சொல்,பொருள் மூன்றுடன் அழகிய தமிழ் நடை....உங்கள் தமிழ் பாலத்தில் தமிழ் பற்றுடன் கை கோர்க்கிறோம்...தொடருங்கள் தமிழ் தேடல்களை!......

ராஜன் said...

அருமையான வரிகல்