Tuesday, June 08, 2010

தமிழை மறுக்கும் தமிழ்க் கடவுள்??!


இரக்கமுள்ள தமிழா,
உன் மானத்தோடு விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் பற்றி உன்னோடு பேச வேண்டும். கவனி. நீண்ட நெடுங்காலமாய் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த நம் மண்ணில், நம்முடைய தாய்மொழிக்கு இடம் இல்லை என்கிறது இங்கு வாழ வந்த ஒரு கூட்டம். ஏன்? எதற்கு? என்று கூட தெரியாமல் குடை பிடிக்கிறது இன்னொரு கூட்டம்.
இந்த வார நக்கீரன் வாரப் பத்திரிகையில் ஒரு வருந்த தக்க செய்தி. நம்முடைய தமிழ் மொழியின் ஆணி வேர்களாய் இருக்கும் தெய்வப்புலவர் திருவள்ளுவர், இளங்கோவடிகள் , நாயன்மார்கள், திருமூலர் , … இன்னும் இது போன்ற முக்கியமான 100 பேர்களின் திருவுருவ சிலையை தமிழ் மேல் பற்று கொண்ட ஒரு சாரார் ஐம்பொன் சிலைகளாய் செய்து அதை முறைப்படி தமிழில் குடமுழுக்கும் செய்து உள்ளூர் கோவிலில் வைக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட அறநிலைய துறை அமைச்சர் அனுமதித்து , சிலைகளை கோவிலுக்கு கொண்டு போனால் , அங்கே ஒரு சிலர் இதை நாங்கள் வாங்க மாட்டோம் , இங்கே இதை வைக்க கூடாது , என எகத்தாளமாய் ஏகபோகமாய் பேசி இருக்கிறார்கள் , இதற்கு கோவில் அதிகாரியும் குடைப் பிடித்து இருக்கிறார் .
என் சக தமிழா , இதை படிக்கும் போது ராஜராஜசோழன் சிதம்பரத்தில் நிகழ்த்திய அற்புதம்தான் நினைவில் வந்தது . நான் கேட்கிறேன் , அதை கோவிலில் வைக்க கூடாது என சொல்ல அவனுக்கு அதிகாரம் கொடுத்தது யார் ? ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாய் ..! வயிற்றுபிழைப்புக்கு வந்த நீ கிடைத்ததை தின்று கொழுத்தது பத்தாதென்று ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டான் . இறை இதுவென சுட்டிக்காட்ட ஒரு உருவம் தேவைப் படுகிறது என்று ஒரு சிலையை வைக்க முடிகிறபோது , தமிழ் சமூகத்தை வழிநடத்தி செல்லும் பெரியோர்களின் சிலைகளை வைப்பதில் என்ன குறை வந்து விட போகிறது. தமிழில் குடமுழுக்கு செய்த பிறகு அதற்குசமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் செய்யவேண்டிய அவசியம் என்ன? தமிழ் நாட்டில் கோவில் கொண்ட கடவுளுக்கு தமிழ் தெரியாதா ??!!
தமிழில் செய்தால் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கடவுள் மறுப்பு சொன்னாரா ? கடவுளுக்கும் மொழிக்கும் முடிச்சிடவேண்டிய அவசியம் என்ன வந்தது. அவன் மொழி தேவ மொழி என்று அவனே சொல்லிக் கொள்கிறான் . நம்முடைய மொழி பிரபஞ்ச மொழியடா தமிழா. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மொழிகளில் மிகவும் வன்மையான கட்டமைப்பு உடையது நம்முடைய தமிழ். இலக்கணம் இதில் உள்ளது போல் வேறு எதிலும் ஆழம் கிடையாது. அதிக எழுத்துக்கள் கொண்டதும் நம்முடைய மொழியே .
இவனுடைய தேவ பாஷையை கேட்ட கடவுள் யார் ? இவனுடைய மொழிக்கு மறுமொழி சொன்ன கடவுள் யார்?. இவனுடைய மொழியை பேசும் கடவுள் யார் ?. தமிழா ! நான் கடவுளுக்கு எதிரானவன் இல்லை . அதே சமயம் தமிழுக்கும் , தமிழனுக்கும் எதிரான ஒரு கடவுள் தமிழ் நாட்டில் இருப்பானேயானால் அவனை நிச்சயம் எதிர்ப்பேன் . நாம் கொடுக்கும் காணிக்கை, பால், பழம், தேங்காய் , எல்லாம் வைக்க கோவிலில் இடம் இருக்கிறது . கோவில் சொத்தை கொள்ளை அடித்து பதுக்கி வைக்க இவன் வீட்டில் இடம் இருக்கிறது . ஆனால் நம்முடைய பெரியோர்களை வைக்க மட்டும் இடம் இல்லையா ??.
சிந்திக்க வேண்டும் தமிழா ? ஐயன் திருவள்ளுவனுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை
என்றால் , இந்த தேசம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது . தமிழன் என்ன செய்து கொண்டிருக்கிறான் ?. நம் இனத்தை இராணுவத்தால் அழித்த ராஜபக்சே வை விட , இவன் விஷக்கிருமி, “உங்கள் சிலைகளை வைக்க தனியாக கோவில் கட்டிக் கொள்ளுங்கள்என்று சொன்னவன் நாக்கு அறுத்து இருக்க வேண்டாமா ? இவர்கள் எந்த கோவிலை கட்டினார்கள் ?. அப்படி ஏதாவது ஒரு கோவிலை அவர்கள் கட்டி இருந்தால் அதில் போய்வர்களுடைய தேவ பாஷையை ஓதட்டும் . “செவிடன் காதில் சங்காய்இவன் மந்திரத்தை எவன் கேட்டான் .?? எவன் கேட்ப்பான் .??
ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் . குரங்கு கையில் கிடைத்த கொள்ளிக்கட்டை
யாய் இவன் தலையில் கொல்லி வைத்துகொள்ள வேண்டாம் என்று . இனியும் தமிழா பொறுக்காதே , தமிழுக்கும் தமிழனுக்குமான கொடுமைகளை தகர்த்தெறிய தயங்காதே ?
என்றும் நட்புடன் ... தமிழ்க் காதலன்.


No comments: