Wednesday, June 16, 2010

இப்படியாக ஓர் கவிஞன்...!?


வறுமை வழி நடத்தும் வாழ்வில்
சில்லரைக்கு சில நேரம் தட்டுப்பாடு ...
தன்மானம் தடுத்ததால்....
யாசிக்க முடியாத தருணங்களில்...
யோசிக்க அரம்பித்து....
யோசித்ததை எழுத ஆரம்பித்து...
வாசிக்க ஆளில்லா காரணத்தால்,
நானே அதை வாசித்து...
கல்லரைக்கு பின்னே மறைந்து
நானே கைதட்டி...
சுய மதிப்பீடு செய்து கொண்ட நேரம்,
என் வாழ்வில் கல்லரை ஒன்று கதவு திறக்க...
கவிதை பிறந்தது.
சிலரது பாராட்டுகளுக்கு பின்பலனாய்...
என் கவிதைக்கும் காசு கிடைத்தது.
காசுகிடைக்க போய் கவிதை
எனக்கு தொழிலானது.!
நான் கவிஞனானேன்..!!
இளமையின் இனிமைகளை.. என்
தனிமை தின்றது.
விடியலில் விழிமூடும் வரை இரவுகளை... என்
நினைவு தின்றது.
கனவு என்பது..?! எனக்கு
கனவாகவே இருந்தது.
என் பசியை..
என் உணர்வு தின்றது.
என் உணர்வை...
என் பசிக் கொன்றது.
சிந்திக்க தொடங்கும் முன்னே...
நான் சந்திக்கும் சங்கதிகள்...
அப்பப்பா...?! எழுதி மாளாது.
எத்தனித்து எழுத தொடங்கும்...போது,
சுரந்துகிடக்கும் உணர்வுகள்...
ஒன்றையொன்று முண்டியடிக்க,
முன்வரிசை... பின்வரிசை
தடுமாற்றம்.
பால் சுரந்தும் கறக்காத காரணத்தால்...
காம்பு வெடித்து துன்புறும் பசுவாய்...நான்.
கவிதை எழுதுவதே என் கவலையானது.
சில நேரங்களில்...என்
கவலையே கவிதையானது.
இனம்பிரிக்க முடியா உணர்வுகள்...
என் கவிதை போலவே அர்த்தமற்றுப் போனது.
தீப்பற்றிய மரத்தின் வேர்களில்...
வெந்நீர் வார்த்ததுப் போல்...
பற்றியெறியும் உணர்வுகளில்...
என் உயிர் உருகும் வேதனை...
எனக்கு வலி.
உனக்கு வார்த்தை.
இழுபறி வாழ்க்கையில்தான்...
எத்தனை...? எத்தனை..??
வழிபறிகள்.

2 comments:

சிவாஜி சங்கர் said...

இதே நிலையில் தான் என்னை வைத்து பார்க்க தோன்றுகிறது..
கவிஞரே..
"உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா..""

சிவாஜி சங்கர் said...

பால் சுரந்தும் கறக்காத காரணத்தால்...
காம்பு வெடித்து துன்புறும் பசுவாய்...நான்.
கவிதை எழுதுவதே என் கவலையானது.

அற்புதம் அருமை....