Wednesday, October 12, 2011

”உள் ஒளி”






செதுக்கும் வரை பொருத்துக் கொள்
சற்றே பிணமாய் உணர்வற்று இரு
சாந்தம் கொண்ட கல்லென சாய்ந்து கிட
மனிதம் உன் புனிதம் உணரும்.....


மொழிகளை விழுங்கும் மௌனத்தை விழுங்கு
வார்த்தைகளின் சூட்சுமம் உணர்ந்து பேசு
பேச்சைக் குறைத்து மூச்சை நிறை
பேதங்கள் யாவும் புரிந்து விடும்....


அறிவற்ற அறிவை அறி அறிந்தபின்
அதிலேயே நிலைத்து நில் அறிவின்
அறியாமை புலப்பட சிறுமைகள் விலகும்
ஆழ்ந்த உணர்வில் அறிவு புலப்படும்...


குழைந்த மனம் குழைந்தபின் இறுகட்டும்
குறைமதி கொண்ட வாழ்வுக்காய் உருகட்டும்
வளர்மதி வளர வளரும் மதியை கவனி
அறிவெது ஆணவமெது இனம் காண்


உணர்வது யாவும் உண்மை என்றறி
உண்மைகள் தவிர்த்த யாவும் எறி
உள்ளுக்குள் உன்னை உனக்குள் எரி
உயர்ந்த பொருளாய் உலகில் திரி

11 comments:

rajamelaiyur said...

//
அறிவற்ற அறிவை அறி அறிந்தபின்
அதிலேயே நிலைத்து நில் அறிவின்
அறியாமை புலப்பட சிறுமைகள் விலகும்
ஆழ்ந்த உணர்வில் அறிவு புலப்படும்...


//

கலக்கல் வரிகள்

rajamelaiyur said...

//
உணர்வது யாவும் உண்மை என்றறி
உண்மைகள் தவிர்த்த யாவும் எறி
உள்ளுக்குள் உன்னை உனக்குள் எரி
உயர்ந்த பொருளாய் உலகில் திரி
//

வார்த்தைகளில் விளையாடி உள்ளீர்கள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

rajamelaiyur said...

tamilmanam first vote

நாவலந்தீவு said...

உணர்வது யாவும் உண்மை என்றறி
உண்மைகள் தவிர்த்த யாவும் எறி
உள்ளுக்குள் உன்னை உனக்குள் எரி
உயர்ந்த பொருளாய் உலகில் திரி//

அருமை... சிறந்ததொரு கவிதை.

காயத்ரி வைத்தியநாதன் said...

அருமை தோழரே...உங்கள் கவிதையைப் பாராட்டும் அளவு எனக்கு பக்குவமில்லை..எனவே வாசகியாக உங்கள் கவிதையை ரசிக்க மட்டும் செய்கிறேன்.....

Surya Prakash said...

அருமை சிந்திக்க தூண்டிய வரிகள்

Anonymous said...

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..

சீனுவாசன்.கு said...

அட!

vimalanperali said...

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

மாலதி said...

மொழிகளை விழுங்கும் மௌனத்தை விழுங்கு
வார்த்தைகளின் சூட்சுமம் உணர்ந்து பேசு
பேச்சைக் குறைத்து மூச்சை நிறை
பேதங்கள் யாவும் புரிந்து விடும்....// மிகசிறந்த வரிகள் உண்மையில் உணர்ந்து எழுதப் பட்டவையாகும் பாராட்டுகள்