முப்பால் தந்த வுன்னை நிலத்துக்கப்பால் நிறுத்தி வைத்ததேன் தெரியுமா..?நீண்டு கிடக்கும் நீர்ப்பரப்பில் எங்கேனும்நிலம் தெரிந்தால் சொல்லத்தான்...! அங்கேனும்நாம் தமிழ்க் குடில் ஒன்று சமைப்போம்."மா" நிலமாயிருந்த "தமிழ்" இன்றுமாநிலமாய் இருப்பதில் உடன்பாடில்லை.உயிர்களின் தோற்றவாய்க்கு....பன்மொழி கலப்பால் இன்று தொற்றுவாய்.இந்து மாக்கடலில் இடமிருந்தால் இன்னொரு"தமிழ் நாடு" படைப்போம்.
2 comments:
Kavithai Nalla irukkunga Nanba. Thamizhar naadu vendum :)
அந்த தாகம்தான் நண்ப, நம் போன்ற அனைவருக்கும். நன்றி தோழா.
Post a Comment