துருவத்துள் துளிர்க்கும் மொட்டுக்கு பனியின்
பாறைகள் வேர்விடும் நிலம்,- நீருக்குள்
நிலம் தேடும் வேர்களின் பயணம்
பனிப்பாறைத் தகர்க்கும் உளி..!!
குளிர் உறிஞ்சும் இதழ்களில் துளிகள்
மலரின் தாகம் குளிரைக் குடிக்கிறது..!
பனியின் தாக்கத்தில் இதழ்களில் வெடிப்பு
பருவம் பூக்கும் மொட்டுக்கு..!!
ஆளில்லா இடத்து அழகுப் பூக்கிறது
பாலில்லா விடத்துப் பிறந்தக் குழந்தையாய்..!!
இயற்கையை இயற்கை இரசிக்கும் தனிச்சுகம்
இன்பம் உயிரின் வேர்களில்..!
பனி மலைக்குள் பருவப் பெண்
தனியாய் தலைக் கோதும் அழகு
யாருமற்றப் பால்வெளியில் பளிங்குச் சிலை
யாழ் இசைக்கிறது சுகமாய்...!!
வானத்தை வசப்படுத்தும் மௌன மொழி
வசந்தத்தை நினைவுப்படுத்தும் இதழின் ஒளி..!
சுகந்தத்தை வாரி இறைக்கும் மகரந்தம்
வெண்பனியில் விழுந்தக் கவிதை..!!
மலருக்கு மஞ்சள் நீராட்டும் கதிரின்
மாலை ஒளியில் மயங்கும் சுகம்
மன்மதன் இரதி முயங்கும் சுகம்..!!
மறக்க முடியாக் கிறக்கம்...!
இருட்டுவெளி இழுத்துப் போர்த்திய இரவில்
இத்தனைச் சுகம் தந்த புனிதம்
எவர் கைக்கும் கிட்டாமலே கொட்டுகிறது
இதய உதிரத்தை இதழ்களாய்..!!
5 comments:
அருமையான கவிதை
//ஆளில்லா இடத்து அழகுப் பூக்கிறது
பாலில்லா விடத்துப் பிறந்தக் குழந்தையாய்..!!//
நல்ல ஒப்பீடு....மணம் வீசும் பனிமலர்..
"இந்த இரவின் புனிதம் என் கைக்கும் கிட்டாமலேயே"....
வானத்தை வசப்படுத்தும் மௌன மொழி
வசந்தத்தை நினைவுப்படுத்தும் இதழின் ஒளி..!
சுகந்தத்தை வாரி இறைக்கும் மகரந்தம்
வெண்பனியில் விழுந்தக் கவிதை..!!/
நல்ல கவிதை,,
சில வரிகள் புரியல..
வாழ்த்துக்கள்..
பனி மலைக்குள் பருவப் பெண்
தனியாய் தலைக் கோதும் அழகு
யாருமற்றப் பால்வெளியில் பளிங்குச் சிலை
யாழ் இசைக்கிறது சுகமாய்...!!// சிறப்பு சிறப்பு உளம் கனிந்த பாராட்டுகள் நல்ல சிந்தனை நல்ல உவமேயம் சிறப்பான வரிகள் தொடர்க
Post a Comment