Wednesday, September 01, 2010

"தமிழ் நாடு..!"


முப்பால் தந்த வுன்னை நிலத்துக்
கப்பால் நிறுத்தி வைத்ததேன் தெரியுமா..?
நீண்டு கிடக்கும் நீர்ப்பரப்பில் எங்கேனும்
நிலம் தெரிந்தால் சொல்லத்தான்...! அங்கேனும்
நாம் தமிழ்க் குடில் ஒன்று சமைப்போம்.
"மா" நிலமாயிருந்த "தமிழ்" இன்று
மாநிலமாய் இருப்பதில் உடன்பாடில்லை.
உயிர்களின் தோற்றவாய்க்கு....
பன்மொழி கலப்பால் இன்று தொற்றுவாய்.
இந்து மாக்கடலில் இடமிருந்தால் இன்னொரு
"தமிழ் நாடு" படைப்போம்.

2 comments:

வினோ said...

Kavithai Nalla irukkunga Nanba. Thamizhar naadu vendum :)

தமிழ்க்காதலன் said...

அந்த தாகம்தான் நண்ப, நம் போன்ற அனைவருக்கும். நன்றி தோழா.